Sunday, May 9, 2021

Thiruvarangam Chithirai thiruther !

Today is ‘REvathi in the month of Chithirai’ – a day of great significance for Sri Ranganathar at Thiruvarangam !  .. .. கண்பனி சோர – may be translated as eyes becoming moist ! but it is a feeling beyond ! – only can be experienced, not explained aptly !!

 


The beautiful temple of Sri Ranganathaswami at Srirangam boasts an historic past of great kingdom and a civilization thousands of years old. It has flourished through various dynasties though the invasion of Malikapur was a dark era.  The Rajagopuram is 236 feet height with its 13 tiers with gopuram's base measuring  166 feet by 97 feet ~ a great engineering marvel of recent times.   The massive Rajagopuram can be seen and worshipped from every nook and corner of Thiruvarangam and beyond.  

ஸ்ரீரங்கம் முதலாவது திவ்ய க்ஷேத்திரம் . அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.  

அரங்கனுக்கு மூன்று பிரம்மோத்சவங்கள் நடக்கின்றன. இவற்றுள் விருப்பன் திருநாள் எனும் சித்திரை உத்சவமும், குடியானவர்களும் பயிரிட்டோரும் சீராட்டும் சித்திரை தேர் திருவிழாவும் மிக பிரசித்தி. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் ஆழ்வார் பாடலின் படி மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் அழகிய மணவாளனை திருத்தேரில் ஏளப் பண்ணி கொண்டடினராம். ஸ்ரீரங்கம் வீதிகள் மதில் சூழ்ந்து அகலமாக தென்னை மரங்களுடன் சிறப்பாக உள்ளன.  மிகப்பெரிய அழகான மதில்களுடன் கூடிய அற்புத கோவில்.  தற்போது  உத்திரவீதி வரை வாகனங்கள் செல்கின்றன (அதிகாரிகளின் கார் இன்னமும் உள்ளே செல்கிறது !!)  இக்கோவிலின் மூன்றாம் திருச்சுற்று ‘குலசேகரன் திருச்சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. இதன் வாசலை ‘ஆர்யபடாள் வாசல்’ என்று அழைக்கிறார்கள். 









Among the grand festivals of the Temple at Thiruvarangam – Chithirai festival is glorious.  A king of the Vijayanagara dynasty by name  Viruppanna udayar established the Chithrai festival in 1383. After Islamic  invasions Lord Ranganatha returned  to sanctum sanctorum in 1371 (17th day Vaikasi month).  By that time raved by war and the troubles that subjects faced, temple had dilapidated.  In the year 1377 the King Viruppannan donated Seventeen thousand gold coins for renovation of temple. In the year of 1383 after renovation Chithrai festival recommenced after 60 years.  It is recorded that Viruppannan donated 52 villages for Temple welfare. From that year onwards Chithirai thirunal is a festival of masses as villagers swarm Thiruvarangam.    Villagers donate cattle and cereals from their fields.  The major attraction of course is Chithirai thiruther majestically running the Chithirai mada veethis of Thiruvarangam.   

மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது ! பக்தர்கள் தம்மை மறந்து பக்தி பரவசத்தில் இரண்டு கைகளையும் தூக்கி - திருத்தேரை நோக்கி கூப்பி 'ரங்கா! ரங்கா!' - ஸ்ரீமன் நாராயணா ! பரம்பொருளே ! கோவிந்தா ! - தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சு உருகி,  கண்களிலே நீர் பெருக்கெடுத்து ஓட  சித்திரை வீதிகளில் நடந்து அவனை சேவிக்கின்றனர். அது ஒரு அற்புத அனுபவம்.  இதையே தானோ குலசேகர ஆழ்வார் தமது பெருமாள் திருமொழியில் அனுபவித்தது ! 

மொய்த்துக் கண்பனி சோர மெய்கள்சிலிர்ப்ப ஏங்கியிளைத்து நின்று*

எய்த்துக்  கும்பிடு நட்டமிட்டெழுந்து  ஆடிப்பாடியி   இறைஞ்சி  * என்

அத்தனச்சன்   அரங்கனுக்கு    அடியார்களாகி*  அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்  முற்றும் பித்தரே !! 

எம்பெருமான் அரங்கனை கண்ட ஆனந்தத்தினால்  கண்கள்  இடைவிடாமல் சொரியவும், சரீரமானது மயிர்க்கூச்செறியவும் ,  நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலை தளர்ந்து, ஆனந்த எண்ணங்களால்  மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி நின்றவிடத்து நில்லாமல் பல வித  ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி, எனக்குத் தந்தையாய் எங்கள் குலத்துக்கே  ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனுக்கு அடியவர்களாய் அந்த பள்ளிகொண்ட பெருமான் விஷயத்திலேயே பித்தேறித் திரிகிறவர்கள், பைத்தியக்காரர்களல்லர்;  இத்தகைய பற்று, இத்தகைய    வ்யாமோஹமில்லாத  மற்றபேர்கள்  எல்லாரும் தான் பைத்தியக்காரர்கள் என்று அறுதியிட்டு உரைக்கின்றார் ஸ்ரீராமபிரானிடத்திலே மிகுந்த பற்று கொண்ட நம் குலசேகர ஆழ்வார். 

Had the fortune of having Arangan Chithirai thiruther darshan way back on 3.5.2008.  Here are some photos of that ethereal moment captured with Konica dimage z310 camera.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9th May 2021. 

































1 comment: