Saturday, October 3, 2020

Mamunigam 650th Sarrumurai vaibhavam ~ எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே!

Triplicanites are ecstatic.  On Oct 12, (Purattasi 26) starts the uthsavam of  Swami Manavala Mamunigal.  On  Wednesday, Oct 21 occurs the sarrumurai vaibhavam of Acaryar being Aippaiyisil Thirumoolam.   It is grand 650th  year now.




மயக்கும் துயர்ப்பிறவி எனும் இம்மானுட பிறவியில் எவ்வளவோ துயரங்கள்.  எல்லா கடின காலங்களிலும் நம்மைக்காத்து நம் இடர் நீக்குவான் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே!.  நமது ஸ்ரீவைணவ சம்ப்ரதாயம் அற்புதமானது.  ஆழ்வார்களின் பாசுரங்களும், மிகவும் ஒழுக்க சீலர்களும் கற்று தெளிந்தவர்களுமான ஆசார்யர்கள் நமக்கு வழிகாட்டி எம்பெருமானிடத்திலே சேர்விப்பர்கள்.  எம்பெருமானிடம் சரணடைந்து, அவன் திருவடி சேர்வதே நமக்கு நன்மை பயக்கும்.

பெரியாழ்வாரின் பக்தி அபரிமிதமானது.  இதோ இங்கே அவரது பாசுரம்.   ஸ்ரீமன் நாராயணனை - எங்கள் நாயகனே !  நான் உன்னுடைய பொருளாக வாய்ந்தபின்பு என்னைப்போல் நன்மைபெற்றார் இவ்வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந்நாட்டிலுள்ள அனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன; இதற்கு மேற்படவும் ஒரு நன்மையுண்டோ?” என்பதை இந்த பாசுரம்.  


There is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations.  Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage.  Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha.  Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..

The Lord once decided to depute Adisesha  to the world on a mission to reform men and women and remain there for 200 years. Adisehsa  spent 120 years as Sri Ramanuja, for the rest of the determined period (80 years) he was reborn as Swami Manavala Mamunigal. That our Acharyar Mamunigal  was a manifestation of Adisesha was proved in an incident when some jealous people set fire to his house but he slipped away to safety under certain compelling circumstances and to continue his task uninterrupted he took to ascetic order. 


Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With transformation of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.   Sooner we will celebrate his 650th Avathara mahothsvam at various divaydesams.  

எம்மனா  என் குலதெய்வமே என்னுடைய நாயகனே! *

நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்*

நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்*

சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.

 

ஸ்ரீமன் நாரணனே  !  எமக்குத் தலைவனே! எங்கள்  குடிக்குப் பரதேவதையானவனே! எனக்கு நாதனானவனே!   .. நான் உன் அளவற்ற அபிமானத்தில் ஓதுகின்ற உடனே,  என்னுடைய, என்னை சேர்ந்தோருடைய, உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும் மூச்சுவிடவும் மாட்டாமல் பறந்து போனவையாயின ..  இவ்வாறு நாங்கள் பெற்ற நன்மையை இந்த உலகத்திலுள்ள வேறு யார்தான் பெறக்கூடும் ?  பூதப்ரேதபிசாசங்களைப் போல், இம்மானுடத்தை உருத்தெரியாமல் ஒளிந்து வந்து  வீழ்ந்து அமுக்கும் கொடியவையான தூறுகளெல்லாம்  அக்கணமே,  ஓடிப்போய் புதர்களில் பாய்ந்து  ஒளிந்து கொண்டன. எனக்கும் என்போன்ற உன்னடியார்க்கும் எதிரிகளே கிடையாது. எல்லா நன்மைகளும் நடக்கின்றன என அறுதியிட்டு உரைக்கிறார் நம் பெரியாழ்வார். 



06.11.2013 was day 9 in the  grand uthsavam of Acaryar  Sri Manavala Mamunigal. ,  Acaryar had thiruther purappadu in the morning and in the evening it was fragrant ‘pushpa pallakku’.    Here are some photos taken during the purappadu.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
03.10.2020.


Add caption








 

No comments:

Post a Comment