Wednesday, June 9, 2021

Oceans are mighty ~ to us it is Sriman Narayana's resting place : அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,

முதலில் கொஞ்சம் மொழி இலக்கணம்.  ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பன  தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு.   ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் "பார்" என்ற சொல் "கண்ணால் காண்" பார்த்தல் என்ற பொருளில் வரும். அதேபோல "உலகம்" என்ற பொருளிலும் வரும். ஆக "பார்" என்ற சொல் பார்த்தல் அல்லது உலகம் என்ற இரு வேறு பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். இடமறிந்து இவற்றின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 



பல்பொருள் ஒரு மொழிக்கு மற்றுமொரு உதாரணம் :  "ஆழி" - இதற்கு பல பொருட்கள் உள்ளன : கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம்; மோதிரம்; சக்கரம், வட்டம்; கட்டளை மற்றும்  பொத்தான்  (button) கூட.  ஸ்ரீவைணவர்களுக்கு ஆழி என்றாலே எம்பெருமான் திருக்கைகளில் ஏந்தும்  "திருவாழி " [திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான  சுதர்சனம் எனும் சக்கரம்] - முதல் திருவந்தாதி முதல் பாசுரத்தில் : சுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படை; இடர்ஆழி = துன்பமாகிய கடல். 

Oceans ! ~ the vast bodies of water surrounding the continents are critical to humankind.  Our own Triplicane is on the shores of a mighty Sea – the Bay of Bengal.  An Ocean is a continuous body of saltwater that covers more than 70 percent of the Earth's surface. Ocean currents govern the world's weather and churn a kaleidoscope of life. Humans depend on these teeming waters for comfort and survival, but global warming and overfishing threaten to leave the ocean agitated and empty.  Geographers divide the ocean into five major basins: the Pacific, Atlantic, Indian, Arctic, and Southern. Smaller ocean regions such as the Mediterranean Sea, Gulf of Mexico, and the Bay of Bengal are called seas, gulfs, and bays. Inland bodies of saltwater such as the Caspian Sea and the Great Salt Lake are distinct from the world's oceans.

The oceans hold about 321 million cubic miles (1.34 billion cubic kilometers) of water, which is roughly 97 percent of Earth's water supply. Seawater's weight is about 3.5 percent dissolved salt; oceans are also rich in chlorine, magnesium, and calcium. The oceans absorb the sun's heat, transferring it to the atmosphere and distributing it around the world. This conveyor belt of heat drives global weather patterns and helps regulate temperatures on land, acting as a heater in the winter and an air conditioner in the summer.

Tens of thousands of miles away, in the vast horizon - Saturn’s largest moon Titan is an extraordinary and exceptional world. Among our solar system’s more than 150 known moons, Titan is the only one with a substantial atmosphere. And of all the places in the solar system, Titan is the only place besides Earth known to have liquids in the form of rivers, lakes and seas on its surface.  Titan has clouds, rain, rivers, lakes and seas of liquid hydrocarbons like methane and ethane. The largest seas are hundreds of feet deep and hundreds of miles wide. Beneath Titan’s thick crust of water ice is more liquid—an ocean primarily of water rather than methane. Titan’s subsurface water could be a place to harbour life as we know it, while its surface lakes and seas of liquid hydrocarbons could conceivably harbour life that uses different chemistry than we’re used to—that is, life as we don’t yet know it. Titan could also be a lifeless world !

Scientists one day hope to be able to plunge a submarine under the surface of Titan, Saturn's biggest moon. Nasa hopes to be able to do so within the next 20 years. For us, the Ocean of significance is ‘Thiruparkadal’ where Lord Sriman Narayana reclines on Adisesha. 



அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,

அழகன்றே  அண்டம் கடத்தல், - அழகன்றே

அங்கை நீரேற்றாற்கு அலர்மேலோன் கால்கழுவ,

கங்கைநீர் கான்ற கழல். 

எம்பெருமானைக் கடல் வண்ணா!   -  ஆழியானே!!   என்று சொல்லி அழைத்தலில் எம்பெருமானுடைய பேர் மட்டுமல்ல அழகிய திருநிறமும்  சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே! 

ஸ்ரீபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் எம்பெருமான் வடிவழகை பிரஸ்தாபிக்கிறார்.  தமது திருக்கையினிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு, கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது.  அந்நிறம்     மிகவுமழகிய நிறமன்றோ !  புவனம்  முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான்.   தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு,  நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ !  .. ..  சங்கரன் சடையினில் தாங்கிப்  பரிசுத்தமாக பிரவாகிக்கும்  கங்கை நதி, எம்பெருமானுடைய திருவடியை விளக்கியதாலே மிகப் பரிசுத்தமானது. செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர் பெருகப்பெற்றது அற்புதம்.   அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருப்பாத கமலங்களை பற்றி நாமும் உய்வோகமாக!  




Sri Peyalwar whose darshan was enabled by the lights lit by Poigai alwar  and Boothathalwar –  asks : is it the deep-Ocean hue of the Lord that is beautiful; was the  water [that eventually became sacred Ganges because it washed the lotus feet of Emperuman] poured on the lotus feet of the Lord by Brahma  - when Sriman Narayana accepted the gift of land,  and in accepting stretched His foot into space – beautiful …. 

~  to us it only Sriman Narayana and the dazzling beauty of Sri Parthasarathi Perumal – 9th Nov 2014 was Rohini and there was chinna maada veethi purappadu - in the goshti, it was Sri Peyalwar’s moonram thiruvanthathi sevai. .  Here are some photos through which all of  us can enjoy the sublime beauty of Emperuman.

 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9th June 2021

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம். 









1 comment: