Saturday, December 5, 2020

Thiruvallikkeni Thirukkarthigai purappadu 2020 ~ 'maavali', the spectacular fireworks of palm tree !

30.11.2020   - அன்று பௌர்ணமி .. கார்த்திகை பௌர்ணமி - மிக அழகான நிலவு மேகக்கூட்டங்களிடையே ஒளிந்து விளையாடியது சிறப்பாக இருந்தது.

 



Those of us interested in Cricket would have observed this for sure – ‘palm trees’.   Palms are symbolically important in the Caribbean, appearing on the coats of arms of several Caribbean nations and on the flag of the West Indies cricket team. It is stated that there are about  191 genera and 2339 species of Arecaceae, the palm family.  Ever imagined a beach without the beautiful palm tree? .. .. the  air that we breathe and that surrounds us is full of millions of interesting compounds. Some of these compounds can be harmful to our health and some of them can affect things like weather and climate,” explains an atmospheric chemist at the University of Cambridge.  The Arecaceae are a botanical family of perennial climbers, shrubs, acaules and trees commonly known as palm trees (owing to historical usage, the family is alternatively called Palmae.

On the same purappadu on Thirukarthigai day (30.11.2020)  in the open space in front of Sri Parthasarathi temple, suddenly palm leaf structure was spruced up – expectations ran high – because for more than 8 months, Perumal has not come out of the mahadwaram and this day being Thirukarthigai – there were some news about purappadu and ‘chokkapanai’  .. .. last time I wrote about ‘maavali’ – having heard but not having seen it anywhere.  This year thanks to a resourceful post by Mr Veeramani Veeraswami and photos taken by Mr Senthilkumar Gurunathan, could visualize this better ! 

மாவளி சுளுந்து என்பதை கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  டிவி மின்சாரம் போன்றவை இல்லாமல் கிராமத்து தெருக்களில் இரவு நேரங்களில் விளையாடி, கயிற்றுக்கட்டிலில் உறங்கிய அனுபவம் உண்டா ? - தெருவில் படுத்து வானத்து விண்மீன்களை எண்ணியது உண்டா ? சொக்கப்பனை கொளுத்துதல் என்பது ஆலயங்களில்  கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். படபடவென வெடிக்கும் பனைமர ஓலைகளுடன் மக்களுடைய எல்லா கஷ்டங்களும் ஒழிந்து ஓடும் என்பது ஐதீஹம்


30.11.2020 அன்று திருக்கார்த்திகை தீபம். திருக்கோவில், சுற்றுக்கோவில் சன்னதிகள் அனைத்திலும் திருவிளக்கு ஏற்றப்படுகின்றது. ஒவ்வொரு திருக்கார்த்திகைக்கும் ஸ்ரீபார்த்தசாரதி புறப்பாடு உண்டு.  நாம் சிறப்பாக கொண்டாடும் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.   இந்த வருஷ அற்புதம் கொரோனா தீநுண்மி காலத்தில்,  எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி புறப்பாடு, சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணாழ்வார்     சாற்றுமுறைகள்  - கூடவே திருக்கார்த்திகை தீப உத்சவம்.  கார்த்திகை புறப்பாட்டின் போது சொக்கப்பனை கொளுத்துதல் உண்டு. இது காய்ந்த பனை ஓலைகளால் ஆனது.  நகர்ப்புறத்தில் இதன் நடுவே தீபாவளி பட்டாசுகளையும் சொருகி வைப்பர்.     பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. ஒரு தாவரத்தின் எல்லா பாகங்களும் பயன் தருவது பனைக்கு உள்ள சிறப்பு. பஞ்சங்களில்  பனங்கிழங்கு உணவாக பயன் பட்டிருக்கிறது. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.  பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்கள் கிடைத்துள்ளன.

On this glorious day 30.11.2020, Sri Parthasarathi Emperuman in His resplendent splendour bedecked with ornaments came out and Thiruppanar preceded Him.  He came to the 36 pillared mantap, presented maryathai for Swami Nammalwar and then lit chokkapanai.  Iramanusa noorranthathi was rendered by Divyaprabandha goshti – so what a great day as thousands had great darshan of Emperuman.

Amidst all fears and apprehensions – there is hope ! .. on Thirukarthigai day, we light ‘chokkappanai’ – one of dried leaves – with wishes that all misgivings, difficulties will vanish like ash.  

இன்றைய புறப்பாட்டின் மற்றைய   சிறப்பு  "சொக்கப்பனை ".. .. .. காய்ந்த பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்து கோவில்களின் முன்னால் கார்த்திகை பண்டிகையன்று கொளுத்துவார்கள்.  இம்மரம்  திருக்கார்த்திகை தினத்தில்  ஆலயத்தின் முன்பெ  வெட்டவெளியில் நடப்படும் - பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பில் நடுவே பட்டாசு மத்தாப்புகளும்  கூட இடம் பெறும்.  இவ்வருஷம் திருக்கோவிலுக்கு முன்பு உள்ள வெட்டவெளியில்  36 கால் மண்டபத்துக்கு, ஸ்ரீஆண்டாள் நீராட்ட மண்டபத்துக்கு இடையில் வழக்கத்தை விட சிறிய சொக்கப்பனை ஏற்பாடானது. திருக்கார்த்திகை புறப்பாட்டின்  போது எடுக்கப்பட்ட "சொக்கப்பனை " படங்கள் இங்கே.  

