Celebrating Thaniyan - "Sri Sailesa thaya pathram'
- ஸ்ரீசைலேசதயாபாத்ரம்
" தனியன் திருவவதார வைபவம்
Today is Masa
thirunakshathiram of our Acaryar Swami Manavala Mamunigal - the most reverred matchless Acharyar of our
Srivaishnavaite philosophy, practised by Thennacharya
Srivaishnavas.
Mamunigal
the incarnation of Sri Adisesha, is known as ‘Yathindra Pravanar’ arising
out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar known as
‘Yatheendrar’. He lived for 73 years on this earth performing many
Kainkaryams at Sri Rangam and undertook many pilgrimages to many Sri
Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture. His
patent style was to elucidate the pramanams fully ‘following the words
of the Purvarcharyas without deviating a wee bit’.
இன்றைய காலகட்டத்தில்
மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர். கொரோனா தீநுண்மி உலகோரை பயமுறுத்தி உள்ளது. இந்த
கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும் !! ஆயிரம் ஆண்டுகள் முன்பு
திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும். நிலை
கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர். ஸ்ரீமன்
நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும்
நடக்காது என்பது திண்ணம்.
இன்று
ஆனித் திருமூலம் - ஸ்ரீ வைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.
திருக்கோவில்களில்
கவனித்து இருப்பீர். திவ்யப்ரபந்தம் அநுஸந்திக்கும் முன் தனியனை பாடி துவங்குவர். புறப்பாடு
வேளைகளில் கவனித்து இருக்கலாம். பெருமாளின் ஸ்ரீசடகோபம் மரியாதையை பெற்றுக்கொண்டவுடன்
முதல் தீர்த்தக்காரர் - தனியனை ஆரம்பிக்க,
அவருடன் மொத்த கோஷ்டியாரும் திவ்யப்ரபந்தத்தை அழகாக இன்னிசையில் சேர்ந்து இசைப்பர். தனியன்
என்பது பொதுவாக ஆசார்யரைப் பற்றிய புகழ் பாடும் துதி, அவரது சிஷ்யரால் இயற்றப்படுவது.
அந்தந்த நூலின் உரையாசிரியரை, அவர்தம் சிறப்பை அறிமுகப்படுத்துவது எனலாம்.
இன்று ஆனித் திருமூலம் - "ஸ்ரீசைலேச தயாபாத்ரம் " தனியன் அவதரித்த நன்னாள். இந்த நன்னாளிலே பெருமை வாய்ந்த திருவரங்கம் திருக்கோவிலிலே பெரிய பெருமாள் திருமுன்பே ஆசார்ய சார்வபௌமரான அழகிய மணவாள மாமுனிகள் ஓராண்டு திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் சாதித்து பூர்த்தி செய்த நன்னாள். அந்த வைபவத்தில் - 'ஆனி மாதம், மூலம் நட்சத்திரம்' அன்று நம்பெருமாள் சிறுவனாக வந்து, மாமுனிகள் முன்பு 'ஸ்ரீ சைலேச தனியன்' திருவாய் மலர்ந்தருளி - நமக்கு இந்த அற்புத தனியன் உதித்தது. எனவே இன்று ஸ்ரீசைலேச திருவவதார வைபவம்' அதாவது, ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள்
நம் பூர்வாசார்யர்கள் வாக்கின் படி ஸ்ரீரங்கநாயகரான பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில் 'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியினருக்கு பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில் அருளினார். கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம், பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம் நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள்.
நாம் உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் :
ஸ்ரீசைலேச
தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.)
ஸ்ரீவைஷ்ணவ திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும் கிடைத்தல் மிக சிறப்பானது. சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்" (திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திரவீதியில் உள்ள, மணவாள மாமுனிகளின் மடத்தில் இன்றுவரை உள்ளது. மாமுனிகள் திருவடிகளின் பெயர் - “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு.
இன்றளவும் அனைத்து தென்னாசார்ய திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களில், மடங்களிலும், இல்லங்களிலும் திவ்யப்ரபந்தம் - ஸ்ரீ சைலேச தயா பாத்திரம் தனியன் சொல்லியே சேவிக்கப்பெறுகின்றது. நமக்கு 'ஸ்ரீசைலேச' தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.
At
Thiruvallikkeni and other divyadesams, 10 day Thiruvavathara Uthsavam of our
Acharyar is being celebrated grandly with sarrumurai culminating on ‘Aippaisyil
Thirumoolam’ - 27th Oct
2014 was the ninth day of the Uthsavam. In the morning it was
siriya Thiruther for our Acharyar and in the evening it was fragrant ‘Pushpa
Pallakku’- the palanquin made up of
flowers.’ Favourite memories are triggered
by our sense of smell ~ flowers are admired for their beauty, exquisite
shapes, spectrum of colours and more so for their fragrance. Here are some photos of the grand pushpa
pallakku purappadu of Swami Manavala mamunigal
ஆழ்வார்
எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
'ஆச்சாரியன்
திருவடிகளே சரணம்'
'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் '.
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th June 2021
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
ReplyDelete'ஆச்சாரியன் திருவடிகளே சரணம்'
'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....Nice photos.