Day 9 of Brahmothsavam would
be hectic ~ morning there is purappadu in ‘Aaal mael pallakku’ –
Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam,
theerthavari – purappadu – evening Pathi ulavuthal – Kannadi pallakku – thirumbukal
– dwaja avarohanam, and more. Today 27th June
2021 would have been day 9 of Sri Azhagiya Singar Aani brahmothsavam.
To describe
it very simply, the game of Cricket is a battle between ‘bat and ball’. Bowlers
hurl (bowl) the cricket ball at the
batsmen trying to dislodge the wicket or get them out in multiple possible
ways, while batters try to hit the ball around for runs ! .. .. …
A cricket
ball is a hard, solid ball, that consists of a cork core wound with string then
a leather cover stitched on. Currently,
the red Dukes cricket ball is used by England, West Indies and Ireland for Test
matches. India tends to prefer the locally-manufactured SG cricket ball while
the other Test-playing nations use the Australian-manufactured Kookaburra ball.
They come in different colours – for
Test matches it is ‘red cherry’ – while in coloured games, it is White – and
then there is the pink ball, which perhaps been the most tested ball in the
history of the game — nine years, to be precise. After a pink Kookaburra ball
was used in a charity match in 2006, the Marylebone Cricket Club (MCC) — the
club recognised as the custodian of the Laws of Cricket — issued a request for
manufacturers to develop a ball that could be used for day/night matches.
Today, 27th
June 2021 (in the night of IST) South Africans are to play West Indies at St.
Georges in T20I no 1178. At Bristol, a
city in South West England, Womens team are playing
ODI. Bristol city lies between Gloucestershire to the north
and Somerset to the south. Indian women
are playing England women in ODI no. 1198.
A combined
eight wickets from Sophie Ecclestone, Anya Shrubsole, Katherine Brunt, and Kate
Cross consigned India to a below-par performance with the bat in the first ODI
against England in Bristol. The visitors made just 201 for 8 after losing the
toss, with Mithali Raj scoring 72 of those.
The short ball was also employed to good effect. Debutant Shafali Verma, at 17 years and 150 days old, became the
youngest player - male or female - to represent India in all formats of the
game, fell to a failed pull while backing away to a Brunt offcutting bouncer.
The over, fifth in the innings, had begun with two Verma fours - one lofted
over mid-off and the other carved behind point - but ended with India losing
their first wicket with just 23 on the board.
After writing a few
paras, I remember that this no Cricket post but a post on Perumal purappadu at
Thiruvallikkeni – the probable day 9 of Sri Azhagiya Singar brahmothsavam. Today but for Corona restrictions, we would
have had darshan of Sri Azhagiya Singar theerthavari in Aani brahmothsavam. - here is something on Uthsavam when ‘the game of ball
throwing’ too is played ! .. that is
–‘mattayadi’.
For Sri Azhagiya singar
‘ mattaiyadi’ – the ‘pranaya kalaham’ arising out of the celestial
bonds between ‘Thayar and Perumal’ with Ubaya Nachimar and Perumal
engrossed in wordy duel occurs at the western gate ie., the rear entrance to
the temple at Thulasingaperumal koil street. .. .. Perumal’s entry
is denied with thayar slamming the doors and later after the intervention of
Swami Nammalwar, Perumal and Ubhayanachimar play exchanging the flower ball –
throws and catches being taken by the battars.
பந்து
சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் திறன் பெற்றிருந்தனர். பல பந்துகளை (அல்லது காய்களை அல்லது பழங்களை) மேலே
தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின்
பந்தாட்டம். (Jugglery).
