Sri Boothathazhwar
Sarrumurai 2019 – avathara sthalam sirappu !
ரொம்ப பெருமையாக இருக்கு
! ~ மேடைகளில் பங்குகொள்போர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல்
!! ~ before proceeding, this is the photo of His avathara
sthalam ~ in all probability, you had been in this vicinity, without ever
realizing its significance and greatness
~ in case you are not
able to identify – for sure you have seen this place and have taken a photo /
selfie infront of these magnificent elephants
- this place was in global news
when China’s President Xi Jinping arrived to a lavish welcome in the southern
Indian city of Chennai for his second informal summit with Indian Prime
Minister on 11.10.2019. Xi was treated
to a performance showcasing the local Tamil traditional dance forms on the
runway. Visiting Chennai for his second
informal summit with Prime Minister Narendra Modi on Friday, Chinese President
Xi Jinping opted to travel to tourist town Mamallapuram by road instead of a helicopter
as Chinese leaders, as matter of policy, shun travel by choppers.
நாம் எதற்கெல்லாம் பெருமை
கொள்வோம் ?? ~ பட்டியல் நீளலாம்.. .. .. தம்மைப்
போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்று பெருமை கொண்டவர் நம் நாயகன் .. .. பெருமானின்
இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான
பெருமையினை உடையவன் - : "பெருந்தமிழன் நல்லேன் பெரிது" என்றும் பெருமிதம்
அடைந்தவர் இவர் .. ..
முதலாழ்வார் மூவருள் இரண்டாம்
இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில்,
குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில்
ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே, எம்பெருமானின் கதையின் திருவம்சமமாய் அவதரித்தவர்.
During the rule of
Mahendravarman I (600 CE – 630 CE), Mahablipuram started to flourish as a
centre of art and culture. His patronage helped the creation of a number of the
city’s most iconic landmarks. This period of artistic excellence was duly
continued by his son Narasimhavarman I (630 CE – 680 CE) and subsequent Pallava
kings. Mahabalipuram was already a thriving sea port on the Bay of Bengal
before this time. A significant amount of coins and other artefacts excavated
from this region also indicate a pre-existing trade relation with the Romans
even before it became a part of the Pallava
Empire. Constructed with formidable finesse by the Great
Pallavas in 7th century BC, Mahabalipuram symbolises the confluence of Indian
history, geography and ancient Indian economy. Historical relevance of
Mahabalipuram dates back to the ancient days of Sangam literature and Bhakti
movement that flourished here, eventually contributing to the development of
Dravidian architecture in Tamil Nadu.
ஞானத்தால் நன்குணர்ந்து
நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன்
பேர் சாற்றினால், - வானத்து
அணியமரர்
ஆக்குவிக்கும் அஃதன்றே, நங்கள்
பணியமரர் கோமான்
பரிசு.
பூதத்தாழ்வாரின்
இந்த வரிகள் ஆழ்வாரின் அனுபவத்தை நமக்கு உணர்த்த வல்லன. மிக சாதாரணமாய்
புரிந்து கொள்ள முயற்சித்தால் இப்பாசுரத்தின் அர்த்தம் இவ்வாறு ஆகுமாம் போலே :
எம்பெருமானுக்குப் பல்லாயிரத்
திருநாமங்களுண்டு; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று
ஒரு வகுப்பும், விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும்
கொள்ளத் தக்கன. ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்டரீகாக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி:-
இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை; லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி
: - இத்யாதி திருநாமங்கள் பிந்தின வகுப்பைச் சேர்ந்தவை. ஆக இவ்விரு வகுப்புகளையுந்
திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன்
பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.
Azhwar
offers a simple solution ~ understand and know through revelations and chant
the various names of Sriman Narayana, chanting His names and
worshipping His many avatars and archavatars will secure us a place by
His side in the comity of Gods in heaven.
Sri
Boothath Azhwar at Thiruvallikkeni
ஐப்பசியில்
ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது
'உபதேச ரத்தினமாலையில்' எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார்,
பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார். பகவானின் குணங்களில்
ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தாம் ஆழ்வார்கள் என்று சொல்வர்கள். ஸ்ரீமன் நாராயணன்
மட்டுமே தனி தெய்வம் என்று எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள்,
மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள். இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும்
மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள். இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும்
மதிட்கோவல் இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது
பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்.
வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே பூதம் என்னும்
சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே
சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் பூதம் என்பது
இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. அதாவது பகவத்
பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் இல்லை எனும்
வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால்
பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள்
பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.
Today (5.11.2019) – let us
fall at the feet of Sri Boothath Azhwar and reach Emperuman by singing His
glories and more specifically his prabandham ‘Irandam thiruvanthathi’ part of
Iyarpa
Azhwar Emperumanar Jeeyar
thiruvadigale saranam !!
~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
ஓம் நமோ நாராயணா..
ReplyDelete