Thursday, October 24, 2019

Mamunigal day 2 ~ Sri Parthasarathi Pandiyan kondai : 2019


Swami Manavala Mamunigal day 2 ~ Ekadasi purappadu –
Sri Parthasarathi Pandiyan kondai : 2019

ஸுகாஸீநம்  ~  அதி ஆனந்தமாக எந்த உபத்ரவமேதும் இல்லாமல் இருக்கும் இடம் ! ~ எது என்ற கேள்விக்கே இடமில்லை ..... நம்பெருமாள்  பள்ளிகொண்ட திருவரங்கமே !!



நமக்கு பெருமை தரும் சுவாமி மணவாள மாமுனிகள் உத்சவத்தில் இரண்டாம் நாள் ~ ஏகாதசி - மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுடன் புறப்பாடு கண்டருளினார்.  ஸ்ரீ பார்த்தசாரதி செங்கோல் பாண்டியன் கொண்டையுடன் அற்புத சேவை சாதித்து அருளினார்.
அங்கே கவேரகந்யாயாஸ் துங்கே புவநமங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வரவரம் முநிம்||


மிகவும் உயர்ந்த, புவந மங்களே என உலகோரின் எல்லாவகையான நன்மைகளுக்கும் காரணமான , காவேரி நதியின் மத்தியிலே  இருக்கும், 'கோயில்'  திருவரங்கமென்னும் திருப்பதியில், ஸுகமாசீனமாய்  எழுந்தருளியிருப்பவரும், உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழகியமணவாளப்பெருமாளை ஒத்திருக்கையால்,  அழகியமணவாளன்  எனும் அற்புத  திருநாமத்தைக்  கொண்ட  நம் உத்தம  அசார்யனான சுவாமி  மணவாளமாமுனிகளை, வணங்கித் துதிக்கின்றேன்.  இடையே பற்பல அல்லல்களுக்கு உட்பட்டிருந்தாலும்,   மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.    ~  ஸ்ரீ எறும்பியப்பா : பூர்வ திநசர்யை

We stand rejuvenated and feeling extremely happy with the celebrations of our Acaryar  –Swami Manavala Mamunigal Thiruvavathara Uthasavam.  It is the Tamil month of Aippasi ~ it is a season when it would rain – it is also the festive season ‘the grand Deepavali’ – all traders are happy with roaring sales.  For us there is the best reason to feel happy – continued bliss – as the 10 day Uthsavam of our Acharyar commenced yesterday at Thiruvallikkeni and all divyadesams  - it would conclude on Friday 1st Nov 2019 -   being ‘Thirumoola Nakshathiram’ in the month of Aippasi – the birth star of Swami Manavala Mamunigal, the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy, practiced by Thennacharya Srivaishnavas. 

Today, 24.10.2019  is day 2of the Uthsavam.   Our Acharyar is hailed as ‘Periya Jeeyar’ and our Swami Manavala Mamunigal spent a major portion of his life at Thiruvarangam serving the Lord.   Sri Kulasekara Azhwar was so devoted to Sri Rama and the devotees of  Sriman Narayana.  In his Perumal Thirumozhi, he says  ‘the Lord weaned me away from mixing with  ordinary mortals for everything – with His guidance, I call, ‘Oh My Aranga’ -  mad for the love of my own sweet Lord.



எத்திறத்திலும் யாரொடும் கூடும் * அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே அரங்கா என்றழைக்கின்றேன்*
பித்தனாயொழிந்தேன்;  எம்பிரானுக்கே **

புண்டரீகாக்ஷனான எம்பெருமான்  எந்த விஷயத்திலும், கண்ட பேர்களோடே, சேர்ந்து கெட்டுப்போவதற்கு நெஞ்சை நீக்கியருளினான்; (ஆதலால்);  அந்த ஸ்ரீரங்கநாதனே!  என்று அழைக்கின்றேன் ;எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன். [credit ~ Dravidaveda.org]

On day 2 of Mamunigal Uthsavam, being Ekadasi, Swami Manavavala Mamunigal had grand purappadu with Sri Parthasarathi – and in case you are wondering the relevance of Perumal thirumozhi pasuram on Namperumal – there certainly is reason.   Today at Thiruvallikkeni  Sri Parthasarathi Perumal adorned ‘Pandian Kondai’ ~  what a darshan it was.   The kireedam known as Pandian kondai  replicates the one usually worn by Lord NamPerumal rendered to him by a Pandian King known as Sundara Pandian.  .. .. and He had ‘sengol’  (scepter) held by Emperors.


நம்பெருமாள் திருவரங்கர் ஒரு மஹா ராஜா ; அரசர்களுக்கு எல்லாம் அரசர்.  அவர் சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்த அழகான ‘பாண்டியன் கொண்டை’ என்ற திவ்ய ஆபரணத்துடன், எழுந்து அருள்வார். அவ்வழகைப் போலவே இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானும் பாண்டியன் கிரீடம் அணிந்து சேவை சாதித்து அருளினார்  . ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் வடிவழகு இங்கே :

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே !
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே !!

~ adiyen Srinivasa dhasan.
24.10.2019









No comments:

Post a Comment