பெருங்கதை என்னும் தமிழ்நூல் கொங்குவேளிர் என்பவரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிருகத் கதா என்னும் வடமொழி நூலைத் தழுவி இது எழுதப்பட்டது என்பர். இதில் பந்தாட்டப் போட்டி நிகழ்ந்த செய்தி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு பெண்கள் ஒவ்வொருவராக அரங்கில் அடுத்தடுத்துத் தோன்றி விளையாடுகிறார்கள். அந்த பந்தானது - கிடை எனப்படும் வெண்டு, பூலாப்பூ ஆகியவற்றை நடுவில் வைத்து பஞ்சு-நூலால் சுற்றி அதன்மேல் மயில்பீலி, மென்மையான மயிர் ஆகியவற்றை வைத்து மேலும் வரிந்தனராம். இந்த பந்துகள் - மயில்பீலியின் கண் போல கண்ணுக்கு அழகாகவும், கைக்கு மிருதுவாகவும், இலேசாகவும் இருந்ததாம். இத்தகைய பந்துகளைச் செய்தோர் அறிவர் எனப்பட்டனர். இவை ஒரு கைக்குள் அடங்கும் அளவு இருந்தனவாம். மானனீகை என்பவள் ஓரிடத்தில் நின்றுகொண்டு தன் கைக்கு எட்டிய தூர்ரத்தில் விரலால் வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுழன்று பந்தாடினாளாம். !!
அம்மானை என்று மற்றோரு விளையாட்டு உண்டு. மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும்
விளையாட்டாகவும் கவிதை புனையும் அறிவுப்பூர்வமான
அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது
அம்மானை விளையாட்டு. முதல் பெண் ஒரு செய்தியைப் பாட்டாகக்
கூறிவிட்டு, கற்களை மேலே தூக்கிப்
போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள்.
அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ
இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த
அம்மானைப் பாட்டின் நோக்கமாகும். இரண்டாவது பெண் , முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக்
கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். மூன்றாவது பெண்
அந்த வினாவிற்கு விடை அளித்து ‘அம்மானை’ என்று
சொல்லி கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப்
பாட்டை முடிப்பாள்.
இவ்வாறு
கற்களை சுழற்றி, மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடும் சில இனிய விளையாட்டுகள் சில
பத்து வருஷங்கள் முன்வரை முழங்கின ! - இன்றைய
கணினி - ஆண்ட்ராய்டு லோகத்தில் இவை அனைத்தும் வழக்கொழிந்து விட்டன.
10.3.2021 அன்று காலை புறப்பாடு "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு
எழுந்து அருள்கிறார். திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை
[மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்
நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது
மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, முன் தினம்
கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும்
வைபவம் "போர்வை களைதல்" என கொண்டாடப்படுகிறது.
ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள் ஆள் மேல் பல்லக்கு - பெருமாள்
போர்வை களைதல் வைபவம் - இந்த வருடம் அசம்பாவிதம் காரணமாக பெரிய மாட வீதி புறப்பட்டு
இல்லை. குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு போர்வை களைதல் வைபவம் தென்னண்டை மாட வீதியில்
கோவில் கோபுரம் / அத்தங்கி திருமாளிகை முன்பே நடந்தேறியது. பின்னர் தெற்கு மாட
வீதி புறப்பாடு கண்டருளி மேற்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து
விளையாடுதலும் விமர்சையாக நடைபெற்றன.
திருக்கோவிலை
சென்றடைந்ததும் 'மட்டையடி' எனப்படும் ப்ரணய
கலஹம்' -
பிணக்கு - ஊடலில் பெருமாள் எழுந்து
அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி
விட, பெருமாள் மறுபடி திரும்ப திரும்ப ஏளும்
வைபவமும், சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை
தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது. ப்ரணய
கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம்
கோவில் வாசலில் நடக்கிறது.
கணையாழி
மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை
மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற
அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என நாச்சியார்
வினவ, பெருமாள் அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும்
பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து
விளையாடுகின்றனர். இதன் பிறகு
தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம்
- நாயிகா பாவத்தில் :
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
சங்கப்
பாடல்களில் தலைவன், தலைவி ஊடலும், விளையாட்டும் பிரசித்தம். கிருஷ்ணாவதாரத்தில்
கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே பிரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய
பாவனை உறவே ஆழ்வாருக்கும் ஆகி முற்றியிருக்கின்றது. கோபியர்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம்
போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா? மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு)
நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை
ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.
Here are some photos of day 9 of Sri Azhagiya Singar special brahmothsavam ‘mattayadi’ vaibhavam on 10.3.2021.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th June 2021.
Very nice narration of பந்து, அம்மானை ETC. NICE
ReplyDelete