பெரியாழ்வார் சாற்றுமுறை - நல்லானியில் சோதி நாள் : 21.6.2021
அறுசுவை உணவை விரும்பாதோர் உண்டோ
? ஆனால் நல்ல உணவை விரும்பி உண்பதை மட்டுமே
போக்கியமாக கொண்ட வீணர்களை தம்முடன் வர வேண்டாம்
எனப் பாடிய பெரியாழ்வாரின் திருவவதார மஹோத்சவம் இன்று. !!
தமிழ் இலக்கணத்தில் 'உசாத்துணை' என்பது
ஒரு கருத்தை விளக்க அல்லது விவரிக்க துணை நிற்கும் தரவு. நமக்கு சிறந்த
'உசாத்துணை' யாது ?
We write –
write daily ! – on social media, blogs, magazines and more .. .. when one
writes an article, one would use or cite someone else's words or ideas – making
a reference to them. Academic writing relies on more than just the ideas and
experience of one author. It also uses the ideas and research of other sources:
books, journal articles, websites, and so forth. These other sources may be
used to support the author's ideas, or the author may be discussing, analysing,
or critiquing other sources. Referencing is used to tell the reader where ideas
from other sources have been used in an assignment. So when such references are made, one
must include detailed information on all
sources consulted, both within one’s text
(intext citations) and at the end of the
work (reference list or bibliography).
நம் பொய்யிலாத மணவாள மாமுனிகள் தம்
உபதேசரத்தினமாலையிலே 'பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்
பட்டர்பிரான் பெற்றான் "பெரியாழ்வார்
எனும் பெயர்" என்கிறார். அது என்ன பொங்கும் பரிவு ? என கேட்க தோன்றுகிறதா ?
ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது **' திருப்பல்லாண்டு '**
பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு
இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும் பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.
Corona has shaken people and
changed the lives of the people. It has taken the normal juice out of people –
though lot many Covidiots are out there on the streets, people generally fear
everything now – and at this juncture, would someone come out and readily do
some physical help for others ? – if you think ‘No’ – do read on.
Mumbai's Dharavi, which once
emerged as a COVID19 hotspot of the city during the initial months of the
pandemic, witnessed a sharp decline in
the number of average daily cases. Recently press reports gladly reported
that Asia's largest slum has not
reported a single case ! Last year, when Corona was at its peak,
In one of Mumbai's Red Zones, the dense, congested Nehru Nagar Basti, Rashtriya
Swayam Sevak (RSS) made a big difference. The appreciations came from its
strongest critic Barkha Dutt, who posted a video acclaiming its activities that takes to the Q : "What
motivates these people to get out of their comfort zones and do something to
help someone they don’t even know? Would we ever do the same?"
It is ‘Compassion’. Compassion
is not about leniency. Compassion motivates people to go out of their way
to help the physical, mental, or emotional pains of another and themselves.
Compassion is often regarded as having sensitivity, an emotional aspect to
suffering, though when based on cerebral notions such as fairness, justice, and
interdependence, it may be considered rational in nature and its application
understood as an activity also based on sound judgment. Compassion
literally means “to suffer together.”
பரிவு என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம். நம் மாமுனிகள் வாக்கில் ' பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான்' பெற்றான் "பெரியாழ்வார்" என்னும் பெயர்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார் விஷ்ணு சித்தர். வல்லப தேவன் என்ற அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனது வார்த்தைகளால் சிந்தனை கிளரப்பெற்று 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி?' என்று வினவினான். விஷ்ணுசித்தர் '‘ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள்; பிரபஞ்ச காரணமான பரமாத்மா; அவனடி சரணே சகலத்தையும் அடையும் உபாயம்’ என்று பரத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டர்பிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான். அதைக் கண்டுகளிக்க எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனே பிராட்டியுடன் கருடன் மேல் ஏறி வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.
பொங்கும் பரிவு என்றவுடனே பால் ஞாபகம் வரலாம். பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையான 100 °C அடையும் போது நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன. நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வருவதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.
பரிவு என்பது ஒத்துணர்ச்சி,
அஃதாவது பிறருடைய துன்பத்தில் கலந்து அவர்களுடன் அனுதாபப்படுதலும் அவர்கள் இன்பத்தில்
கலந்து மகிழ்தலுமாம். பெற்ற தாய் தனது குழந்தைகள் மீதும், பசு
தன் கன்றின் மீதும் பரிவு காட்டும். எம்பெருமானுக்கு நன்றாக
காய்ச்சிய பாலை சமர்ப்பிப்பது நம் சம்ப்ரதாயம். அப்படி அவருக்கு திருவமுது
செய்விக்கும் போது அதிக சூடான பால் எம்பெருமானுக்கு தீங்கு தருமோ ! என கவலைப்படுவது
பொங்கும் பரிவு !! பெருமாளுக்கு நாவல் பழம் சமர்ப்பித்தால் அதன் குளிர்ச்சி அவருக்கு
கேடு விளைவிக்குமோ என நினைத்தவர் நம் ஆசார்யர்.
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய்
கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் இந்நிலத்திலே
எம்பெருமானுக்கு யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு
‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு;
பல கோடி பல்லாண்டு என வேண்டினவர். எப்படிப்பட்ட எதிரிகளையும்
ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவு கொண்டவனும் மல்லர்களை புறந்
தள்ளினவனுமான புஜபல பராக்கிரமசாலியை கண்டு – மீண்டும், மீண்டும்
மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார். சேஷபூதனுக்குத்
திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.
பெரியாழ்வார் இயற்றியவை
"திருப்பல்லாண்டும் பெரியாழ்வார் திருமொழியும்".
