Saturday, June 13, 2020

Go, worship at Nathan Kovil divyadesam ! ~ நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.


The Aftermath of World War I saw drastic political, cultural, economic, and social change across Eurasia, Africa, and even in areas outside those that were directly involved.  Remember our Colonial rulers used thousands of Indians fighting and dying for them – but without any proper records and acknowledgement in History.  Four empires collapsed due to the war, old countries were abolished, new ones were formed, boundaries were redrawn, international organizations were established, and many new and old ideologies took a firm hold in people's minds. 

The Spanish flu, also known as the 1918 flu pandemic, was an unusually deadly influenza pandemic caused by the H1N1 influenza A virus. Lasting about 15 months from spring 1918 (northern hemisphere) to early summer 1919,  it infected 500 million people – about a third of the world's population at the time.  The death toll may have been anything from 17 million to 50 million, and possibly as high as 100 million, making it one of the deadliest pandemics in human history.

Whether by war or by natural passage of time, some cities which were big and flourishing slowly diminished and vanished in the History of mankind.  For example, the  Dead Cities  are a group of 700 abandoned settlements in northwest Syria between Aleppo and Idlib. Around 40 villages grouped in eight archaeological parks situated in north-western Syria provide an insight into rural life in Late Antiquity and during the Byzantine period. Most of the villages, which date from the 1st to 7th centuries, were abandoned between the 8th and 10th centuries.  

Highly learned Poets praised that one cannot think of anyother God other than the One at this place as the Primordial Lord who is worthy of all paeans and the dance associated with such songs, there is no better city – so worship, bow to this great Lord at this beautiful place, our destination ! – imagine the place ?


சரித்திரம் மனிதனின் பழையவற்றை விவரிக்கும் படம் மட்டும் அல்ல ! -  மானுடத்துக்கு பல விஷங்களை போதிக்கும் பாடமும்.  மிக பரந்து விரிந்து இருந்த பேரரசுகள், பெரிய சக்ரவர்த்திகள் - சில வருஷப்போக்கில் சிதைந்து, இன்று எங்கே உள்ளனர் என்று தெரியாத நிலை.

ஒரு காலத்தில் பெரிய நகரம் என்று இலக்கியங்களில் குறிப்பிட்ட ஊர்கள் இன்று இல்லாமலே போய்விட்டன ! சில சிற்றூர்கள் இப்போது.  பழையாறை அல்லது பழையாறு சோழர்களின்  தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின்  தலைநகராக மாறியது.  பழையாறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கருதப்படும் பஃறுளி ஆற்றின் மிச்சமாகக் கருதப்படுகிறது.  அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்' வரலாற்றுக் காவியத்தில் முக்கியமான இடம்பெறுவது "பழையாறு. குடந்தைக்குச் சற்று தூரத்தில் தென்மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது, என பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட  ஊர் இன்றைக்கு எங்கே இருக்கிறது?  எங்கே போயின அந்த வானை அளாவிய அரண்மனையும் மாடங்களும்?

இது வரலாற்றுப் பதிவல்ல ! ~  இந்த பழையாறு இருந்த இடத்துக்கு அருகே உள்ள ஒரு அழகிய திருக்கோவில் - ஒரு திவ்யதேசம் பற்றியது.  கும்பகோணத்திலிருந்து சுமார்  16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும்  நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.  திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது  நாதன் கோவில்.

நாதன் கோவில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்  திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். இக்கோவிலின் மூலவர் ஜெகந்நாதன் (வீற்றிருந்த திருக்கோலம்) தாயார் - செண்பகவல்லித் தாயார்.   கோயிலின் விமானம் மந்தார விமானம்.  இத்திருக்கோயில் தட்சண ஜகந்நாதம் என்று அழைக்கப்படுகின்றது.

விண்ணகரம் என்றால் சிறப்பான உயர்ந்த நகரம் என்று கொள்ளலாம்.  ஈஸ்வரன் கோவில்கள்  ஈச்சரம் என்று பெயர் பெற்றதைப் போல , எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனது கோவில்கள் விண்ணகரம் என சிறப்பிக்கப்பட்டன.  நம் திவ்யதேசங்களில் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.   1)  கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் எனப்படும் திருவிண்ணகரம் 2)  தாடாளன் கோவில் - சீர்காழி எனும் காழிச் சீராம விண்ணகரம்  3) வைகுந்த விண்ணகரம் 4) அரிமேய விண்ணகரம் 5) பரமேச்சுர விண்ணகரம் & 6) நந்திபுர விண்ணகரம் எனும் நாதன் கோவில்.   இத்திருக்கோவிலின் பிரதான சன்னதியின்  இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்திவர்மன் எனும் அரசன் ஏற்படுத்திய ஊர், அவன் வணங்கி திருப்பணிகள் செய்த கோவில் என்றும் இதனைக் கூறுவர். 'நந்தி பணி செய்த நகர்' என்று அனுபவிக்கிறார்  திருமங்கையாழ்வார்.

