Saturday, November 23, 2019

Karthikai Ekadasi purappadu 2019 ~ மானிடர்களுக்கு யார் தான் அரண் ?


இப்புவியில் பலப்பல கடினங்களை எதிர்கொள்கிறோம் ! .. பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்தில், மானிடர்களுக்கு யார் தான் அரண் ? 


Today – 23rd Nov 2019 is Karthigai Ekadasi.  There were continuous rain spells in the morning and in the evening, rain clouds were observed though it did not rain.   At Thiruvallikkeni divyadesam there was grand periya veethi  purappadu of Sri Parthasarathi Emperuman ..

இன்று கார்த்திகை மாச ஏகாதசி.  திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் பெரியவீதி புறப்பாடு கண்டருளினார்.  இன்று எம்பெருமான் அணிந்திருந்த மாலை அனைவரையும் கவர்ந்தது. முல்லைச்சரமும், அதன்மேல் அழகான வெள்ளை பூக்களின் மீது குருவிவேர் மற்றும் ஏலக்காய் சேர்ந்து குறுக்கு- நெடுக்காக கட்டங்கள் போன்ற பாணியில் சிறந்த மாலை சாற்றப்பட்டிருந்தது.

காலை நன்கு மழை பெய்தது.  மாலை பெருமாள் குளக்கரை ஏளும்  சமயம் வானம் இருண்டு, மழை மேகங்களுடன் ரம்மியமிக்க காட்சி

It was a beautiful purappadu on Karthigai Ekadasi day.  It rained in the morning and though it was not even 6 pm, it was getting darker – the twilight time that offered great darshan of Sri Parthasarathi.  Twilight on Earth is the illumination of the lower atmosphere when the Sun itself is not directly visible because it is below the horizon. Twilight is produced by sunlight scattering in the upper atmosphere, illuminating the lower atmosphere so that Earth's surface is neither completely lit nor completely dark. The farther the Sun is below the horizon, the dimmer the twilight. 




திருவள்ளுவரின் வார்த்தைகளில் "அரண்" :
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
அதாவது, மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் உடையதே நாட்டுக்கு  அரணாகும். மனிதர்களுக்கு ?

நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என அரண் பலவகைப்படும்.  ஒரு நாட்டில் பகைவர்கள் நுழையாத வகையில் நீர், நிலம், காடு, அகழி, மதில்கள், கோட்டை கொத்தளங்கள், என அரண்கள் அமைக்கப்படும்.  .இவ்வரணில் மூன்று மதில்கள் இருக்கும்.இவை புற மதில், இடை மதி, அகமதில் எனப்படும்.ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் (அதில் முதலை போன்ற கொடிய விலங்குகளும்) காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும்.பகைவர்கள் காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு இருக்குமாம். 

நாமடைந்த நல்லரண் எம்பெருமான்தானே ! அருள்மிகு பேயாழ்வார் நமக்கு உரைக்கிறார்.
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.

திருவாழியாழ்வானை (சக்கரத்தை) வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரன் என்னும் கொடிய அரக்கனின்  ஆயுளையும் வலிமையையும் போக்கினை மிடுக்கையுடையவனுமான எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்,  நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் - நமக்கு எந்த பயமுமில்லை ! எந்த குறையும் இல்லை.  அப்பழுக்கில்லாத தூயவனான நாரணன் மட்டுமே - நாம் தகுதியானவனா ?,  நம்முடைய  ஞானமென்ன!, ஆசாரமென்ன!,  பிறப்பென்ன !! - என எவ்வித  தாழ்வுகளையும்  பாராமல் - தன்னிடத்தில் சரணம் என வந்தவர்கள் அனைவரையும்  எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே  இருந்து காப்பவன்.  இந்த உண்மையை நன்றாக  உணர்ந்து,  ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே, என்றென்றும் கதி (உபாயம்) என நாம் ஓதி  அநுஸந்திப்போமாக !! 

ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே  ஸர்வரக்ஷகன்.   இருகையும் தூக்கி அவனிடத்தில்  ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும்  அவன் மேலேறிட்டு, தம் தலையாலே ஒரு முயற்சியும்  செய்யாதவரையும் கூட அவனே ரக்ஷித்தருள்வன்.

