ஸ்ரீமன்
நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும்
நடக்காது என்பது திண்ணம். இன்று ஆடி ஸ்வாதி -
ஸ்ரீவைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.
கருடாழ்வாரை
பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் நாம் வணங்குகிறோம். பெரிய
திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம்
- இன்று 'ஆடி ஸ்வாதி"
பொலிந்திருண்ட
கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து
திருவிருந்த மார்வன், - பொலிந்த
கருடன்மேல்
கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல்
கண்டாய் தெளி.
Sriman Narayana appears
riding on the mighty Garuda – to Alwar it is akin to a glorious dark
raincloud lit by a lightning, the most merciful Saviour of the Universe –
Emperuman with lotus dame Sri Mahalakshmi on his chest – provides darshan
seated on Periya thiruvadi Garuda. He ordains his heart, that having seen
Emperuman’s feet through knowledge, asks Heart to rise and
understand the greatness of eternal Saviour Sriman Narayana.
Sri Parthasarathi Perumal Masi magam Garuda Sevai.
During the Brahmothsavam on
3rd day morning [in Thondai mandalam] – there would be Garuda SEvai.
Thousands of devotees would assemble and wait before the main gopuram to have
darshan of Emperuman coming out of the Temple atop Garuda. Unlike most other vahanams, Perumal would
come out of the sannathi in the vahanam itself !
In our Sampradhayam ~ of
those who serve Emperuman, Adhi Seshan (Ananthan) and Garudazhwar are very important. Garudan is known as Periya Thiruvadi, as he
carries Sriman Narayana on his shoulders.
In Ramayana, the same fortune occurred to Aanjaneya, who is known as
Siriya Thiruvadi.
In every divyadesam, there
would be Garudazhwar in front of the main sannathi with folded hands – at Thirumala,
just before having darshan of Lord SRinivasa – one can have darshan of the
beautiful Garuda. At Thiruvarangam, Garuda stands tall (14 ft) in standing
posture in ‘Aalinadan thiruchurru’. At
Nachiyar Kovil divyadesam
(Thirunaraiyur) – famously ‘Kal Garudan’ has sannathi and the Garuda
sevai attracts thousands. In the holy
Thirumala – seven hills comprise of Sapthagiri – they are : Vrushabhadri,
Anjanadri, Neeladri, Seshadri, Narayanadri, VEnkatadri & Garudathri.
ஸ்ரீ கருட பகவான் ஆடி சுக்லபஞ்சமி நன்னாளில் வேதத்திலும் ஜோதிஷ சாஸ்திரங்களிலும்
மிகவும் உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்தத் திருநட்சத்திரத்தில்தான்
கருடாம்சமான பெரியாழ்வாரும் அவதரித்தார்.
புராணத்தில் சொல்லியவாறு பிரஜாபதிக்கு
(தஷனுக்கு) கத்ரு என்றும், வினதை என்றும் பெயர் பெற்ற இரு அழகான
பெண் மக்கள் இருந்தனர். அவ்விருவரும் காச்யப முனிவரை மணம் புரிந்தனர். கத்ரு, சம ஆற்றல் கொண்ட ஆயிரம் பாம்புகள்
தனக்கு மகன்களாக வேண்டும் என்று விரும்பினாள்.
வினதையோ, கத்ருவின் அந்த ஆயிரம் பிள்ளைகளின் வல்லமையை (பலம், ஆற்றல், உருவம்,
வீரம் ஆகியவற்றில்) விஞ்சும் இரு மகன்கள் வேண்டும் என்று விரும்பினாள். ஒரு சமயம் அந்த இரு சகோதரிகளுக்கும் போட்டி ஏற்பட்டு உச்சைஸ்ரவஸ் குதிரையை பற்றி தங்களுக்குள் பந்தயம்
கட்டி, அதில் கத்ரு சூழ்ச்சியாக விநதையை அடிமைப்படுத்தியது
வேறு.
