Sunday, March 7, 2021

Sri Azhagiya Singar Churnabisheka purappadu 2021

Sri Azhagiya Singar Churnabisheka purappadu 2021

இன்று காலை (7.3.2021) திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகியசிங்கர் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்திலே ஆறாம் நாள் - காலை சூர்ணாபிஷேகம் முடிந்து, பெருமாள் மிக அழகான மணம் மிக்க மாலைகளுடன் தங்க சப்பரத்திலே புறப்பாடு கண்டருளினார்.  எம்பெருமான் அத்தாணியுள்  அமர்பவன்.   அத்தாணி என்பது -  சிறப்பான ஆசனம்; அரியணை, அரியாசனம்.     தெள்ளியசிங்கபெருமாள் மிக அழகிய மாலைகளோடு சேவை சாதித்தார். 



அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.




சூர்ணாபிஷேகம் சிறப்பு.:     சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டுபெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம்அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120  பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின்   *திருச்சந்தவிருத்தத்தில்* இருந்து ஒரு பாசுரம் :  

வாள்களாகி  நாள்கள்  செல்ல நோய்மை குன்றி  மூப்பெய்தி

மாளுநாளதாதலால்  வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே

ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்ததன்றியும்

மீள்விலாத போகம்  நல்க வேண்டும்   மால பாதமே. 

ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே, நம்மை காப்பற்றவல்லன். 24 மணிகள் கொண்ட ஒவ்வொரு தினங்களும்,  நமது ஆயுளை அறுக்கும் வாள்கள்போன்று கழிய,  பலவகை வியாதிகளாலே சரீரம் பலவீனமடைந்து,  கிழத்தனமும், மனச்சோர்வும், நம்மை கவனிப்பாரில்லையே என சோர்ந்து   மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது என பயமும், பதைபதைப்பும் வரும் முன்னரே, எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனுக்கு  ஆட்பட்டிருப்பதே நன்மையென்று நன்கு உணர்ந்து,  நம்பெருமாளை தொழுது ஏந்துவோம்.  எம்பெருமானின்  திருவடிகளே 'மீள்வு இலாத போகம்' - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகம்.  அதை எனக்கு நல்குவீராக என எம்பெருமானிடத்திலே மனமுருகி பிரார்த்திப்போம்.

 On 6th day of Brahmothsavam at Thiruvallikkeni  Divyadesam for Sri Thelliya Singar – first it is  ‘Choornabishekam’, and then  purappadu in Thanga chapparam.  In the  purappadu,   ‘Thiruchanda Virutham’ given to us by Sri Thirumazhisai Azhwaar is  rendered.   These 120 songs fall under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.  

Here are some  photos taken during the morning  purappadu of day 6 of Special brahmothsavam on 7.3.2021   

adiyen Srinivasadhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar) 














No comments:

Post a Comment