To the Q on – ‘Who is our SAviour’ – Sri Peyalwar offers a simple and direct anser.  All that we need to do is - repose one’s faith totally in Him.  Just surrender at the lotus feet of Sriman Narayana, the God who holds the discuss in His right hand, He who killed Asura by name Mura.  He saves everyone surrendering unto HIM without asking any Questions, without looking into those people’s knowledge, following, birth or anything else.  He saves and protects everyone of Us who have sought refuge in Him.  Here are some photos to today’s purappadu.  As could be seen Sri Parthasarathi was wearing beautiful floral garlands – that of Mullai, then those big white flowers with strands of kuruviver and cardamom making a criss-cross pattern.

~adiyen Srinivasadhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
23rd Nov. 2019.









Swami Manavala Mamunigal Sarrumurai (Eve) 2019 :


Swami Manavala Mamunigal Sarrumurai (Eve) 2019 :
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***




Friday 1st Nov 2019   was the great day of Acaryan Sarrumurai ~ Aippasiyil Thirumoolam.   In the morning purappadu, the cynosure of eyes were the  spotless white parasols – the divine kodais    ~ 10 sets of them – the divine kodais 20 in no.  ..  ..  The morning of the busy Friday  dawned so gracefully – for those of us would never forget the greatest darshan one would dream -  the divine blessing of  ‘Kaithala Sevai’ ~ [Lord Parthasarathi and consorts being carried in the hands of the battars] – then the umbrellas were getting opened up – spotless white parasols – the divine kodais  ‘Thirumoolam in Aippasi’  the day commemorating the birth of divine Acharyar Swami Manavala Mamunigal.  The purappadu was delayed and started around 10 am – but hundreds of us were waiting for that grand moment of our Acaryan having grand purappadu with our Emperuman Sri Parthasarathi.. .. then there was grand purappadu in the evening – our Acaryar with Emperuman.

                                Acaryar Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Sri  Manavala Mamunigal is the incarnation of Adisesha.   One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation.  Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi. 




                           Of the many works, ‘Upadesa Rathinamalai’ is one which all of us should know and recite regularly.  There are 73 paasurams + thanian given  by Kovil Kandadai annan and another one rendered by Erumbiappa was rendered in the morning purappadu.  There was another purappadu in the evening too ~ Emperuman enjoys being with him and hence there is purappadu of Sri Parthasarathi with Mamunigal in the morning  and the evening. Here are some photos of the evening purappadu in which Iramanuja Noorranthathi was rendered in the goshti.

இப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய (அழகிய) ஜாமாதர (மணவாள) முனி (மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு,  பல்லாண்டு பாடுவோம்.

"மன்னுயிர்காள் ! இங்கே மணவாளமாமுனிவன்
பொன்னடியாம்  செங்கமலப் போதுகளை- உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்" 

adiyen Srinivasa dhasan.  













Tuesday, November 19, 2019

Thirumylai Sri Peyazhwar Pushpa Pallakku 2019


ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.


Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple.   Now the Peyalwar who graces this beautiful Thennacharya  temple – annually visits Thiruvallikkeni in a grand procession.  Here, Sri Peyalwar thiruvavathara uthsavam culminating in ‘Aippaisi Sadayam’ was grandly celebrated for 10 days.

17th Nov 2019 was Vidayarri Sarrumurai and in the evening there was    the fragrant ‘pushpa pallakku’ (palanquin made of flowers).  Flowers are fragrant and are naturally attractive – the pushpa pallakku – with many strands of jasmine pervading  is unique as it is a treat to mind, eyes and ears.

பூக்கள் அழகானவை; பூக்கள் மணமிக்கவை; எம்பெருமானுக்கு உகந்து சமர்பிக்கப்படுபவை. திருக்கண்ணங்குடி எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் பாடும்போது : 
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே ~ என
கருநெய்தற்பூக்கள்;  பெரிய தாமரைப் பூக்கள்;  ஆம்பல்; செங்கழுநீர்; நெய்தல்   ஆகிய இவற்றாலே அழகுபெற்ற கழனிகளையுடையதும் பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்,  சிறந்த ரத்னமயமான திருமதிளையுடையதுமான திருக்கண்ணங்குடியுள், நின்ற எம்பெருமான் என புகழ்ந்து பாடுகிறார். 

தாமரை, அல்லி, ரோஜா, சாமந்தி, மல்லிகை, முல்லை, போன்ற மலர்கள் நமக்கு பரிச்சயமானவை.  இன்னமும் எவ்வளவு எவ்வளவோ உள்ளன !  :  செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,  குறிஞ்சி, வெட்சி,  வாகை,  வகுளம், செம்பருத்தி,ஞாழல், மௌவல், கொன்றை, வில்வம்,  தும்பை, குருங்கத்தி, வேங்கை என அந்த வரிசை நீளும் !!



சாலையோர மரங்களிலும் மலர்ந்து சிரிக்கும் மரமல்லிக்குத்தான் 'மெளவல்' என்று பெயர் . இந்தப் பூவிற்கு 'வஞ்சகம்' என்றொரு பெயரும் இருக்கிறது. இப்பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். மிகுந்த வாசனை உடையவை. உதிரும் பூக்களை, குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாய் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உண்டு. பூவின் காம்பை சிறிது கிள்ளி எறிந்து விட்டு வாயில் வைத்து ஊதினால் குட்டி நாதஸ்வரம் போல் இசை வரும். பன்னீர்ப்பூக்கள் என்ற பெயரும் இதற்கு உண்டு. குருக்கத்தி என்னும் மலருக்கு  மாதவி எனும்  பேரும் உள்ளது. குருக்கத்தி  ஒரு மலர்க்கொடி.  இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.  மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. எம்பெருமான் ஸ்ரீமந்நாராணனுக்கு நறுமணம் வாய்ந்த மலர்கள் மட்டுமே சமர்பிக்கப் பெறுகின்றன.

மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே !

தென்றல் காற்றானது, மாந்தோப்புகளிலே  காய்ந்து குலுங்கும் மரங்களுக்கும் மாம்பழங்களும் இடையே நுழைந்து,  மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும், மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற திருவெள்ளறை திவ்யதேசத்திலே நின்றருளும் பெருமானே! என பிரார்த்திக்கிறார்.


At Thirumayilai it was such a fragrant Pushpa pallakku for Sri Peyalwar and the purappadu wound through Chithiraikulam and mada veethis. Here are some photos taken during the purappadu

adiyen  Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
17th Nov. 2019.









Saturday, November 16, 2019

Swami Manavala Mamunigal Sarrumurai 2019 : அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம்


Swami Manavala Mamunigal Sarrumurai 2019 :
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***

Sri:
Srimathe Ramanujaya Namaha:
Srimath Varavara Munaye Namaha:

குணமணி நிதயே!  நமோ நமஸ்தே;  குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே ; யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.




In our culture – we welcome rains [rain, rain go away is not our tradition] –
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து*
உள் நின்று உடற்றும் பசி.
இம் மண்ணுலகம் கடல் நீரால் சூழ்ந்தது ஆயினும் -   மழை இல்லையெனின்  பசியின் கொடுமை உலகை வாட்டக்கூடும் - என்பது திருவள்ளுவர் வாக்கு.  ‘aippasi – adai mazhai’ is an old adage. Rains are needed ~ they are but common in the Tamil month of Aippasi perhaps there are days when we would not want rain to play spoilsport (nothing to do with sports) – in year 2015  during this period it rained so heavily, inundating places causing lot of damage and trouble.   This year we have seen some rains .. ..  While people would have carried raincoats and umbrellas when they ventured out – at Triplicane in the morning of Friday, 1st Nov 2019  would have wondered what was happening – it was a procession of umbrellas, nay not the black one that humans use when it rains– but spotless white parasols – the divine kodais    ~ 10 sets of them – the divine kodais 20 in no.  – ( I had earlier posted twice – one on those kudais and another on kudai kainkaryabarars).

The morning of the busy Friday  dawned so gracefully – for those of us would never forget the greatest darshan one would dream -  the divine blessing of  ‘Kaithala Sevai’ ~ [Lord Parthasarathi and consorts being carried in the hands of the battars] – then the umbrellas were getting opened up – spotless white parasols – the divine kodais  ‘Thirumoolam in Aippasi’  the day commemorating the birth of divine Acharyar Swami Manavala Mamunigal.  The purappadu was delayed and started around 10 am – but hundreds of us were waiting for that grand moment of our Acaryan having grand purappadu with our Emperuman Sri Parthasarathi.




ஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான  பூலோக வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலையும்,  நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர்.   வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழிலரங்கம் எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும் வீதிகளும் அங்கு வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் துயரங்களை கண் நோக்கிய  - பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது. டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள்பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட படை எடுத்த காலம் அது. 

1311ம் ஆண்டு மாலிக்காபூர் ,  ஸ்ரீரங்கத்தையும் சுற்றுப்புறங்களையும் அடைந்து, செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. சூறையாடி பலரை கொன்ற துக்க காலம். திருவரங்கன் தனது உறைவிடத்தில் இருந்து  எழுந்து அருளப்பட்ட கொடிய காலமும் கூட.  ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த  ஆசார்யர்கள்  அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிஷ்குடி என்கிறவூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் .. திருவரங்கத்தில் வாழ்ந்த  பல்லாயிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம்[have circulated a post on Acaryar Pillai Logachar]




சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும்கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர் இருண்ட காலமாகும்.  இதனால் பாழ்பட்டு இருந்த இக்காலத்தில் பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர,   ஸ்ரீவைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.


Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Sri  Manavala Mamunigal is the incarnation of Adisesha.  He was born in Sikkil Kidaram in AD 1370.  At birth he was known as ‘Azhagiya Manavala Perumal Nayanaar’.  Later he was hailed in very many names such as ‘Yatheendra Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani,  Varayogi, Varavaramuni and more…..

His parents were   Thigazhakidanthan Thirunaveerudayapiran Thatharannan,  a disciple of Sri Pillailokacarya, and Sriranga nachiyar..  He became a sishya of Tiruvaimozhippillai.   Manavala mamuni's devotion to Nammalvar, Ramanuja and to his own Acharya grew as he studied the Alwar's hymns and rahasya arthangals at Alwar Thirunagari.  He lived for 73 years on this earth performing many Kainkaryams  at Sri Rangam and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture.   His patent style was to elucidate the pramanams fully   ‘following the words of the Purvarcharyas without deviating a wee bit’.   He filled  his vyakhyana granthas with the words of purvAcharyas.  As followers of Mamunigals, duty thus is cast on us to understand the significance of preserving, maintaining, supporting and following the rituals and customs associated with all our traditional Temples. 

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation.  Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi. 

Of the many works, ‘Upadesa Rathinamalai’ is one which all of us should know and recite regularly.  There are 73 paasurams + thanian given  by Kovil Kandadai annan and another one rendered by Erumbiappa.   In the introductory remarks, Swami Maamunigal declares that he is performing upadesam for the future generations in strict accordance with the upadesam that he himself received from his Achaaryan, Thiruvaaimozhip piLLai and his AchArya paramparai.  Here is a pasuram in which our Acharyar richly glorifies our Purvas.  Mamunigal  takes pledge : 

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல்  ஏற்றம்*
தாழ்வாதும் இன்றி அவைதான் வளர்த்தோர் * ஏழ்பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள்  உள்ளதெல்லாம் *
வையம் அறியப்பகர்வோம் வாய்ந்து.

……  to celebrate the vaibhavams and commentaries of those imbued in Bakthi, the Azhwargal and those reverred Purvacharyas and always hold them in highest esteem – he says it is his bounded duty to talk of those commentaries to all those people  in seven Worlds for their spiritual  upliftment.





His another magnum opus is - Thiruvaimozhi Noorranthathi, which presents essence of Nammazhvar’s Thiruvaimozhi in hundred sweet verses of poetry, with each verse capturing the essence of a decad (a decad comprises approximately ten songs). The literary structure of this work is worth an independent study in its own right. Mamunigal has set this in Venpa style, a metrical prosody comprising four lines; in every song he conveys the essence (tatparya) of a decad of Thiruvaimozhi, in every verse he extols Nammalwar by his various names and yet has striven to  keep the Anthathi style of  composition, thereby beginning each verse with the same word the previous verse ended with. A real classic !

In the few years that he lived on this earth, Sri Varavara Muni physically ensured renovation of numerous temples, reorganised rituals and set up ways of worship and ensured continuance of traditions  through  his eight famous disciples known as Ashtadiggajas (elephants of the eight directions).  Sri Vanamamalai Mutt at Nanguneri was established by Mamunigal through his first disciple Sri Ponnadikkal Jeeyar in 1410. 

At Thiruvallikkeni Divyaesam around 10  am – Manavala Mamunigal came out with Sri Parthasarathi for a grand purappadu – the 20 pairs of parasols were the added attraction – to the glorious Acharyar Swami Manavala Maamunigal and Emperuman Sri Parthasarathi glittering with thiruvabaranams.   His work - Upadesa Rathinamalai goshti was recited in the goshti.  The purappadu ended around 12 noon.

இப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள) முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டுபல்லாண்டு  பாடுவோம். Here are some photos of the grand purappadu in the morning.  

adiyen Srinivasa dhasan.    [Mamandur Veervalli Srinivasan Sampathkumar]
1st Nov 2019