As we travel around 15 kms from Kumbakonam, the city of Temples and temple tanks towards another beautiful place – Raja Mannargudi, there is this beautiful divyadesam called  ‘Nathan Kovil ’ ~ more ornately as Thiru Nandipura Vinnagaram, now a village in the outskirts of Kumbakonam.   Constructed in the Dravidian style of architecture, this temple is more than 1000 years antiquity.

Literally the name and sthalapurana would associate the sacred bull of Shiva, Nandi as having  his curses relieved by worshipping Sriman Narayana  here and hence the place is called Nandipuram. All the shrines and water bodies associated with the temple are named after Nandi.  However, the temple was built and maintained by Pallava King Nandivarma, and hence Nandipura Vinnagaram is in the Shenbakaaranya Kshetram, which runs from here up to Mannargudi.

எண்ணில்  நினைவெய்தி  இனியில்லையிறை  என்று  முனியாளர் திருவார்,
பண்ணில்  மலி கீதமொடு பாடியவராடலொடு கூட எழிலார்,
மண்ணிலிது போல  நகரில்லையென வானவர்கள் தாமலர்கள்தூய்
நண்ணி  உறைகின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.

மனத்தால் நினைத்து  ஆராயுமளவில் தாம்  உணர்ந்து  தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி இவரைக்  காட்டிலும் வேறொருவரில்லை என்று  நிச்சயித்து மஹாமுனிகள் அழகுமிக்க இசையினால் நிறைந்த பாடல்களோடு கூட ஸ்துதிகள் செய்ய, அம்முனிவர் தம்   பாட்டுக்குச் சேரத் தாங்களே செய்கின்ற  நர்த்தனங்களுக்குத் தகுதியாக, தேவர்கள் இந்த எழில்மிகு  பூலோகத்தில் இது போலும்  சிறந்த நகர் இல்லை, வேறு எங்கும் இல்லை   என  கொண்டாடி நறுமலர்களை  கொண்டு பூஜித்து,  நித்யவாஸமும் செய்யப்பெற்ற திவ்யதலம் - நந்திபுரவிண்ணகரம், எனும் இது திருத்தலம் என கலியன் மங்களாசாசனம்.

In the broad sannathi enabling very good darshan of Emperuman in sitting posture, moolavar is Nathan – Sri Jagannatha Perumal and thayar is Mahalakshmi as Shenbagavalli thayar.  Nandikeswarar is inside the sannathi. On the other side is Brahma.  This divyadesam is hailed as Bhooloka Vaikundam and darshan here would rid people of their sins and keep them in prosperity.

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலும் மால்யானை யாம்.

வைக்கோல் அறுத்த நெற்கதிர் களத்திற்குக் கொண்டு வரப்பட்டு நெல்மணியையும் வைக்கோலையும் பிரிப்பதற்காக அடிக்கப்படும். நெல் மணிகளை அடித்துப் பிரித்த பின்பு வைக்கோலை புகுத்தி ஒரு போர்க் கோட்டை போல அமைப்பார்கள் (வைக்கோல் போர்). யானை போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வாரி அடிக்கும். போர்க்களத்தில் பகைவர்களை வாரி அடித்த பின்பு யானை தன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகுந்துகொள்ளும். போர்க்களத்தில் யானை பொலிவுற்று சிறந்து விளங்கும் என யானையையும் வைக்கோல் போரையும் சிலேடையாக பாடிய காளமேகப் புலவர் பிறந்த ஊர் இது.

Here are some photos of the ancient Divyadesam directly maintained by Sri Vanamamalai Mutt.  The thiruvarasu of HH Sri Vanamamalai Ramanuja Jeeyar Swamigal 20th Pattam Sri Periya Kaliyan Ramanuja Jeeyar Swamigal is here. The photos of Emperuman are with the permission of pbase.com/svami & Sri Kuvalai Srivathsan Swami.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.6.2020










No comments:

Post a Comment