கஸ்யபருக்கும் வினைதைக்கும்
கருடன் மிக்க பலசாலியாகவும் , தன் விருப்பப்படியே
நினைத்த உருவெடுக்க வல்லவனும், நினைத்த இடத்திற்குச் செல்ல தகுந்தவனும், நினைத்த அளவிற்கு
சக்தியைப் பெருக்கிக் கொள்ளத் தக்கவனும், காந்தி மிக்கவனும், நெருப்புக் குவியல் போன்ற ஒளியுடன் பிரகாசமாக பிறந்தான். மின்னலைப் போன்ற பார்வையுடனும், யுக முடிவின் நெருப்புக்கு
ஒத்த காந்தியுடனும், இருந்த அந்தப் பறவையானவன் (கருடன்), பிறந்தவுடனேயே வேகமாக வளர்ந்து,
உருவத்தைப் பெருக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான்.
காஸ்யப முனிவரின் மற்றோரு புத்திரன் அருணன். இவனே சூரியனின் தேரை செலுத்துபவன். இரண்டாவது மனைவி கத்ருதேவியின் புத்திரர்கள், அநேக
கோடி சர்ப்பங்கள். பறவைகளின் அரசன் கருடன் -
பக்ஷிராஜன், சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்பிரியன், மங்களாலயன், கலுழன், ஸ்வர்ணன்,
புள்ளரசு, பெரிய திருவடி எனப் பல பட்டப் பெயர்கள் உடையவன். ஆழ்வார்கள் ஸ்ரீ கருடனை கொற்றப்புள், தெய்வப்புள்,
காய்சினப்புள், ஓடும்புள் என்றும் பெருமாளை 'பறைவையேறு பறம்புருடன்' என பல விதமாகப்
போற்றித் தம் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்..
ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனி ஏற்றம். கோவில் மதில் மேல் வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. அந்த மூலையில் தனியாகக் கருடன் சந்நிதி உள்ளது. கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன.
இந்தக்கருடனுக்கு தினமும் ஆறு காலப் பூஜை நடக்கிறது. ஆடி மாதம் சுவாதி கருட அவதார உற்சவம்
இங்கு நடக்கிறது.
ஸம்ப்ரதாய ரக்ஷணார்த்தமாக மாமுனிகள் நியமித்த அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான எறும்பியப்பா எனும் சுவாமி அருளிச்செய்த
'உத்தர தின சர்யா'வில் இருந்து இங்கே ஒரு பாசுரம் [credits –divyaprabandham.koyil.org]
देविगोदा यतिपतिशठद्वेषिणौ रङ्गश्ऱुङ्गं सेनानाथो विहगव्रुषभः श्रीनिधिस्सिन्धुकन्या
।
भूमानीलागुरुजनव्रुतः पुरुषश्चेत्यमीषाम् अग्रे नित्यं वरवरमुने अङ्घ्रियुग्मं
प्रपध्ये ॥ 24
தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,
யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார், ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய
மேற்பகுதியான விமாநம், ஸேனைமுதலியார், பக்ஷிராஜரான ( விஹகவ்ருஷப:) கருடாழ்வார், ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன், திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார், பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன,
நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, பரமபதநாதன்,
என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில், மணவாளமாமுனிகளுடைய, திருவடியிணையை, தினந்தோறும்,
தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.
On this glorious day, fall at the feet of Periya Thiruvadi and pray
to our Acharyas, Azhwargal and Emperuman for healthy and long life of all
Srivaishnavas.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.7.2020
Pic of Srirangam Garudasevai credit : Sundarakrishnan
Thiruvarangam Namperumal Garuda Sevai (above 3 photos)
Thiruvallikkeni Garuda Sevai : Sri Parthasarathi
Thiruvallikkeni Garuda Sevai : Sri Azhagiya Singar
Thiruvallikkeni Garuda Sevai : Sri Ramar
Thiruvallikkeni Garuda Sevai : Sri Varadha Rajar
Thiruvallikkeni Garuda Sevai : Sri Ranganathar
Egmore Srinivasaperumal
Very very nice.. கருடாழ்வார் பற்றிய அனைத்து செய்திகளும் மிக மிக சிறப்பு.
ReplyDelete