Saturday, June 19, 2021

Sri Azhagiya Singar Dharmathipeedam ~ பெற்றார் தளைகழலப் பேர்ந்து ஓர் குறளுருவாய்

It is more than an year since the first case of Covid was detected in India in Mar 2020 – then the cases went up, Globally lockdown was resorted to; travel became a thing of the past  –  today after waves of Corona, life has changed a lot for the mankind.


Vaccines have given sort of relief, yet Covid is not  eliminated, it was getting under control then came  fresh fears.  The rise in COVID-19 cases as part of ‘second wave’ had the government and public health authorities truly worried. In many ways, the concern is larger than during last year when there were several more cases.  From the plagues of biblical times to the HIV pandemic of recent times, infectious diseases have affected humans in a big way.    The continual expansion of human populations since prehistoric times has led to successive invasions of the human population by increasing numbers of different pathogens.  It is a fact that ‘covid’ has impacted humans in a big way, changing their lives and stunting the economic growth. 



மனித இனத்தின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் பற்பல தளைகள் கட்டி தடுக்க முயற்சித்துள்ளன.    தளைகள்  தாம் தடைகள்.  தளை  என்ற  பெயர்ச்சொல்லுக்கு  :  - கட்டு; கயிறு;  விலங்கு; பாசம்; மலர் முறுக்கு; சிறை; தொடர்பு; காற்சிலம்பு; வயல்; வரம்பு -  இன்ன பிற அர்த்தங்கள் உள்ளன.    

தளை - தமிழ் இலக்கணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.  தளை என்பதற்குப் பிணைத்தல் அல்லது கட்டுதல் என்பது பொருள், சீரும் சீரும் சேர்ந்து ஒலிக்கிற பொழுது தோன்றுவது தளை. முதற்சீரின் கடைசி அசையும் அடுத்த சீரின் முதல் அசையும் கூடும் நிலையில்தான் இத் தளை அமைகிறது. முதல் சீர், யாப்பில் ‘நின்றசீர்’ என்னும் சொல்லால் குறிக்கப்படும். அதை அடுத்து வரும்சீர், ‘வரும்சீர்’ என்று சுட்டப்பெறும். தளைதல்’ என்பது தொழிற்பெயர். இதன் முதனிலை அல்லது பகுதி `தளை’ ஆகும். இதன் பொருள் கட்டுதல், பிணைத்தல், யாத்தல் என்பனவாம்.   தளை இலக்கணப்படி,  ஒரு பாவின் ஓர் அடியில் நின்ற சீரின் ஈற்றசையோடு வரும்சீரின் முதற்சீரைத் தளைத்து அல்லது இணைத்து பந்தமுற நிற்பது தளையாகும். அதாவது தளைத்து நிற்பது. சீரோடு சீரை இணைத்துச் செய்யுள் அடிகளை அமைக்கும் போது அவற்றுக்கிடையே ஏற்படும் இயைபே தளையாகும்.

வெண்டளை என்பது தமிழ்ப் பாடல்களில் காணப்படும் பண்டைய யாப்பிலக்கணக் குறியீடு. இதன் ஓசை வினாவுக்கு விடை செப்புவது போல அமைந்திருப்பதால் இதனைச் செப்பலோசை எனக் கூறுவர்

Hope in near future, Covid is totally eradicated and humanity lives happily thereafter.  Today 19th June 2021 is the time for Aani Bramothsavam for Sri Thelliya Singa Perumal at Thiruvallikkeni.  Alas, not the Uthsavam, we are not even in a position to go inside the temple and have HIS darshan.  Sad, indeed.   

On day 1 morning at Thiruvallikkeni,  after dwajarohanam it  would be   Dharmathi peedam purappadu;  by some accounts this vahanam was rendered in 1906 and hence more than a century old.   Being day 1 ~ it is Muthal thiruvanthathi of Sri Poigai alwar.



எம்பெருமானை தங்கள் மனசார அனுபவித்து ஆசையாய் தங்கள் வார்த்தைகள் உரைத்தவர்கள் ஆழ்வார்கள்.   கிருஷ்ணாவதார காலத்திலும்  அதற்கு முந்தைய த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை ஏத்தியிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ; அப்பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று   ஏங்குகிறார் நம் பொய்கைப்பிரான்.  இதோ இங்கே பொய்கையாழ்வாரின்  முதல் திருவந்தாதி பாசுரம் :

பெற்றார் தளைகழலப் பேர்ந்து  ஓர் குறளுருவாய்,

செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா

மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,

நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.

கண்ணபிரான் பிறப்பு முதல் கஷ்டங்களை எதிர்கொண்டவன்.  அன்றொரு நாள் மழை நாளில், மதுராவில், கம்சனது சிறையில் பிறந்தவன்.  அப்படி பிறந்த சில நாழிகைகளிலேயே, தம் தாய் தந்தையாரான ,  வஸுதேவ தேவகிகளுடைய  விலங்குகள்  அற்றுப் போம்படியாக தெறிக்க வைத்தவன்;  திருப்பாற்கடலில் நின்றும், பின்  பெயர்ந்து க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும், விலக்ஷண வாமந வேஷத்தையுடையனாய், ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை யாசித்து, அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட  செங்கண்மால் புண்டரீகாக்ஷனுடைய  அழகிய தாமரை போன்ற  சிவந்த திருவடிகளை இந்திராதி தேவர்கள் கைகூப்பி அஞ்ஜலி  செய்துகொண்டு நன்றாக வளர்ந்து பூத்துள்ள நறுமண  பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து துதிப்பர்கள்;  அந்த சிறந்த திருமால் பாதமே நம் அனைவருக்கும் போக்கியம்  !    முன்னொரு காலத்திலே அவ்வவதார  சமயங்களில் தான் பிறந்து இருந்து,  தாமும் துதிக்கப்பெறவில்லையே  என்கிற துக்கத்தைச் இப்பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார் நம் பொய்கைப்பிரான்.

In these hard times, let us pray Emperuman that all bonds of difficulties are shaken off, eliminated and World breathes fresh air getting rid of Covid 19 and any other diseases.  We pray our Azhagiya Singar of Thiruvallikkeni to bless us all with good health, peaceful mind and all wealth.  Here are some photos of Sri Azhagiya Singar brahmothsavam dharmathipeedam purappadu of 5.6.2011, yes, a decade ago !

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar                         
19th June 2021. 









1 comment: