Saturday, July 6, 2019

Thiruvallikkeni Kodai Uthsavam (4) - 2019


There are a row of houses in Kairavini kulakkarai known as ‘Gate aam’ – one entrance is at Tank Square and the other is at the other end – Venkatrangam Street – during Kodai uthsavam, Perumal has purappadu through this gate !!.. 


Summer rains are not totally uncommon – people expect rains for reducing the heat and more so for water ..  but at Thiruvallikkeni,  devotees would think that it should not rain in the evening for it is Kodai uthsavam now.  This is 7 day Uthsavam  and on earlier days,  Sri Parthasarathi used to visit Vasantha Bungalow. Today (6th July 2019) is day 4  of Kodai Uthsavam for Sri Parthasarathi Swami at  Thiruvallikkeni divyadesam. 


திருமழிசை செல்வன் பக்திசாரர்  தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை  வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள்அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :

தேருங்கால்  தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்
பொருள்முடிவும் இத்தனையேஎத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்

Thirumazhisai Piran minces no words in telling us that He who wields the discuss (Chakra) is the Supreme; everything in Veda and our sacred epics  is bespoken of Him ~ for all those mediating He is the ultimate and surrendering to His lotus feet is the only thing that would benefit us all .. .

During Kodai Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… in those days when He visited Vasantha bungalow, there would be Unjal and on return Perumal and Nachimar would be together in the same kedayam.   Here are some photos taken by me  during today’s purappadu.

திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடைக்கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  சில வருடங்கள் முன் வரை,  நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறிபின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார்.




இப்போது 'வசந்த உத்சவ பங்களாஇல்லாத காரணத்தால்  'பெருமாள் வேங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்" என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும், உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம். 

ஏழு நாள் நடைபெறும் இவ்வுத்சவத்தில் இன்று நான்காம் உத்சவம்.  'நான்முகன் திருவந்தாதிசேவிக்கப்பட்டது. புறப்பாடு சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.  








No comments:

Post a Comment