Devaprayagai
~ 'கண்டம் எனும் கடிநகர்' திவ்யதேசம்
– Kandam
enum Kadinagar.
நமது
திவ்யப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழியுடன் துவங்குகிறது. இது பிள்ளைத்தமிழ் எனும் இலக்கிய
வடிவில் உள்ளது. கண்ணபிரான் பிறந்தது, காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, அம்புலி, காது குத்த
அழைத்தல், மலர்களால் அலங்கரித்தல், நீராட்டு என பல பருவங்களில் கண்ணனை, பெரியாழ்வார்
சீராட்டுகிறார். கண்ணன் திரு அவதாரச் சிறப்பை
கொண்டாடும் இப்பாசுரங்களில் 'புனித கங்கையின்' பெருமையும் சொல்லப்படுகிறது !
இமயமலை பனி படர்ந்தது. பொதுவாகவே
மலைகள் மீது ஏறிச்சென்று வழிபடுதல் கடினம்.
திருமங்கை மன்னனோ - திருவதரி பாசுரங்களில் - அங்கே செல்வது மிக கடினம் என்பதை
தெளிவுபடுத்துகிறார்.
உறிகள்போல் மெய்ந்நரம்பெழுந்து
ஊன் தளர்ந்துள்ளமெள்கி .. … …. …..
~ சரீரத்திலுள்ள நரம்புகள், வயோதிகத்தில் புடைத்து, உறிகள் போல் வெளியே தோன்றி - உடலில் சதை கட்டுக்குலைந்து, வலிமையின்மையால்
உள்ள உறுதியும் குலையும் காலமும் வருமுன்பேயே வதரியாசிரமம் சென்று வணங்க வேண்டும் என்கிறார் கலியன். நாம் பாவங்கள் நிறைய செய்கிறோம் ! ~ இந்த
பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் எப்படி போக்குவது
? - பெரியாழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்.
வடநாட்டு திவ்யதேசங்களில் 'கண்டம் எனும் கடிநகர்' ஒரு முக்கிய திவ்யதேசம். கடி நகர்
என்பது உரிச்சொல் ~ கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, வாசனை,
பிரகாசம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி,
புதுமை,ஆர்த்தல்(ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று
பொருள்களை உணர்த்தும் சொல்லாம்.. முற்காலத்திலே
இந்நகர் காவல் சிறப்பு மிக்க நகராக திகழ்ந்து இருக்கலாம். இது எங்குள்ளது? நறு நாற்றம்
கமழும் பெரிய சோலைகளினால் சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ளது ! . அங்குக் கோயில்
கொண்டிருப்பவர் யார்? புருடோத்தமன் என்ற திருநாமம் கொண்ட எம்பெருமான்.
மலைப்பாதையில் புனித கங்கையை பார்த்து பரவசித்துக்கொண்டே பிரயாணிக்கையில்
- இரன்டு நதிகள் சங்கமம் பிரமிக்க வைக்கும்.
அலக்நந்தா, பாகீரதி எனும் புண்ணிய நதிகள்,
இரு நிறங்களில் வந்து ஒன்றாக சங்கமாவது கண்கொள்ளா கட்சி. பச்சை வண்ண நிறத்தில் அலகநந்தாவும், சற்றே கலங்கிய
பழுப்பு நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கின்றன.
Of the many
divyadesams – Thiruvathari and Salagrammam present difficulties primarily due
to their locations. The object in life is to do kainkaryam, have darshan of our
Emperuman at various divyadesam and as ordained by Thirumangaimannan – one
should travel to Badrinath in their prime of youth, when they are healthy.
On the way to ‘Jai
bolo Badrinath’ is the beautiful Devaprayag.
A mystic place where the holy rivers Bhagirathi and Alaknanda meet,
merge into one and take the name ‘Ganga’. Lord Rama and his father Emperor Dasharatha did penance here. The main temple
of here is ‘Raghunath Temple’, dedicated to Lord Rama. (Purushothama). The good city of
Khandam stands on the banks of the Ganga which has the power to wash away in a
trice the Karmas collected over seven lives. It is the abode of the adorable
Purushottama who bears the plough, the mace, the bow, the radiant discus, the
conch, the axe and the dagger as his weapons – praises Periyazhvar.
Before
entering the temple, one can have bath at the holy ghat at the confluence of
Alakananda and Bagirathi. This is the place where sage Dev Sharma led his ascetic life, giving
birth its present name, Devprayag.
தேவப்பிரயாகை - திருக்கண்டமென்னும்
கடிநகர் 108
வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வாரால்
பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து
1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்து
எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்
புருஷோத்தமன்.. பெரியாழ்வாரால் 10 பாக்களால்
பாடல் பெற்ற இத்தலத்தில் அலகனந்தாவும் பாகீரதியும் சங்கமிக்கின்றன. ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி
என்று அழைக்கிறார்கள். நம் இராமானுசர் மங்களாசாசனம் செய்த புண்ணிய பூமி. ஆதி சங்கரர் இங்கே விஜயம் செய்து புனர் நிர்மாணம்
செய்துள்ளார்.
உழுவதோர் படையும்
உலக்கையும் வில்லும் ஒண்சுடராழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கலமுடைய மால்புருடோத்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய
பாவம் இறைப்பொழுதளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக்
கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடி நகரே.
பொய்ம்மையிலும் தவறுகளிலும் பிறழ்வது மானுடப்பிறவி. இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும்
தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை
யெல்லாம் நொடிப்பொழுதினிலே போக்கிவிடும்படியான பெருமையையுடைய தேசம் - கங்கையின்
கரைமேல் அமைந்துள்ள கண்டம் என்னும்
கடி நகர் எனும் திவ்யதேசம். உழுவதற்கு உரிய
கருவியாகிய கலப்பையும், உலக்கையையும், ஸ்ரீசார்ங்கத்தையும், அழகிய தேஜஸ்ஸையுடைய திருவாழியையும்
- மழுவொடு, கோடாலியையும் வாளையும் ஆயுதமாகவுடைய ஸர்வேச்வரனுமான புருஷோத்தமப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இந்த
திவ்யதேசம் சென்று வணங்கி வழிபட்டால் நமது எல்லா பாவங்களும் தொலைந்து, அனைத்து நலன்களும் திளைக்கும் என்கிறார் நம் பெரியாழ்வார்.
"Devaprayāga"
means "Godly Confluence" in Sanskrit. Devaprayag is the sacred sthal
where the two heavenly rivers, Alakananda and Bhagirathi confluence, to form
the holy Ganga. On a terrace in the
upper part of the village is the temple of Shri Raghunathji, built of huge
stones, pyramidal in form and capped by a white cupola. Besides the two seen,
there is the mythological Saraswati which originates from Mana Village in
Badrinath and in Devprayag, the river comes from the feet of Shri Raghunath Ji. It is firmly believed that the footprints of Lord Rama exists here at "Ram Kunda".
Devprayag is
surrounded by 3 Godly peaks, named Giddhanchal Parvat, Dashrathanchal Parvat,
and Narsinghancal Parvat. Giddhanchal Parvat is on top of Raghunnath Ji temple.
Devprayag is the home of priests of
Badrinath. They are known as "Pandas". More than thousand years ago, Adiguru
Shankaracharya came to the area in Badrikashram in the 8th century, many South
Indian Brahmins from different areas too
accompanied him and stayed here. Sweets
made of milk khoa and white sugar balls are offered to the Lord in these
places.
Raghunathji Temple
(also called Thiru Kandam enum Kadi Nagar) in Devprayag, in Tehri Garhwal
district in Himalayas is in present day Uttarakhand. It lies 73 km from Rishikesh on the Rishikesh
- Badrinath highway. The temple was consecrated
by Adhi Shankara and later expanded by Garhwal Kingdom. The temple is so old as the place is associated
with the epic Sri Ramayana. Sri Rama did
tapas here and the Vataka tree (Banyan
tree) here would withstand all earthly disasters and would remain through ages.
The Pandavas performed penance at this place before the Mahabharat war. Sage
Bharadwaja is also believed to have performed penance at this place and became one of the Saptarishis.
The expansions by
the Garhwal Kingdom is referred with the
name in a copper plate inscription in the temple from the period of Raja Man
Shah during 1610. The temple received
contributions from other rulers of the dynasty like Sahaj Pal, who donated a
bell to the temple in 1551, as indicated by the inscriptions in the temple. It was damaged during an earthquake during
1893 and was built by the local king subsequently.
On 3.10.2019,
on way to Sri Badrinath, we had the fortune of worshipping at this holy place –
with rendering of Thirupallandu, Thiruppavai, and Periyazhvar thirumozhi pasurams on the
divyadesam
~adiyen Srinivasa
dhasan [Mamandur Veeravalli Srinivasa Sampathkumar]
7th Dec
2019.
Badri Yatra : The tour was well organized by Thirumayilai Seshadri @
9677126311; Thiru Karnataka BR Raghavan Vadhyar Swami @ 9840562920;
Govindarajan Mamandur @ 9042963544
ஓம். அற்புதம்.
ReplyDeleteஅழகான எளிமையான தெளிவான எழுத்துநடை ஜீ.... வாழ்த்துகள்
ReplyDeleteJi .. your wishes means a lot to me ... Many thanks for your support. Pranams
Delete