We buy costly things ! and then worry in
protecting them them . .. one obvious
answer is ‘insurance’ ~ but this no post on indemnity, perils, coverage and
more !
Any device becomes worthless when it comes with
no guaranteed protection. Imagine a situation, when you happen to buy an
expensive mobile (what is expensive is yet to be defined and
differs person to person !!) and accidentally
it falls from your hand or pocket- the handset in the meantime fails to
withstand scratches and damages- sad your premium phone gets crushed to
pieces. To avoid such a scenario, Corning the leading manufacturer of
chemically strengthened glass(Gorilla Glass), has been on and of producing
different versions of protection and
making smart money too. The latest version so-called, Gorilla Glass 6, is
taking a bigger leap in terms of offering greater protection. This layer of
protection can withstand up to 15 drops from a meter height. It is also
designed with optimized optical clarity, touch sensitivity, scratch resistance,
efficient wireless charging and enhanced durability so that it goes in
accordance with glass panels- both for front as well as back.
Since 1851, Corning has evolved from a light bulb manufacturer
to Pyrex creator to making high-tech glass products for companies like Apple,
Google, Verizon and Samsung. Corning, the maker of all things tough and
shiny, a couple of years back came up with a new take on its signature hardened
glass line, called Vibrant Gorilla Glass. Why vibrant? Well, it turns out you
can print photo-quality images on one of the toughest transparent concoctions
in the world now. Idea of having image on, say, the rear of your
smartphone, lends a fusion of glass and metal. One cannot but question - If gorilla glass is
used on a touchscreen, doesn't it have to be transparent and wouldn't printing
an image on it negate the whole purpose of using glass? ~ may be yes at
the back of the phone … but, … glasses are attractive ! .. foolish that our minds
wanders on such protection ~ when our Emperuman is the only Saviour.
In optics, a prism is a transparent optical element with flat,
polished surfaces that refract light. At least two of the flat surfaces must
have an angle between them. A dispersive prism can be used to break light
up into its constituent spectral colors (the colors of the rainbow).
In my childhood, used to wonder such prisms hanging on the palanquin ~
the kannadi pallakku.
இன்று 28th
Apr 2019 ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி
பல்லக்கில் எழுந்து அருளினார். "மின் இலங்கு திருஉருவும் பெரிய தோளும்,
கைத்தலமும், அழகான திருக்கண்களும்' உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து
மேலும் மிளிரச் செய்வது ! முத்துப் போன்றவனும் ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆன எம்
முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து
அருளினார்.
On the Ninth
day evening of the brahmothsavam of Sri Parthasarathi Swami
Brahmothsavam, at Thiruvallikkeni divyadesam is – ‘Kannadi
Pallakku’ – the palanquin embedded with beautiful mirror
work. There was a bigger, captivating, eye-capturing palanquin made of
glass – rather with glasses fitted all over and with chandelier like things
suspended on its arms; remember it used to have many prisms. Slowly it
faded into oblivion as it was not maintained properly and glass pieces started
falling off as it was not maintained in the proper manner.
For a few years, when
there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathi had purappadu on
‘punniyakodi vimana chapparam’. Then a newly made one [dedicated by NC
Sridhar] – looking different than the earlier one was
submitted. Now there is purappadu in the ‘kannadi pallakku’ –
(literally the palanquin made of glass.)
கண்ணாடி
கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய,பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக்
குறிக்கிறது. முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி
பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலே, தெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம்
உள்ளது. இது கண்ணாடி பல்லக்கு மண்டபம் என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள்
இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்கு' வைக்கப்பட்டு இருந்தது. பெரிய பல்லக்கு
- முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும்
கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க
வைக்கும்; ஒளிக்கற்றைகளை
சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.
உத்சவத்துக்கு
சில மணி நேரங்கள் முன்பு, இந்த
மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு கோவில் வாகன மண்டபத்தை வந்து
சேரும். காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்து, பல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது. பெருமாள்
ஒன்பதாம் உத்சவம் இரவு, புண்ணியகோடி
விமானத்தின், விமானம்
இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில், சில வருடங்கள் ஏளினார். இந்த மண்டபம்
அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே!
சில வருடங்கள்
முன் ஒரு பக்தர் (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு
கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார். கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கைகளுடன்,
விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில
படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் ~
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
No comments:
Post a Comment