Monday, June 14, 2021

Mithilapuri getting bedecked for Sree Ramapiran celestial marriage : அஞ்சன ஒளியானும்; அலர்மிசை உறைவாளும், எஞ்சல் இல் மணம்

Today (13.6.2021) is Punarvasu nakshathiram in the month of Vaikasi – the masa thirunakshathiram of Sree Rama Piran – in normal days, there would have been purappadu of Sree Ramachadnra murthi and Perumal thirumozhi goshti inside  the temple. It is also the masa thirunakshathiram of Sri Kulasekara Azhwar, Mudaliaandan and Embar.



Mere chanting of the name ‘Sree Rama’ would provide everything to us ~ he is the greatest benefactor ~ the Maryadha Purush ~ the greatest epitome of all virtues Lord Rama.  The greatest of the Ithihasa puranamn * Sri Ramayanam * has had its influence across centuries, countries and cultures -    Maryadha Purush Sri Rama  has illuminated the lives of millions imparting lessons in various spheres.  Pleasant things give happiness to everyone and there cannot be more pleasant sight than that of Sri Rama Pattabishekam ~ the eternal state of bliss- the most complete picture of happiness to everyone in the Kingdom.      

கொரோனா தீநுண்மியால் உலகம் கட்டுண்ட வேளையில், முந்தைய நன்னாட்களில் நிகழ்ந்த நல்லவற்றை எண்ணி, அவ்வாறு மறுபடியும் அமைய வேண்டும் என எம்பெருமானிடம் பிரார்த்தித்தால் நல்லது நிச்சயமாக  சீக்கிரம் நடக்கும்.

வால்மீகி முனிவரின் இராமாயணத்தைப் பெரும்பாலும் அடியொற்றி, சில இடங்களில் மாற்றம், திருத்தம்  செய்து    கம்பன்   தனக்கேயுரிய    முறையில்    கம்ப இராமாயணத்தைப் படைத்துள்ளான்.   இராமபிரானுக்கும்   ஜானகி மாதாவுக்கும்   நிகழ்ந்த    திருமணத்தை  விவரிக்கும் பகுதி  கடிமணப் படலம் - இது சிறப்புற நடந்த இடம் : 'மிதிலாபுரி'.   மிதிலையின் தற்போதைய பெயர் ஜனக்பூர். இது நேபாள நாட்டில் உள்ளது. பீஹார் மற்றும் நேபாளத்தின் தென்பகுதி அந்தக் காலத்தில் விதேஹ தேசம் என்று அழைக்கப்பட்டது. 

                      மிதிலையில்   அனைவரும்   மகிழ்வில்   திளைத்திருக்க, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருமண நாள் அதி அற்புதமாக கொண்டாடப்பட்டது.     மிதிலையில் தெருக்களை அழகான மகளிர்,  அகில் சாந்தொடு- மணக்கின்ற சந்தனம் ஆகியவற்றைத் தேய்த்து அரைத்த குழம்பை; தெரு எங்கும்  சிந்தினர்; வாடா மலர்களை வீதிகளில் எல்லாம்  தூவினர்.  இந்திரவில்  எனப்படும்  வானவில்   நாணுமாறு   ஒளிவீசும்   மணிகள் பதிக்கப்பட்டுள்ள மாடங்களாகிய உப்பரிகைகளில்  ஆரக்  கோவைகள்  அணிவாரும்  -  அளவற்ற  விலைமதிப்புடைய முத்து வடங்களைத் தொங்க விட்டு அலங்கரிப்பவர்களும் அலங்கரித்து கொண்டாடினார்கள். இந்த திருமணத்தை காண கதிரவனும் வந்ததை கம்ப நாட்டாழ்வான் : 

‘அஞ்சன ஒளியானும்;    அலர்மிசை உறைவாளும்

எஞ்சல் இல் மணம். நாளைப்    புணர்குவர்’ எனலோடும்

செஞ் சுடர் இருள் கீறி     தினகரன். ஒரு தேர்மேல்

மஞ்சனை அணி கோலம்    காணிய என. வந்தான்.  ~  என்கிறார். 

அஞ்சன மை போன்ற கருநிறங்  கொண்ட  இராமனும்;   தாமரைப் பூவில்  வாழ்பவளாம்  திருமகளாகிய  சீதையும்;   ஒருவகையிலும் குறைவில்லாத  திருமணம்  கூடுவார்கள்   என்று   முரசறைந்த  செய்தி கேட்டவுடன் -  தினகரன்  தனது குல மைந்தனான  இராமனின்  திருமணக்  கோலத்தைக்  காணத்   தனது   ஒப்பற்ற   தேர்மேல்  தன்  சிவந்த ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் (கீழ்வானில்) உதித்தான்.  குலப்பாட்டன்     கொள்ளுப்பேரன் திருமணம் காண வந்தாற்போல வந்தான்   எனச்   சூரிய   உதயத்தை   இடம்   காலத்திற்கேற்றவாறு புனைந்துரைக்கும் திறம்  -  ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.   [தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.  கருமையில்  ஒளிகூடின்   காகுத்தன்   நிறமாகும்  என்றவாறு எம்பெருமானின் நிறத்திற்கு உகப்பாக இயம்பப்பட்டது.

Reminiscing the past happier days – here are some photos of Sri Ramapiran purappadu in Yanai vahanam and at Thavana uthsva bungalow taken on 9.4.2011.

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13th June 2021. 












1 comment: