Thursday, May 9, 2019

Sri Udayavar Sarrumurai 2019 ~ சித்திரையில் செய்ய திருவாதிரை


 Sri   Ramanujar   Sarrumurai  (1002) ~ 2019

The NIlamata Purana,  (नीलमतपुराण)  an ancient text of Kashmir contains  information on its history, geography, religion, and folklore.. .. much has changed in Kashmir since.  National security was catapulted into being the primary issue for this general election for the first time with the car bombing in Pulwama in mid-February and its aftermath in an aerial confrontation between India and Pakistan in the Balakot-Naushera episode. The strong-on-defence plank of the ruling Bharatiya Janata Party (BJP) has at its core the demonstrated decision-making credentials of Prime Minister Narendra Modi, which the surgical strikes of September 2016, the Balakot aerial strike and the anti-satellite test serve to buttress.With the intensity of street protest and stone pelting declining, the use of pellet guns by security forces has gone all-time low in Kashmir this year. The acquisition of pellet ammunition by the security forces has also touched a new low first time. 


The land of Kashmir, in the northernmost geographical region of the Indian subcontinent,  was at pinnacle of glory and peaceful existence many centuries ago.  In the first half of the 1st millennium, the Kashmir region became an important centre of Hinduism and later of Buddhism; later still, in the ninth century, Kashmir Shaivism arose.  Adhi Sankarar visited this place, so did our great Acaryar Bhagwat Ramanujar to Saradhapeedam .. ..

Today   9th May 2019  is a grand day -  Emperumanar 960 was grandly celebrated in 1977 – one may not have good memory of that;  in 2017  it was 1000 and this year 1002 – the modern day equipment & technology  ensure capture by way of photos and videos of the grand celebrations  at Thiruvarangam, Thirumala, Thirukachi, Sriperumpudur, MelukoteThiruvallikkeni and at many many more places.  So many places – Thiruvarangam, Thirumala, Thirukachi, Thiruvallikkeni, Sriperumpudur, Thirukurungudi, Melukote, Mathura, Pushkar, Kashmeeram, KOngunadu and more are associated with Him as he traversed the Nation by foot, propagating vishitadvaita concept.

இன்றுநன்னாள் ~ எம்பெருமானார் அவதார திருநாள் ..இராமானுசர் 1002  இன்று. நமது பாரததேசம் புண்ணியபூமி.  ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு வேதமும், ஆசார்யர்களுமே பிரதானம். அநுதினமும் நாம் அநுஸந்திக்கும் தனியனில் எம்பெருமானையும், ஆழ்வார்களையும்,  எம்பெருமானாரையும், நமது ஓராண்வழி ஆசார்யர்களையும் தொழுது – ஸ்ரீமன்நாராயணனுக்கே அடிபணிபவர்கள் நாம்.  தீமனம் கெடுத்து, ஸ்ரீமன்நாராயணனை தொழும் மனமே தந்து, அறியாதன அறிவித்து, பரமபுருஷனைக் காட்டிக்கொடுக்கும் ஆச்சார்யர் மிக உயர்ந்தவர்.  அவர் நமக்கு உலாவும் பெருமான். ஆச்சார்யரத்னஹாரத்தில் நடுநாயகர் ஆன நம்சுவாமி எம்பெருமானார் சாற்றுமுறை!  சித்திரையில் செய்ய திருவாதிரை-  இன்று,  இந்த நல்லுலகமே எதிர்பார்த்துகாத்து இருந்த ~  சீரியநாள் – ஒப்புயர்வற்ற நம்மிராமாநுசமுனியின் ஆயிரத்து இரண்டாவது பிறந்தநாள் சாற்றுமுறை.  திருவல்லிக்கேணி வீதிதனிலே அத்யாபகர்கள்  'வாழிய ராமானுஜன்; அவரடித் தாளினை வாழி' என  விஜயீபவ ; விஜயீபவ ; விஜயீபவா எத்சரிகை' என 'வெள்ளைவிசிறி'  [தங்கள் உத்தரீவங்களை விசிறி] ஆர்ப்பரித்தனர்.


