இன்றைய காலகட்டத்தில்
மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர். கொரோனா தீநுண்மி உலகோரை பயமுறுத்தி உள்ளது. இந்த
கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும் !!
ஆயிரம் ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும். நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர். ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.
வரலாறு மிக முக்கியம்
அமைச்சரே !! ..
.. .. பள்ளி நாட்களிலே நாம் படித்த சரித்திரம் யாது ? - கிழக்கு இந்தியா வாணிக குழுமம்
இந்தியாவுக்கு வந்து, படியெடுக்காமல், பல மன்னர்களை ஏமாற்றி இந்தியாவை ஆள ஆரம்பித்தது. பின்னாளில் மொத்த பாரதமும் [உலகின் பல்வேறு நாடுகளும்]
ஆங்கிலேயருக்கு அடிமையாயின. அந்த அடிமை காலத்தில்,
கல்வி, தொழில் நுட்பம், இரயில் போக்குவரத்து போன்ற பற்பல நல்லவை நமக்கு நேர்ந்தன. கருணையுள்ள நம்மை ஆண்ட வெள்ளையரிடம் இருந்து காந்தியடிகள்
கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் பெற்று தந்தார். பின்னர் நேருஜி தலைமையில் காங்கிரஸ்
கட்சி பல ஆண்டுகள் ஆண்டது !!
வெள்ளையர்கள் கற்று தந்ததா ! நம் நாகரிகம் !! .. .. நாகரிகம் (civilization) என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட பழங்குடிகள் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள வளர்ந்த சமூகங்களை குறிப்பதா ? இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான civis என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரிக சமூகத்தின் ஒரு வடிவமாகும்.
மனித குலத்தின் உச்சகட்ட உரிமைமீறல் .. .. கொடூரம், மிக தவறான வன்கொடுமை - அடிமுறை. இந்த மனிதத்தனமற்ற மிருகச்செயல் தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரரகள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டனர். அடிமைமுறை மெசபடோமியாவின் 'ஹம்முராபியின் நீதி'களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக தெரிகிறது. ரோமானிய உலகத்தில் அடிமை முறை பெருமுக்கியத்துவத்தை வகித்தது. இப்போது இங்கிலாந்தில் வெடிக்கும் போராட்டங்கள் முன்னாள் அடிமையுகத்தின் அத்துமீறல்களை கண்டிப்பவையே ! ~ அதனாலேயே ராபர்ட் கிளைவ், சர்ச்சில் உட்பட பலரது சிலைகள் மாசுபடுத்தப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன ! பண்டைய இந்தியாவில் மனிதர்களை அடிமைகளாக வாங்கி விற்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) என்னும் கிரேக்கர், சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் கிரேக்க தூதுவராக இருந்து எழுதிய யாத்திரை குறிப்புகளில் இதை பற்றியும் எழுதி உள்ளாராம்.
Perhaps our biggest failing is – not recording or not creating a history of ours !
ஆம் நம்மை ஆண்ட குப்தர்களுக்கும், அசோக, புலிகேசி, சாளுக்கியர்களுக்கும், சேர, சோழ, பாண்டிய பல்லவர்களுக்கும், அவர்தம் மூதாதையருக்கும் சரியான முறையில் வரலாற்றைப் பதிவு செய்ய தெரியவில்லை. நமது சிறப்பு வாழ்வியல், மேலைநாட்டு அறிஞர்களால் - கதை, கட்டுக்கதை, புராணம் என எள்ளி நகையாடப்பட்டது. கிரேக்கர்கள், சீனர்கள், அராபியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற அந்நியர்கள் எழுதியிருப்பவற்றின் அடிப்படையில்தான் இந்துஸ்தானத்தின் வரலாறை உருவாக்கவே முடியும். இவைதான் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் நம்மைப் பற்றிச் சொல்லியிருக்கும், நமக்கே அளித்து இருக்கும், நம் ஆழ்மனதில் படிந்திருக்கும் ’பேருண்மைகள்’.
வரலாற்றை மாற்ற இயலாது ! ஆனால் புதிய வரலாறு படைக்க இயலும் - வரலாற்று ஏட்டின் பக்கங்களில் நம்மைப்பற்றிய விஷயங்கள் சரியானவையாக எழுத வைக்க இயலும். வரலாற்றை விட, அரசியலை விட, நிகழ்வியலை விட, பொருளாதார இயலை விட, விளையாட்டுகளை விட - நம் வாழ்வியல், நமது சம்ப்ரதாயம் காத்தல் நமது தலையாய கடமை.
எம்பெருமானுக்கும் அவனது அடியார்களுக்கும் இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் - இதுவே நம் வாழ்வின் அடிப்படை. நமது கர்ம பலன், நமது பிறவியின் லட்சியம். எனவே நாம் அனுதினமும் திருக்கோவிலுக்கு செல்வோம், நம் சம்பிரதாயத்தின் படி, எம்பெருமானை வணங்கி, அவன் உகக்க கனிகள், மணம் மிக்க பூக்கள் சமர்ப்பித்து, அவன் உறையும் அற்புத ஆலயங்களையும், அங்கே கைங்கர்யங்கள் செய்பவர்களையும் பேணி பாத காப்போம். திருவல்லிக்கேணி போன்ற திவ்யதேசத்தில் வசிப்பவர்களுக்கு கைங்கர்யங்கள் செய்ய பற்பல வாய்ப்புகள் தானாகவே அமைகின்றன. ஆனால் இன்றைய நிலைமையில், ஒரு சில திவ்ய தேஸங்கள் தவிர்த்து, பல திவ்ய தேஸங்களில் அருளிச் செயல் கோஷ்டி, வேத பாராயணம் சாதிப்பதற்கோ அல்லது நித்யபடி க்ரமங்கள் நடப்பதற்கோ, திருமடப்பள்ளி, மங்கல இசை, திருக்கோவில் சுத்தம் பண்ணுதல், பாதுகாப்பு போன்ற பலவற்றுக்கு வழியின்றி உள்ளது. இத்தகைய திருக்கோவில்களில் தன்னலமற்று கைங்கர்யம் செய்யும் - அர்ச்சகர்கள், மற்றைய எல்லா பணியாளர்களை பேணுதல் நம் கடமையே !!
இதோ இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் நம்பெருமாள் அரங்கனிடம் மையலுற்ற பாசுரம். நாமும் எங்கெங்கும் உள்ள ஸ்ரீவைணவ திருக்கோவில்கள் உரை எம்பெருமானிடம் அடிமையுற்று, அவனடி தாள் பணிந்து, கைங்கர்யங்கள் செய்து உய்வோமாக !!
மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்த டக்கி
காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலையிருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத்தானே.
குளுமையுடன் பரந்து விரிந்து பாயும் திருக்காவேரி சூழ்ந்த கோயிலிலே கண்வளர்ந்தருளும் திருவரங்கத்தானே ! இந்த லோகத்தில் எம் போன்ற சாதாரண மக்கள் விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை மறந்து, அவரிடம் எமக்குள்ள ஆசைகளை விட்டுவிட்டு ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து, ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும் அறிந்துகொண்டு, ஐந்து புலன்களையும் ( இந்திரியங்களையும் ) ஏனைய தேவையற்ற விஷயாந்தரங்களில் போக வொட்டாமல், தம்முள்ளே பதிய அடக்கி, அத்தகைய கேட்ட குணக்கேடுகளை அடியோடே நம் தலை மீதிருந்து ஒதுக்கி வைத்து, அற்புதமான திருவரங்கத்தில், பள்ளிகொண்டு இருக்கும் உனது திருவாசலிலே ஒரு காவலராகவேனும், காவலாளராக) வாழ்ந்து உஜ்ஜீவிக்கின்ற சோம்பியிருக்குமவர்களையும் கூட எம்பெருமான் உகந்து வாழ்வளிக்க வல்லன் - அவனே என்னையும் காக்கட்டும்.
எம்பெருமானின்
திருவடி நீழலில் சரணம் புகுவோம், அவனுக்கு உனக்கும் கைங்கர்யங்கள் செய்வோம். ... எம்பெருமானின்
அடியார்களிடத்திலே அன்பு காட்டி, அவர்களுக்கு மனம் உனக்கும் விஷயங்களை மட்டுமே செய்வோமாக
!!
Reminiscing the blissful
moments in life – here are some photos of
‘pathi ulavuthal’ on 5.3.2021 – ie., evening of day 4 of Sri Azhagiya
Singar special brahmothsavam at Thiruvallikkeni – Sri Azhagiya singar purappadu
to vahana mandapam for Chandra prabhai vahanam. Praying our Emperuman for the
welfare of the society, total eradication of Covid 19 and people living in
peace and good health.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.5.2021.
நன்றி : ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்ரபந்தமும், நமது ஆச்சார்யர்களும், திராவிட வேதா எனும் அற்புத அருட்கிடங்கின் உரையும்
🙏 தாசன். அருமை, என்றும் போல்!
ReplyDelete