Sunday, April 12, 2020

darshan at Sri Mukthinath divyadesam - சாளக்கிராமமடைநெஞ்சே


காடுகள் என்றால் கொடிய வன விலங்குகளும் இருக்கும் - அழகான மான்களும் இருக்கும் !  -   கொடியவனம் ஏகி அங்குள்ள எம்பெருமானை சேவிக்கும் முயற்சி நாம் எடுக்காமல் போகலாம்.  கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன, சீற்றமிலாதான் -  சீதை மணாளனை சென்று சேவிக்கலாம் இத்தலத்தில்.



Mustang Caves or Sky Caves of Nepal are a collection of some 10,000 man-made caves dug into the sides of valleys in the Mustang District of Nepal.    Explorations of these caves by conservators and archaeologists have been going for centuries – they are situate  on the steep valley walls near the Kali Gandaki River in Upper Mustang. Research groups have continued to investigate these caves, but no one has yet understood who built the caves and why they were built.

Maharajadhiraja Prithivi Narayan Shah (1723–1775) was the last ruler of the Gorkha Kingdom and first monarch of Kingdom of Nepal, also called Kingdom of Gorkha.  Prithvi Narayan Shah is credited for starting the campaign for the unification of Nepal. He proclaimed his kingdom  as Asal Hindustan ("Real Land of Hindus") due to North India being ruled by the Islamic Mughal rulers.  He followed Hindu social code Dharmaśāstra.  His rule extended over Mustang.  Mustang District  is in Dhawalagiri Zone of northern Nepal, and  is one of the seventy-five districts of Nepal. The district, with Jomsom as its headquarters, covers an area of 3,573 km²  - and is a remote area.  Mustand is an ancient kingdom, bordered by the Tibetan plateau and sheltered by some of world's tallest peaks, including 8000-meter tall Annapurna and Dhaulagiri.  

It is a place for mountain hikers and is in news recently as Nepal authorities  rescued 115 trekkers, mostly foreigners, stuck in various trekking routes in northern Nepal after the government imposed a week-long nationwide lockdown to control the spread of the novel coronavirus. According to the district administration, 50 trekkers and eight mountain guides were rescued on Wednesday, and nine Nepali and 48 foreigners were rescued on Thursday.  The rescued trekkers have been sent to Kathmandu via two passenger buses.

For a Srivaishnavaite, the purpose of life is to do kainkaryam to Sriman Narayana and His devotees ~ in that pursuit, we visit various Divyadesams associated with Emperuman and that way, those 108 holy shrines sung by Alwars hold a predominant place.  Monday, 30th April 2018 would remain a day to remember forever in my life .. **~ for we had darshan at the Holy Mukthinath (Salagrammam divyadesam) It is unique – a divyadesam outside Bharatha kandam – situate at an altitude of 3,710 meters (12,172 feet)  at the foot of the Thorong La mountain pass (part of the Himalayas) in Mustang, Nepal. Certainly the one situate at the highest altitude.  The name "Mustang" is derived from the Tibetan word meaning, "Plain of Aspiration” ~ and here is our holy shrine Muktinath.

ஸ்ரீமன் நாராயணன் எங்கும் வியாபித்துள்ளவன்.  அவனுறையுமிடமான திவ்யதேசங்களிலே - பல ஸ்வரூபங்களில் நமக்காய் தர்சனம் அளித்து காக்கும் எம்பெருமான்,  தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே வீற்றிருக்கிறான்.


Jomsom has an airport and is reachable from Kathmandu & Pokhara.  The local name for Muktinath is Chumig Gyatsa (Hundred Waters). The tradional caretakers of Muktinath-Chumig Gyatsa are the Tibetan Buddhist Chumig Gyatsa ('Muktinath') nuns.  Muktinath is Sanskrit name, has religious overtone and emotional attachment for Sri Vaishnavas.   Mukthi is salvation and the Emperuman in sitting posture here -  Muktinath, is the provider of salvation.

From Jomsom one travels by Jeep for an hour or so ~ and from that jeep point – further 45 mins to an hour by walk or on a pony takes to you a small beautiful temple dedicated to Sriman Narayana.  In front of the Temple there are two little ponds and around the temple, chill water flows in 108 taps.  Locals say that the  most suitable time to visit is from March to June.  When we reached there it was pretty cold, with temperature hovering around 1◦C.


