Monday, February 8, 2021

Sri Parthasarathi Yanai vahanam 2021 : எழில்வேங்கடமலை மேல்* தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

தம்பகம்  என்பது  ஒன்றுக்கும் பயன்படாது அங்கங்கே முளைத்துத் தீய்ந்துபோகும் தாவரவகை !!

Of the many vahanams during Special Brahmotisavam 2021 at Thiruvallikkeni – 8.2.2021 night was interesting .. .. many of us were waiting on the sides of the vahana mantap – (generally one would wait straight with folded hands as Emperuman comes out on vahanams) – with uproar when the golden elephant with Sri Parthasarathi on top comes out, it would be a glorious darshan to have – as the vahanam emerges out. 




Elephants always attract me and the first attraction is its trunk and ivory.  An adult African elephant's trunk is about seven feet (two meters) long! It's actually an elongated nose and upper lip.  When an elephant drinks, it sucks as much as 2 gallons (7.5 liters) of water into its trunk at a time. Then it curls its trunk under, sticks the tip of its trunk into its mouth, and blows. Out comes the water, right down the elephant's throat.  An elephant's trunk is a fusion of its upper lip and its nose. Filled with more than 100,000 muscles, this huge appendage is both powerful and extremely dexterous. An elephant can use its trunk to rip a limb from a tree or to pick up a single blade of grass.    Elephants also use their trunks as snorkels when they wade in deep water.  

The ancient kingdoms of South India had perennial rivers, monsoon forests and many elephants.  Elephants played a great role in many wars and were treated as a great wealth for the Kingdom.  The anthologies and epics of Sangam literature have given heroic admiration to elephants. Elephants are majestic – the special battalion of elephants was sought after … its thick hide would protect from injury ~ the high riding portion gave the rider a good view to attack…   

At Thiruvallikkeni divyadesam,  in the  brahmothsavam day 6 morning  would be  Churnabishekam and golden chapparam.  In the  evening, it is  the majestic golden   ‘Yaanai vahanam’  in sitting posture  for Sri Parthasarathi Perumal.  Thirukovil battar clad in white silken robes sitting behind the Perumal with chamaram is  a wonderful sight.    

Elephants are the largest land animals on Earth, and they're one of the most unique- animals, too. With their characteristic long noses, or trunks; large, floppy ears; and wide, thick legs, there is no other animal with a similar physique.  Contrast to their size they have relative small eyes.  Most experts recognize two species of elephant: the Asian elephant (Elephas maximus) and the African elephant (Loxodonta africana), who live on separate continents and have many unique features.  Scientists are now presenting that   pachyderms could distinguish among the sounds made by different groups of humans. It turns out that elephants, widely known as highly intelligent mammals,  can identify different sexes, ages and even different ethnicities in human voices, a remarkable talent that underscores the animals' sensitivity to social cues.

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி  ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம்.  ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா,  வாரணம், குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டனவாம்.  யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.  பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.  





"யானை புக்க புலம் போல"  - பிசிராந்தையார் - மன்னன் அறிவுடை நம்பிக்கு வழங்கிய அறிவுரை மிகவும் சிந்திக்கக் தக்கது. அந்த வரிகளின் அர்த்தம் :-  விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கி  யானைக்குக் கொடுத்தால், அது யானைக்கு  பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், அவ்வுணவு யானையின் கால்களால் மிதிபட்டு பெருமளவில் அழியும்.  அது போல அரசனானவன்  வரி திரட்டும் முறையை கட்டமைத்து மக்களை வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும்.   

திவ்ய பிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது.   நம்மைக் காக்கும் எம்பெருமான் , கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடிசேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்,  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.     "வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" - என்கிறார்.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது. குலசேகரர் அழகிய திருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின் மீது அமர்வது கூட வேண்டாம் என்கிறார்.

 

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*

இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*

எம்பெருமானீசன் எழில்வேங்கடமலை மேல்*

தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

 

தன்னைக் பார்க்கின்றவர்க்கு  அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற  மதங்கொண்ட யானையினது கழுத்தின் மீது அமரும்  சுகங்களையும், ஐசுவர்யத்தையும் அரசாட்சியையும் விரும்ப மாட்டேன்:   எமது தலைவனும் எம்பெருமானுமான  ஸ்ரீமன் நாராயணன் வாழும்  அழகிய திருமலையிலே தம்பகமாய் (புதராய்- ஒன்றுக்கும் பயன்படாது அங்கங்கே முளைத்துத் தீய்ந்துபோகும் தாவரவகையாகவேனும் )  நிற்கும்படியான  பாக்கியத்தை   உடையவனாகக்கடவேன் ~ என்பது குலசேகரர் வாக்கு !!  

இந்த வருடம் நடந்து வரும் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம் நாள் 8.2.2021 அன்று  எடுக்கப்பட்ட  சில படங்கள் இங்கே :   கஷ்டங்கள் எல்லாம் விலகி எவ்வெப்போதும் அவரது அருளால் அவரை தினமும் சேவிக்கப்பெறும் பாக்கியத்துடன், இது போன்ற அற்புத உத்சவங்களில் பங்கு கொண்டு எம்பெருமானுக்கு அவர்தம் அடியார்க்கும் கைங்கர்யங்கள் செய்யும் வாய்ப்புகளை தடையில்லாமல் தர ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானை வேண்டி வணங்குவோம்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்   திருவடித்தாள்களில் பிரார்த்திப்போம்.

 

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
8.02.2021.

  















No comments:

Post a Comment