Wednesday, March 10, 2021

Sri Azhagiya Singar Ananda Vimanam 2021 ~ Sa dadarsha vimanam !!

At Thiruvallikkeni divaydesam during the brahmothsavam of Sri Parthasarathi Perumal and Sri Azhagiya Singar – 6th day morning purappadu would be in ‘Punniya Koti viamanam’ and for Azhagiya Singar again in the evening of 9th day – it would be a slightly modified vimanam -  which    gets referred to as ‘Sada darsha vimanam’ in all official communiqué.   




இன்று  10.3.2021 திரு அழகியசிங்கர் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு 9ம் உத்சவம் இரவு கண்ணாடி பல்லக்கு; தெள்ளியசிங்கனுக்கு அற்புதமான ஆனந்த விமானம்.  ஸ்ரீஅழகியசிங்கர் பேயாழ்வார் கோவில் தெரு வழியாக எழுந்து அருளி, திருமொழி செவி மடுத்து, விமானத்தில் எழுந்து அருளி, குளக்கரை, பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.  

Dravidian architecture  has been in prominence for over thousand years now.  It consists of  pyramid shaped temples which are dependent on intricate carved stone in order to create a step design consisting of many statues of deities, warriors, kings, and dancers. These type of temples are abundant in the Southern states and flourished during the various kingdoms of Pallavas, Cholas, Cheras, Pandyas, Chalukyas, Vijayanagara empire and Hoysalas.   Some are also found in parts of Srilanka, Maldives and Southeast Asia.  In this style of Temples -     the principal part is the Vimanam, the porches or Mantapams which precede the door to the garbagriha,  Gate-pyramids, Pillared halls or choultries. Besides these, a temple always contains tanks or wells for water—to be used either for sacred purposes.

In recent times, this vahanam gets referred to as ‘Sada darsha vimanam’ in all official communiqué – in the panchangam and in the posters.  A good friend of mine clarifies that is not appropriate to term it ‘sathadarsha vimanam’ .. ..  in Sanskrit,   it is saha dadarsha, which means the glorious Emperuman as seen under the vimana. In our sannidhi it is Anandha vimaanam only. Sa dadarsha vimanashca madhye bhaskara rochishaha  ~  meaning, He was seen under the vimaana blazing brilliantly like sun.  So the Vimanam is Ananda vimanam – and the radiance is of His. 




 எம்பெருமானை ஆழ்வார்களின் பாசுரங்களை பாடி போற்றி வணங்குவோர்க்கு எல்லா நலனும் சர்வ நிச்சயமாய் கிட்டும்.  இந்தோ இங்கே கலியனின் வாய்மொழி - திருமொழி பாசுரம் :

மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்

கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,

கைந்நின்ற வேற்கைக்   கலியன்   ஓலிமாலை,

ஐயொன்று மைந்தும் இவை  பாடியாடுமினே. 

இந்த பூலோகத்திலே  அநுபவிக்க வேண்டியிருக்கின்ற  பாவங்கள்  ஒழிவதற்காக -  திவ்யமான  திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான திருமகள் கொழுநனுடைய ஸர்வ்வ்யாபியான திருவடிகளை முடிமேற்கொள்ளுமவராய்,  கையும் வேற்படையுமாய் நிற்பவரான திருமங்கையாழ்வார் அருளிச் செய்த  சொல்மாலையாகிய ஐந்தும் ஐந்தும் (இப்பத்துப் பாசுரங்களையும்)   வாயாரப்பாடி ஆடி ஆனந்திப்பீர்களாக !  .. .. அவ்வாறு கலியனின் வார்தைகளாலான பாசுரங்களை பாடி எம்பெருமானை நினைத்து ஆடுவோர்களுக்கு எல்லா நலனும் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கும்.   

Here are some photos taken during that glorious purappadu of Sri Azhagiya Singar.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.3.2021

PS: My special thanks to my friend Kuvalai Raghavan & www.tamilvedham.org
Vahana photos – thanks to Sri Thirumalai Vinjamoor Venkatesh (Jilla) 
















1 comment: