Saturday, February 20, 2021

Masi Rohini 2021 purappadu @ Thiruvallikkeni - படிவட்டத்தாமரை பண்டுலகம் நீரேற்று,

இன்று ரோஹிணி ... கண்ணபிரானின் ஜென்ம நக்ஷத்திரம். இன்று திருவல்லிக்கேணியிலே  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.   ஸ்ரீபேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.  ஒரு பாசுரம் 'மாகாயமாய் நின்றமாற்கு' என முடிவு பெறும்.  மூன்றாம் திருவந்தாதி, அந்தாதி ஆனதால் அடுத்த பாடல் 'மாற்பால் மனஞ்சுழிப்ப' !! .. மாகாயம் என்றால் என்ன ?


கொஞ்சம் தமிழ் இலக்கணம் அறிவோம்.  மொழிகளில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்களுண்டு.  எல்லா மொழியிலக்கணங்களும் மொழியில் பயன்படும் சொற்களைப் பெயர் என்றும், வினை என்றும் பாகுபடுத்திக் கொள்கின்றன.  மாதவா, கோவிந்தா, மாடு, வாஹனம், நாதஸ்வரம் போன்றன பெயர்சொற்கள்.  பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.  பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.  பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெறும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர்.  தமிழில் பொருட்பெயர் என்பது பொருளைக் குறிக்கும் பெயர். பொருள் உருவமாகவோ, அருவமாகவோ இருக்கும். பொருளைக் குறிக்கும் பெயர்கள் பொருட்பெயர்கள் ஆகும்.

காயம்  என்றால் :  அடி முதலியப்பட்டதனாலான புண், வடு.  காயத்தின் பிற அர்த்தங்கள் : உடல்,  ஆகாயம், உறைப்பு; காரம்,   பெருங்காயம், ஐங்காயம், காழ்ப்பு -முதலியன.  காயம் என்றால் ஆகாயம் என்றும் பொருள் உண்டு. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், புள்ளிமயங்கியலில் ‘விண் என வரூஉம் காயப் பொர் வயின்’ என்ற நூற்பா உள்ளதாம். விண் என்ற ஆகாயத்தை உணர்த்தும் பெயர்ச்சொல் என்பது பொருள்.




Sriman Naryana in His Vamana avatar accepted gift of land, then grew in such gigantic proportions that His crown ripped through the space and extended beyond the Universe – We, the followers of Sriman Narayana knew His exploits too well and always look at His Lotus feet and there is nothing for us to think of or worry about other than our Saviour ~ the most benevolent Sriman Narayana.  Sri Peyalwar says : 

படிவட்டத்தாமரை பண்டுலகம் நீரேற்று,

அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம்,

ஆகாய மூடறுத்து அண்டம்போய் நீண்டதே,

மாகாயமாய்  நின்றமாற்கு. 

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ எனும்  சித்தர் பாடல் அறிவோம்.  காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது  

பேயாழ்வார் தமது இந்த பாசுரத்தில் வாமனனாய்  மூவடி மண் கேட்டு - மண்ணளந்து, விண்ணளந்து மேலும் ஓரடி கேட்டு மகாபலியை ஆட்கொண்ட த்ருஷ்டாந்தத்தை ரசிக்கின்றார்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்  முன்னொரு காலத்தில், பூமி தானம் வாங்கிக்கொண்டு,  தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை, தனது திருவடியினால் அளப்பதற்காக (மாகாயமாய்  நின்றது) பெரிய திருமேனியாய் விஸ்வரூபம் எடுத்து  வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,   நீண்ட திருவபிஷேகமானது மேலுலகங்களின் வழியாகச் சென்று  அண்ட கடாஹத்தளவாக வளர்ந்து நின்றதே !!  இஃது என்ன ஆச்சரியம்!  என எம்பெருமானின் மேன்மையை விவரிக்கின்றார்.

Here are some photos of Sri Parthasarathi Perumal on the occasion of Masi Rohini purappadu this evening.

 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.02.2021  











1 comment: