Monday, October 12, 2020

Swami Manavala Mamunigal Sarrumurai vaibhavam 2008 ! @ Thiruvallikkeni

The whole Sri Vaishnava World is rejoicing at the very thought of sarrumurai celebrations of great Acaryar.  Generally Acaryar Sarrumurai “Aippaisyil Thirumoolam” will fall in November and 4th (or 5th) day would be Deepavali.  This year it starts today  Monday, 12th Oct 2020 (Purattasi 26) – from 17.10 would be Navarathri uthsavam and on Wednesday 21.10.2020 would be the grand Sarrumurai celebrations.     

ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க   தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  பூர்வாசார்யர்கள்  பரம்பரையில் நாம் கொண்டாடுவது நம் ஸ்வாமி  மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும்பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள்.     

ஸ்ரீவரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆசார்யர்  பாழ்பட்டு கிடந்த  ஸ்ரீரங்கம்   கோயில் நிர்வாகத்தை ஏற்று  இராமானுஜர்  காலம்  போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன்  ஆச்சாரியர் திருவாய் மொழி பிள்ளை  ஆணையின்  பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை  நிறுவி இராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர்.   மாமுனிகள் தம் விசாலமான ஸத் ஸம்ப்ரதாயப் புலமையை எல்லார்க்கும் பயன்படும்படி அனைத்து சாஸ்த்ரங்களையும் சேர்த்து மிகச் சுருக்கமாக வழங்கினார், மாமுனிகளின் ஔதார்யத்தையும் மஹாவித்வத்தையும் அவரது வாழ்க்கையும், அவரது நூல்களும்,  அவர்தம் ஏற்படுத்திய நெறிமுறைகளும், தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன. 


Hailed as Periya Jeeyar, Mamunigal who  established our Thennacharya Sampradhayam believed and practised the tenet of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu].   At Thiruvallikkeni and other divyadesams, 10 day Thiruvavathara Uthsavam of our Acharyar is   celebrated grandly. 

நம் ஆசார்யர் அருளிச்செய்த நூல்களிலே 'ஆர்த்தி ப்ரபந்தம்' பெருமை பெற்றது.  பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என ஸ்ரீமன் நாராயணனை புகழ்ந்தது போல - இராமனுசனிடத்திலே மிக மிக ஈடுபாடு பெற்ற நம் பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்  தமது முதல் பாசுரத்திலேயே 

'வாழி யதிராசன், வாழி யதிராசன்,

வாழி யதிராசனென வாழ்த்துவார்* வாழியென

வாழ்த்துவார்  வாழியென வாழ்த்துவார்* தாளிணையில்

தாழ்த்துவார் விண்ணோர் தலை ** 

தொழுது எழு என் மனனே என நம் சிறப்பு வாய்ந்த யதிகட்கெல்லாம் தலைவனான ஸ்ரீராமானுஜரை வாழி, வாழி, வாழி என வாழ்த்துபவர்களின் திருவடிகளில் விண்ணகத்து நித்யஸூரிகளும் தலை பணிவார்களாம் ~ அவ்வளவு சிறப்பு எம்பெருமானாரை பின்பற்றும் ஸ்ரீவைணவர்களுக்கு உண்டு என்கிறார் நம் சுவாமி மணவாள மாமுனிகள். 

Reminiscing the glorious past and reliving the happiness – here are photos of our Acaryar Swami Manavala Mamunigal sarrumurai purappadu 12 years ago on 2.11.2008.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

'ஆச்சாரியன் திருவடிகளே சரணம்'

'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் '.

 

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.10.2020






















No comments:

Post a Comment