Of the three great exponents of Vedanta philosophy, BhagwadRamanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar has the pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, ThiruppavaiJeeyar, NumKovilannan, amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.  Two years ago, Udayavarsarrumurai assumed greater significance for it was  His millennium year – and now  it is 1002 years since he descended on earth  at Sriperumpudur.  [Chithiraiyil seyya Thiruvathirai]

Our darsana Sthapakar, Sri Ramanujar  rightly reverred as ‘YathiRajar’ ~ the king among yathis [hermits and sages], the  greatest reformer he was, Ramanuja gave us many vedantic treatises - toured the entire Country, making the Srivaishnavatie tradition flourish in all his path.  He was a great administrator too. Our Acharyar formulated a faith in which none were devoid of Divine Grace.  The great social reformer, had the vision of introducing most acceptable way of life for every baktha inculcating respect and love among fellow human beings.  Today we talk of codes and SOPs – thousand years ago, this Great Acharyar  gave us Niyamanappadi ~ the manual for the services to be performed in the Temple, all supported by endowements in his blue book.  When Sri Ramanujar went to Melukote, he was 82 and he returned to Thiruvarangam at ripe age of 94. – and more was to happen in Srirangam, guided by his indomitable spirit of service to Lord. He created flawless systems, corrected the administration of Sri Rangam ensuring the proper maintenance of the wealth of Lord Ranganatha and creating teams to properly continue all kainkaryams to the Lord.

                      The fountain of knowledge, he was,  handed over to the generation his wealth of knowledge through his many works which include the Magnum Opus ‘Sri Bashyam – the Vishishtavaida commentary of Brahma sutram of Vyasa Bhagavan.; VedanthaDeepam, Vedanta Saram, Vedanta Sangraham, Gadyathrayam and many many more …. The  3 Gadyams – Saranagati Gadyam, Sriranga Gadyam and Vaikunda Gadyam are collectively known as ‘Gadyatraya’ ~ are in someways considered to be swan song of our Acharyar.  The Saranagati Gadyam is live exposition of the doctrine of ‘prapatti’ – the total saranagati.  Sri Ramanujar prays that thee Lord may be pleased to bless his sincere and true saranagati at the lotus feet of Srimannathan be accepted as truly and well-performed and lead to the desired end without any interruption.  Our Acharyar describes the unique qualities of NamPerumal  with words ‘Sathyakama, Sathyasankalpa’ which would mean the most loveable quality of resolve to protect His devotees and the will to be incarnated in any form to come to the succour of devotees – He is Creator, Protector and Sustainer. Today after morning purappadu (of which photos are posted here) – there was mangalasasanam, rendering of Gadyatrayam ~ then Thirumanjnam, Thirumozhisarrumurai .. and ....

Let us fall at the lotus feet of our Acharyar which only  will relieve us of all our sins and steer us towards good thinking, good deeds and towards salvation through service to Lord and His bakthas.   Some photos taken this morning during the Emperumanar purappadu at Thiruvallikkeni are posted here :

இன்று 9.5.2019 -  சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள்.  நம்ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந்துதித்த சீரியநாள். செங்கயல்வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் ராமானுஜர் அவதரித்த நந்நாள்.  எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன்நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள். 

உடையவர் ஒரு தலைசிறந்த நிர்வாகி.  ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரததேசம் முழுதும் யாத்திரை சென்று "ஸ்ரீமன்நாராயணனின் பரத்வத்தை" நிலைநாட்டினவர். ஸ்ரீவைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.   ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தஸாரம்,  வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத்கீதாபாஷ்யம், கத்யத்ரயம் ஆகியகிரந்தங்களை உடையவர் அருளிச்செய்தார்.   ஸ்ரீபாஷ்யம் அவரது தலைசிறந்த படைப்பு. வியாசபகவானின் ப்ருஹ்மசூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதாபாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண்புகுதலை பற்றி சரணாகதிகத்யம், ஸ்ரீரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்ககத்யம், மஹாவிஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்டகத்யம் என்பன இவரது பிறநூல்கள்.

லோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்தநாள் அதிவிசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரைநாள் சிறக்கவந்தோன் வாழியே( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமைகொள்ளும்படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லாசிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுசமுனிவனின் திருவடிகள் வாழ்க! வாழ்க!!.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவதலங்களிலும் சேவாகாலம் முடியும்போது "ராமானுஜார்ய திவ்யாக்ஞா – வர்ததாம் அபிவர்ததாம்" என அவரது கட்டளைகள் சிறப்புறநடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.

இவ்வுலகில் இனிஒன்றும் எண்ணாதே நெஞ்சே ! இரவுபகல் எதிராசர் எமக்கினி மேலருளும்....எனநம் ஆச்சார்யர்க்கு ஆளாவோம் நாம்.. பெரியகடலை போன்ற கருணைகொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள்பணிவோர்க்கு எல்லாநலமும் பெருகும்.   அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும் !

இன்று காலை – உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடைபெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.   காலை புறப்பாட்டில் ஸ்தோத்ரபாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்தநாளை அத்யாபகசுவாமிகள் மேல்உத்தரீவத்தை விண்ணைநோக்கி விசிறி ஆர்ப்பரித்து கொண்டாடினர். 

அடியேன் – ஸ்ரீனிவாசதாசன் (மாமண்டூர் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)










No comments:

Post a Comment