Thursday, November 12, 2020

Aippaisi Hastham ~ Praying Sri Varadha Rajar - பாவக்காடு* தீக்கொளீஇ* வேகின்றதால்!!

இன்று 12.11.2020  ஐப்பசி ஹஸ்தம் - திருவல்லிக்கேணியில் நாம் ஸ்ரீவரதராஜபெருமாள் புறப்பாடு சேவித்திருப்போம் ! - கொரோனா காரணமாக பல மாதங்களாக எம்பெருமான் புறப்பாடு இல்லை - நமக்கு பெருமாள் செவிக்கும் வாய்ப்பில்லை ..  அஹோ ! என்ன கொடுமை - திரைப்படங்களுக்கு அனுமதி உண்டு,  படப்பிடிப்புக்கு அனுமதி உண்டு, இன்ன பிற விஷயங்களுக்கும்  அரசு அனுமதி உண்டு. மக்கள் தெருக்களில் சர்வ சாதாரணமாக திரிகின்றனர்.  ஆனால் திருக்கோவில்களில் கெடுபிடி; சேவை நேரங்களில் கட்டுப்பாடு ! எம்பெருமானின் புறப்பாட்டிற்கு கட்டுப்பாடு ! விந்தை, வினோத மனிதர்கள் !!

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் இன்று - அதன் மூன்றாம் வரி : இறவுசெய்யும் பாவக்காடு *தீக்கொளீஇ*   வேகின்றதால்  -  *தீக்கொளீஇ*  - என்னது இது ? - தீயால் சுடப்பட்டு ! = நெருப்புப்பட்டு என பொருள் தரும் - எனினும் இவ்வாறு ஒரு வார்த்தையுடன் "இ" இறுதியில் சேர்ந்தால் எப்படி சொல்வது ?  அதன் அர்த்தம் தான் என்ன ??

 


Life has changed a lot (over the years) is a pithy aphorism.   All living things   change over time. Of all the characteristics of life, this one requires the most careful explanation ~ and there are changes in non-living things too.  There have been lot of changes in the way people live also. In 1970s and 1980s life was simple and different too – there was not so much circulation of money.  People were not so uber rich and did not indulge in luxuries much.

Government job was the most sought after – jokes galored on a peon in LIC being the most sought after person in marriage market.  Private companies offered employment but persons in Govt, PSU, Banks were respected more ! .. .. there Typewriting institutes in dime and dozen.  Learning Typewriting was basic and sort of ensured employment – those who learnt Shorthand were considered skilful and would get prime post with good pay.  My destiny was shaped by Srinivasa Institute, Car Street, Triplicane  and the next day of writing my Degree examination, I got an employment as a Stenographer in a Private firm in Parrys area.  Happy !

Stenographers would remember with gratitude those who taught them shorthand skills and Pitman.  Englishman Sir Isaac Pitman (1813–1897),  presented shorthand system based on phonetics.  In this system of taking down dictations, the symbols do not represent letters, but rather sounds, and words are, for the most part, written as they are spoken. Pitman shorthand uses straight strokes and quarter-circle strokes, in various orientations, to represent consonant sounds.  One characteristic feature of Pitman shorthand is that unvoiced and voiced pairs of sounds (such as /p/ and /b/ or /t/ and /d/) are represented by strokes which differ only in thickness; the thin stroke representing "light" sounds such as /p/ and /t/; the thick stroke representing "heavy" sounds such as /b/ and /d/. Doing this requires a writing instrument responsive to the user's drawing pressure: though special fountain pens were designed, commonly good quality HD pencils were used. 

Phonetics is a branch of linguistics that studies how humans make and perceive sounds, or in the case of sign languages, the equivalent aspects of sign.  The field of phonetics is traditionally divided into sub-disciplines based on the research questions involved such as how humans plan and execute movements to produce speech (articulatory phonetics), how different movements affect the properties of the resulting sound (acoustic phonetics), or how humans convert sound waves to linguistic information (auditory phonetics).   


*தீக்கொளீஇ*   என்பது ஒரு "அளபெடை".  எழுத்தின் இயல்பான ஒலிமிகுந்து மாத்திரையை நீட்டித்தலே அளபெடை எனப்படுகிறது. பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடையின் முக்கிய வகைகள் :  உயிரளபெடை மற்றும்  ஒற்றளபெடை.

தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. முத்தமிழுக்கும் உரிய இலக்கணங்கள் உள்ளன.  தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை; அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று கூறுவர். இவ் எழுத்துக்களை : 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றியலிகரம் 7) ஐகாரக்குறுக்கம் 8) ஒளகாரக்குறுக்கம் 9) மகரக்குறுக்கம் 10) ஆய்தக்குறுக்கம் என 10 வகையாகப் பிரித்து கூறுவர். உயிரளபெடை என்பது உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது ஆகும். (உயிர் + அளபெடை. அளபெடை என்றால், நீண்டு ஒலித்தல் என்று பொருள்). உயிரளபெடையானது, மேலும் :  இசைநிறையளபெடை, இன்னிசையளபெடை மற்றும் சொல்லிசையளபெடை என வகைப்படும்.  பெயர்ச்சொல்லை, வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.சொல்லிசையளபெடை !

இதோ இங்கே எம்பெருமானிடத்திலே அளவற்ற பக்தியுடன் திருப்பல்லாண்டு இசைத்த பெரியாழ்வாரின் பாசுரம் இங்கே : [பெரியாழ்வார் திருமொழி 5-4-2]

பறவையேறு பரம்புருடா நீ  என்னைக் கைக்கொண்ட பின்

பிறவியென்னும் கடலும்  வற்றிப் பெரும்பதமாகின்றதால்

இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்

அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.

பொற்கிழியறுத்து திருப்பல்லாண்டு பாடிய  பெரியாழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவதாகப் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்  பெரிய திருவடியின் மேலேறிக்கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பரம்புருடா” என விளிக்கின்றார்.   கருடாழ்வானான பெரிய திருவடிமேல் ஏறி பயணிக்கும்  புருஷோத்தமனே!, ஸர்வரக்ஷகனான நீ, வேறு கதியற்ற  என்னை ஆட்படுத்திக்கொண்ட பிறகு,  இப்பிறவி எனும்  ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வறண்டுபோய் பெருத்தபாக்கியம் பண்ணினேனாகிறேன்;.   இவ்வாத்மாவை  முடிக்கிற  பாபங்களானவை  தூய நெருப்புப்பட்டு வெந்து போயின.   ஞானமாகிற  அம்ருத நதியானது  மேன்மேலும் பெருகிச் செல்லாநின்றது, என எம்பெருமானிடத்து சேர்ந்தமை குறித்து ஆனந்திக்கின்றார் விஷ்ணுசித்தர்.

Here are some beautiful photos of Sri Varadha Rajar taken during purappadu on 04.06. 2018  at Thiruvallikkeni divaydesam.  WE pray Emperuman that Corona becomes a thing of past sooner, the World recovers back to normalcy and We are in a position to have His continuous unhindered darshan at all divyadesams.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.11.2020.

நன்றி:  திவ்யப் பிரபந்த பாசுர விளக்கம்:  கட்டற்ற அற்புத சம்பிரதாய களஞ்சியம் : திராவிட வேதா இணையம் ; கச்சி ஸ்வாமிகள் - திரு உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி விளக்க உரை. 

தமிழ் இலக்கணம் பல இணைய தளங்களில் இருந்து.








  

3 comments:

  1. ஸ்வாமின், 🙏🙏 . அற்புதமான பதிவு. அல்லிக்கேணி பெருமாள் சேவை அற்புதம். இப்போது சந்நிதி சேவை இருக்கிறது என்று நினைக்கிறேன். வீதி உலாக்கள் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் என்று உங்கள் பின்னே நின்று நானும் பிரார்த்திக்கிறேன்.

    கட்டுரையில் அளபெடை பற்றி எழுதியதை நான் பள்ளியில் படித்த (?) ஞாபகம் மறந்து விட்டது! இப்போது நீங்கள் விளக்கியதுபோல் தமிழாசான் விலாகாவில்லையோ, என் சிறுபுத்தியில் பதியாவில்லையோ!
    கட்டுரையில் type writing, SH, தமிழ் இலக்கணம், ஆழ்வார் பாசுரம், பார்த்தசாரதி தரிசனம், covid, அரசின் உத்தரவுக்கு ஏக்கம் என்று எண்ணற்ற எண்ணங்கள்! அபூர்வம்.
    அடியேன், தாசன்.

    ReplyDelete
  2. Sir. Thank you so much for the nice words of appreciation. Perumal sevai is allowed but from a distance. Yesterday being Annakoota uthsavam, Uthsavar was in the maha mantapam with arputha sarruppadi, which is today's post. Purappadu - let us all keep praying .. thanks again sir

    ReplyDelete