The bhagwan of Mukthinath (Salagrammam divyadesam)  is  in sitting posture, made of pure Gold with Sridevi and Bhumadevi nachiyars on either side.  This is considered “Svayam Vyakta Ksetram” akin to Thiruvarangam, Naimisaraynam, Thirumala & Thotathri.  Emperuman here has been sung by Sri Periyalwar as Sri Salagramamudaiya nambi  and Thirumangai Alwar urging devotees to reach Chalagramam – a total of 12 pasurams.  The pontiff of Srivilliputtur  Sri Manavala Mamunigal Mutt His Holiness 23rd peetathipathi  Sri Sri Sri Satakopa Ramanuja Jeeyar Swamiji installed the idols of Andal (Sri Gotha Devi), Ramanuja charya , and Manavala Mamunigal in this sacred place.  

In Nepal and specifically here (on Gandagi river) – is gotten the holy ‘Salagramma’ silas, black in colour – special trait of Emperuman found only here.  We Srivaishnavaites rever them as form of Emperuman Himself and worship them at home in our Thiruvaradhanam.   .. .. and nearer the holy precincts at such an altitude, there is a small beautiful mutt of Sri  Sri Sri Sri Tridandi Chinna Srimannarayana Ramanuja Jeeyar Swamiji where one can have darshan of 1000s of Salagramma murthis.

கலையும் கரியும்  பரிமாவும்  திரியும்  கானம்  கடந்துபோய்,
சிலையும்  கணையும்  துணையாகச் சென்றான்  வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலை  நீரணைகட்டி மதிள்நீரிலங்கை  வாளரக்கர் தலைவன்,
தலை  பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.

காடுகள் என்றால் கொடிய வன விலங்குகளும் இருக்கும் - அழகான மான்களும் இருக்கும் !  -  மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள், திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று, வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு, (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும், அலைக்கின்ற நீரையுடைய கடலிலே மலை கொண்டு சேது அணை கட்டி மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள கொடியவாட்களை ஏந்தும்  அரக்கர் தலைவனாகிய  இராவணனுடைய பத்து தலைகளையும் அறுத்துத்தள்ளி  வெற்றி கொண்டவனாக  எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய  ஸ்ரீஸாளக்ராமத்தை  நெஞ்சே அடை  என்று வழி காட்டுகிறார் நம் கலியன்.

Sarangapani, the Lord Sri Rama known for His prowess in holding  bow and arrow,   went to the forest obeying the words of His step-mother.  In relentless pursuit, he went through the forest roamed by wild deer, elephants, boars, lions  and horses.  In upholding dharma, He made a bridge of rocks over the lashing sea, entered the fortified Lanka city.  In the battlefield He eliminated the mighty King of rakshasas – Ravana the ten headed demon-king.  Thirumangai Mannan directs us to go to this divyadesam Salagrammam and have darshan of Lord Sri Rama of such a fame.

(30.4.2018) அன்று  இமயத்தில் மிக உயரத்தில் அமைந்துள்ள அதி அத்புதமான 'சாளக்ராமம்’ என்றும் 'முக்திநாத்’ என்றும் பிரசித்தி பெற்ற திவ்யதேசத்தில் எம்பெருமானை சேவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புத ஸ்தலம் மிக மிக உயரத்தில் நேபாளத்தில் அமைந்துள்ளது.  இந்த திவ்யதேசத்தை பெரியாழ்வார் (2 பாசுரங்கள்) மற்றும் திருமங்கை மன்னன் (10 பாசுரங்கள்) - மங்களாசாசனம் செய்துள்ளனர்.   நமது திருக்கோவில்களிலும்  ஆசார்ய திருமாளிகைகளிலும், வைதீகர் இல்லங்களிலும் – தொன்று தொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் போற்றப்பட்டும் வருவது சாளக்ராமம் எனும் மூர்த்திகள்.  இவை  உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் இருக்கும்.  இவற்றை மிக பத்திரமாய் பெருமாள் மூர்த்திகளுடன் வைத்து வழிபடுவது நம் சம்ப்ரதாயம்.  பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப ஸ்ரீமன் நாராயணனின்  பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. இவை அங்குள்ள கண்டகி புண்ணிய நதி தனிலே தானாகவே கிடைக்கப்பெறுமாம்.   நாங்கள் சென்ற இச்சமயம்  கண்டகி நதியில் நீரோட்டம் இல்லை.

இன்று சாளக்ராமம் என பூஜிக்கப்படும் திருக்கோவில் மிக அருகே திரிதண்டி  ஸ்ரீமன் சின்ன ஜீயர் சுவாமி மடம் அமைந்துள்ளது.  எம்பெருமானை சேவித்து திரும்பும்போது இங்கேயுள்ள ஆயிரக்கணக்கான  சாளக்ராம மூர்த்திகளையும்,  ஸ்ரீ ஆண்டாள், எம்பெருமானார், ஸ்ரீ மணவாள மாமுனிகளை சேவிக்கும் பாக்கியம் அமைந்தது. இங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

~ adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
12th Apr 2020.














No comments:

Post a Comment