கோதிலவாம்
ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி
திருப்பல்லாண்டு ஆனதுவும் வேதத்துக்கு
ஓம்
என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான்
மங்களம் ஆதலால்* ~~~~
'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது "திருப்பல்லாண்டு" என நம் ஆசார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீநாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி 461 பாசுரங்கள்*.
மன்னன் வல்லப தேவனின்
மனக்கிடக்கையான பரம்பொருள் யார் என்பதை 'ஸ்ரீமன்
நாராயணன்' ஒருவனே என்று ஓதி பொற்கிழி அறுத்த விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மதுரை
மாநகரத்திலே சங்குகள் முழங்க பட்டத்து யானை மீது பவனி வர, எம்பெருமானே அருள் தர காட்சி தர அவ்வெம்பெருமானுக்கு எவ்வித கண்ணேறும் படக்கூடாது
என திருப்பல்லாண்டு பாடினவர் நம் ஆழ்வார்.
தம்மோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து அவன் புகழ் பாட மானுடத்தை
அழைக்கின்ற போதிலும், வெறுமனே வயிறு வளர்க்கும்
வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று. முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும்
மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம். மண் கொள்ளுகையாவது இறைவனின் தொண்டில் ஈடுபடுவது;
மணம் கொள்ளுகையாவது அந்த கைங்கர்யத்தில் முழு மன நிறைவோடு ஈடுபடுவது. இதோ இங்கே பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுரம்
:
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு
நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்
காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்
இலங்கை
பாழாளாகப்
படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே
நமக்கு உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான எம்பெருமானுடைய அடிமைத் தொழிலில் ஈடுபட்டு நிலைத்து
நின்றவர்கள் அனைவருமே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான
திருமுளைத் திருநாளுக்குப் புழுதி மண் சுமவுங்கள்; மணமும் கொள்மின் என அத்தகைய உத்சவ
விசேஷங்களுக்கு அபிமானிகளாகவும் இருங்கள்; கேவலம் உண்ணும் சோற்றுக்காகப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை
எங்களுடைய கோஷ்டியிலே அங்கீகரிக்க மாட்டோம்.
நாங்கள் சிறப்பானவர்கள். ஏழு தலைமுறையாக ஒருவகைக்
குற்றமும் இல்லாதவர்கள் எங்கள் தொழில்தாம்
என்ன எனில், கொடிய அசுரர்கள் வசித்த இலங்கை
தீவின் பாதுகாவலர்களாக இருந்த ஆண் புலிகள்
யாவரும் அணைத்து இராவணாதிகளும், வேரோடே அழிந்து போம்படி, வாநர சேனையைக் கொண்டு போர்
செய்த பெருமாளுக்கு மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்
உசா என்றால் ஆராய்ச்சி. உசாத்துணை என்றால் ஆராய்ச்சிக்கு துணை நின்றவைகள் (References) என்று பொருள். உசாத்துணை, உசாவுதுணை என்னும் இரண்டும் ஒன்றே!. நாம் எழுதும்போது செய்த ஒரு ஆராய்ச்சிக்குத் துணைபுரிந்த அடிப்படை ஏது நூல்கள் அங்கே உசாத்துணையாகக் குறிப்பிடப்படும். உசாத்துணையிடல் தொடர்பாக விரிவாக நோக்க முதல், மேற்கோள் காட்டல் (Citation) உசாத்துணை (Reference) மற்றும் நூற்பட்டியல் (Bibliography) ஆகியன பற்றி அறிந்து கொள்வோம். மேற்கோள் காட்டல், என்பதனை ஆங்கிலத்தில் Citation என்றழைப்பர். Reference எனும் போது அது உசாத்துணை எனவும் Bibliography என்பது நூல் விபரப்பட்டியல் அல்லது நூற்றொகை என்றும் அழைக்கப்படுகின்றன. உசாத்துணையிடலில் ஓர் ஒழுங்குமுறையினை பின்பற்றும் பொருட்டு பல்வேறு அமைப்புக்கள் உசாத்துணையிடலில் சில நியமங்களை உருவாக்கி பின்பற்றி வருகின்றன. அதாவது, பிறரது சிந்தனைகள், அபிப்பிராயங்கள், கருமங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டதொரு வழியில் எவ்வாறு ஒப்புக்கொள்வது என்பதற்கான ஒழுங்கு விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
படிப்பதற்கு பல நூல்கள் இருக்கலாம்; செல்வதற்கு பற்பல பாதைகள் தெரியலாம். ஸ்ரீவைணவனான நமக்கு உற்ற துணை ஆசார்யர்கள்; வழிகாட்டும் நெறி திவ்யப்ரபந்தமும், ஆசார்யர்கள் அருள் உரைகளும் - அவர்களை துணையாக பற்றி எம்பெருமானை அடைந்து இன்புறுவோமாக !
Let us prostrate at the feet of the Alwar and pray that we are bonded with Emperuman ever. Generally ‘Swathi nakshathiram in the tamil month of Aani’ signifying the birth day of Periyazhwaar would fall on day 2 of the Brahmothsavam. Today would have been day 3 of Sri Azhagiya Singar Aani Brahmothsavam – but for Corona, there would have been classic purappadu of Sri Azhagiya Singar on Garuda Sevai and Sri Periyazhvar on yanai vahanam. Unfortunate that we could not have darshan of such a wonderful sevai. Let us pray Emperuman that by that time, Corona is contained and the grand uthsavams does take place.
Azhwar Emperumanar Jeeyar
Thiruvadigale Saranam
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.6.2021.
Photos of earlier years taken by me.
உசாத்துணை : reference web & - http://www.vidivelli.lk/article/6977
Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Saranam. Periyazhwar thiruvadigale saranam. Beautiful pictures. Nice
ReplyDelete