இப்புவியில்
பலப்பல கடினங்களை எதிர்கொள்கிறோம் ! .. பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்தில், மானிடர்களுக்கு
யார் தான் அரண் ?
Today – 23rd
Nov 2019 is Karthigai Ekadasi. There
were continuous rain spells in the morning and in the evening, rain clouds were
observed though it did not rain. At
Thiruvallikkeni divyadesam there was grand periya veethi purappadu of Sri Parthasarathi Emperuman ..
இன்று கார்த்திகை மாச ஏகாதசி.
திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் பெரியவீதி புறப்பாடு கண்டருளினார். இன்று எம்பெருமான் அணிந்திருந்த மாலை அனைவரையும்
கவர்ந்தது. முல்லைச்சரமும், அதன்மேல் அழகான வெள்ளை பூக்களின் மீது குருவிவேர் மற்றும்
ஏலக்காய் சேர்ந்து குறுக்கு- நெடுக்காக கட்டங்கள் போன்ற பாணியில் சிறந்த மாலை சாற்றப்பட்டிருந்தது.
காலை நன்கு மழை பெய்தது. மாலை
பெருமாள் குளக்கரை ஏளும் சமயம் வானம் இருண்டு,
மழை மேகங்களுடன் ரம்மியமிக்க காட்சி
It was a beautiful
purappadu on Karthigai Ekadasi day. It
rained in the morning and though it was not even 6 pm, it was getting darker –
the twilight time that offered great darshan of Sri Parthasarathi. Twilight on Earth is the illumination of the
lower atmosphere when the Sun itself is not directly visible because it is
below the horizon. Twilight is produced by sunlight scattering in the upper
atmosphere, illuminating the lower atmosphere so that Earth's surface is
neither completely lit nor completely dark. The farther the Sun is below the horizon,
the dimmer the twilight.
திருவள்ளுவரின்
வார்த்தைகளில் "அரண்" :
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
அதாவது, மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலமும்,
மலையும், அழகிய நிழல் உடைய காடும் உடையதே நாட்டுக்கு அரணாகும். மனிதர்களுக்கு ?
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என அரண் பலவகைப்படும். ஒரு நாட்டில் பகைவர்கள் நுழையாத வகையில் நீர், நிலம்,
காடு, அகழி, மதில்கள், கோட்டை கொத்தளங்கள், என அரண்கள் அமைக்கப்படும். .இவ்வரணில் மூன்று மதில்கள் இருக்கும்.இவை புற மதில்,
இடை மதி, அகமதில் எனப்படும்.ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் (அதில் முதலை
போன்ற கொடிய விலங்குகளும்) காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும்.பகைவர்கள்
காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு
இருக்குமாம்.
நாமடைந்த நல்லரண் எம்பெருமான்தானே ! அருள்மிகு பேயாழ்வார் நமக்கு உரைக்கிறார்.
அரணாம் நமக்கென்றும்
ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த
மொய்ம்பன், - சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
திருவாழியாழ்வானை (சக்கரத்தை) வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரன்
என்னும் கொடிய அரக்கனின் ஆயுளையும் வலிமையையும்
போக்கினை மிடுக்கையுடையவனுமான எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன், நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் - நமக்கு எந்த
பயமுமில்லை ! எந்த குறையும் இல்லை. அப்பழுக்கில்லாத
தூயவனான நாரணன் மட்டுமே - நாம் தகுதியானவனா ?,
நம்முடைய ஞானமென்ன!, ஆசாரமென்ன!, பிறப்பென்ன !! - என எவ்வித தாழ்வுகளையும்
பாராமல் - தன்னிடத்தில் சரணம் என வந்தவர்கள் அனைவரையும் எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே இருந்து காப்பவன். இந்த உண்மையை நன்றாக உணர்ந்து,
ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே, என்றென்றும் கதி (உபாயம்)
என நாம் ஓதி அநுஸந்திப்போமாக !!
ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே ஸர்வரக்ஷகன். இருகையும் தூக்கி அவனிடத்தில் ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும் அவன் மேலேறிட்டு, தம் தலையாலே ஒரு முயற்சியும் செய்யாதவரையும் கூட அவனே ரக்ஷித்தருள்வன்.
To the Q on – ‘Who
is our SAviour’ – Sri Peyalwar offers a simple and direct anser. All that we need to do is - repose one’s
faith totally in Him. Just surrender at
the lotus feet of Sriman Narayana, the God who holds the discuss in His right
hand, He who killed Asura by name Mura.
He saves everyone surrendering unto HIM without asking any Questions,
without looking into those people’s knowledge, following, birth or anything
else. He saves and protects everyone of
Us who have sought refuge in Him. Here
are some photos to today’s purappadu. As
could be seen Sri Parthasarathi was wearing beautiful floral garlands – that of
Mullai, then those big white flowers with strands of kuruviver and cardamom
making a criss-cross pattern.
~adiyen
Srinivasadhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
23rd
Nov. 2019.
No comments:
Post a Comment