Wednesday, May 26, 2021

Sri Varadhar uthsavam 2021 ~ தொண்டை நன்னாடு : பெரும்பாணாற்றுப்படை

Where do you live ? – how old is the history of Chennai metropolis !  .. .. how were the geographical positions drawn and redrawn over the years ! – all these might offer lot of interesting historical information !!



வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்  தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து.. ..


என்றார் ஒளவையார் -  தொண்டை மண்டல சதகம்.  ஆம்,  இந்த தொண்டைநாடு என்பது யாது ?

For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar … 

இது சமயம் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ வரதராஜர் உத்சவம் நடைபெறும்.  திருவல்லிக்கேணியில் பத்து நாள் உத்சவ புறப்பாடு உண்டு எனினும் திருக்கச்சி தேவாதிராஜரின் ப்ரம்மோத்சவம்  மிக பிராபல்யம்  - இங்கே திருக்கச்சி மூதூரின் சிறப்பும் சில சங்க இலக்கிய சரித்திரமும்.

 

காழோர்  இகழ்பதம் நோக்கிக் கீழ

நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்

கடுஞ்சூன் மந்தி கவருங் விற்

களிறு கதனடக்கிய வெளிறில் கந்திற்  .. .. .. 

இளந்திரையன் எனும் மன்னன் ஆண்ட  ஊர் கச்சி. அம்மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக் கொண்டிருப்பர். காழோர் என்போர் யானைப் பாகர். அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர். இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும். வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம். கந்து என்பது பற்றுக்கோடு இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண். வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம்.  

இவை 500 அடிகளைக் கொண்டு அமைந்த பெரும்பாணாற்றுப்படை இலக்கிய நூலின் வரிகள்.  பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது   கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இயற்றிய நூல்.   இந்நூல் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.  269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.   இந்நூல்  சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது.  

Six Indian sites, including the temples of Kanchipuram in Tamil Nadu, the Ganga ghats in Varanasi, and the Satpura Tiger Reserve in Madhya Pradesh, have been added to the tentative list of UNESCO’s world heritage sites, the Ministry of Culture, recently announced.  The submissions were made by Archaeological Survey of India, which is responsible for the conservation and preservation of Indian monuments. “Delighted and proud that @ASIGoI had submitted a proposal for India’s 9 places for inclusion in the tentative list of UNESCO, where six sites have selected in Tentative Lists of @UNESCO World Heritage Site,” the tweet read.

The six sites are namely Satpura Tiger Reserve, Iconic riverfront of the historic city of Varanasi, Megalithic site of Hire Benkal, Maratha Military Architecture in Maharashtra, Bhedaghat-Lametaghat in Narmada Valley- Jabalpur, and temples of Kanchipuram.

Synonymous with spirituality, serenity, and silk, the temple town of Kanchipuram in Tamil Nadu, is dotted with ancient temples that are architectural marvels and a visual treat, states incredibleindia.org. Situated on the banks of River Vegavathi, this historical city once had 1,000 temples, of which only 126 (108 Shaiva and 18 Vaishnava) now remain. Its rich legacy has been the endowment of the Pallava dynasty, which made the region its capital between the 6th and 7th centuries and lavished upon its architectural gems that are a fine example of Dravidian styles.

Thirukachi to Srivaishnavaites, Kanchipuram is one of the seven Mukthi kshetras ie., Mokshapuris (cities of liberation from the bondage of birth and deaths) – Ayodhya, Mathura, Haridwar, Kasi, Avantika (Ujjain), Kanchi and Dwaraka. It has been a place of worship for Sakthi cult (Kamakoti Peeta and Kamakshi temple) – seat of learning and Ghatika (University) for vedic studies that thrived during 4th century AD.   Chidambaram is Akasa kshetra, Kanchi is known as Akasa peetha as mentioned in Soubhagya Chintamani.

Besides Pallava history, one needs to study something about Thondaimandalam and its Kings too .. .. ..

நம் முன்னோர் உழவுத் தொழிலை முதன்மையாக கொண்டே இயங்கினர். ஒவ்வொரு சமூகமும் உழவோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டிருந்தது; அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளாக நெல் விளைவித்து வருவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இங்கே பாய்வது - பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விளங்கியது.    கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி  கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில்  பாலாறு கலக்கிறது. .  .. . .. . … … 

1000 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் வடபகுதி 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில், புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், வேலூர்க்கோட்டம் என 24 கோட்டங்கள் இருந்துள்ளன. இந்தக் கோட்டங்களுள் புலியூர்க்கோட்டம் நிர்வாக ரீதியாக சிறப்புற்று விளங்கியது. இன்று கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புலியூர்க்கோட்டம்,   மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக இருந்தது. அன்றைய புலியூர்க்கோட்டத்தின் ஒரு பகுதியான குன்றத்தூர் வளநாட்டில்தான் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் தோன்றினார்.  

தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தொண்டை மண்டலம்  என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு, அதற்கு ஜயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது. தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது.  வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணைஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள் ஆகும். இது இன்றைய ஆந்திரமாநிலத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் இன்றைய தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி , திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 





A few years ago,  30th May 2013 was the 9th day of Sri Varadharajar  Uthsavam.. the day  being  Thiruvonam [the first Thiruvonam after the Chithirai Brahmothsavam],  Varadhar had purappadu in the morning and in the evening there was  purappadu of Sri Parthasarathi perumal.  Here are some photos taken on that occasion.

 

Adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.5.2021 











2 comments:

  1. Very nice. பெரும்பாணாற்றுப்படை வரிகளின் விளக்கம் சிறப்பாக உள்ளது. Nice photos

    ReplyDelete