தீபத் திருவிழா அன்று  திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றுவார்கள். எல்லா வீடுகளிலும்  அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள்.   சில கிராமங்களில், கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய்வர். சிறுவர்   சுளுந்தைச் சுற்றித் தீப்பொறிகள் சிதறும்படி செய்து மகிழ்வர்.

 ‘chokka panai’ is  made of palmirah trunk and leaves stuffed with rice bran etc., ….. people put fireworks also into this bonfire.  This symbolizes burning of bad behavior and unwanted elements ~ the lamps symbolize blossoming knowledge. திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் ! விரைவில் திருக்கோவில்கள் திறக்கப்படட்டும்.  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும். 

 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி 

 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
5.12.2020













 

திரு வீராசாமி அவர்களின் மாவளி பற்றிய பதிவில் இருந்து சில இங்கே : “சொக்கப்பனையும் மாவளியும்”  ~  “ அருகிவரும் பாரம்பரியங்கள்”.

இரண்டுக்கும் பனைமரமே ஆதாரம். (பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்). கார்த்திகைத் திருநாளில் சிவப்பரம்பொருள் ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.   

கற்பகத் தருவான பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றன. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்து விட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.  

திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்குத் தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள்.  சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு.  

சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. அதே நேரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஏனெனில் அங்கு மலையே பிரம்மாண்டமான சொக்கப்பனை.

கார்த்திகைத் தீப நாளில் "மாவளி" சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும்.அதற்கும் பனம்பூ தான் உதவுகிறது. கார்த்திகை தீப நன்னாளில், கோயில்களில் தீபமேற்றுவார்கள். வீட்டுப் பூஜையறை துவங்கி, வாசல், மாடிப்படிப் பகுதிகள், என வரிசைக் கட்டி தீப ஒளி ஜொலிப்பதே பேரழகு.  இப்படி வீடும் கோயிலும் ஒளிமயமானதாக இருக்க... தெருவில் சிறுவர்களும் சிறுமிகளும் மாவளி சுற்றி விளையாடுவார்கள்.  இதிலென்ன ஆச்சரியம் தெரியுமா... இந்த மாவளியிலிருந்தும் வட்டமாக ஒளிச் சுடர் பிரகாசித்துச் சுற்றும். 

இன்றைக்கு உள்ள சிறுவர்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. அதாவது, பனம்பூவினை (பனம் பூக்கள் மலரும் காம்பு.) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள். பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். . பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ... அப்படியாகக் காட்சி தரும். அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர் சிறுவர்களும் சிறுமிகளும்! 

வீடு, கோயில். வீதி என எல்லா இடங்களிலும் ஒளி வடிவில் நீக்கமற நிறைந்து, ஈசன் அருள்கிறான் என்பதாக ஐதீகம்! பெயர்க் காரணம்:

மாவளி  ..   மா + ஒளி = மாவொளி; மா - என்றால் பெரிய என்று பொருள். ஒளி - என்றால் வெளிச்சம். மாவொளி என்பதே மருவி மாவளி என்று அழைக்கப்படுகிறது.

மாவளியின் பயன்கள்:  சுற்றுச்சூழல் மாசற்ற இயற்கைக் கரிமருந்து.காண்பவருக்கு களிப்பை உண்டாக்கக் கூடியது.முற்றிலும் பாதுகாப்பான தீக்காயம் ஏற்பட வாய்ப்பே இல்லாத விளையாட்டு.பொருட்செலவே இல்லாத வானவேடிக்கை. 

நாம் செய்ய வேண்டியது:

மறந்தும் மறைந்தும் வரும் மாவளி சுற்றும் கலையை மிகப்பெரிய அளவில் திருவிழாவாக முன்னெடுப்பது. தமிழனின் இயற்கை வானவேடிக்கையை உலகறியச் செய்வது. நச்சுப் புகையையும் , தீக்காயங்களையும் உண்டாக்கும் பட்டாசுக்கு மாற்றாய் மாவளியைப் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பண்டைய பாறை ஓவியத்திலும் மாவளி சுற்றுவது பதிவாயிருக்கிறது என்பது மிகவும் வியப்பில் ஆழ்த்தும் செய்தியாகும். ஆம்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஐகுந்தம் என்னும் இடத்தில் இவ்வோவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனில்,பண்டையக் காலங்களிலே மாவளி சுற்றுவது தமிழக மக்களிடையே தொன்றுதொட்டு வந்த பாரம்பரியம் என்பது விளங்கும். 

'`கூந்தற்பனை'’ என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்கும். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள். `'தாடகை'’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரைப் பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். இராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு. 

மாவளி  புகைப்படங்கள்:   அன்பர் Senthilkumar Gurunathan அவர்கள் பகிர்ந்தவை. 






1 comment:

  1. Very very nice informations along with super photos.. Thanks

    ReplyDelete