Today 31.3.2019
marks the end of Financial year and most Companies were working – officials
were busy finalizing business figures, trying to improve their business
performances.
At Thiruvallikkeni
it was Punguni Thiruvonam ~ last thiruvonam – i.e., next one in Chithirai will
be Brahmothsavam and hence Sri Parthasarathi had periya mada veethi purappadu. It was Sri Peyalwar’s moonram thiruvanthi in
the goshti.
இப்புவியில்
இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ? ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ??
ஆழ்வார் பாடல்களிலே தமிழ் வார்த்தை சொல்லாடலும், மணமும் கமழும். தமிழ் தலைவன் என கொண்டாடப்படும் ஸ்ரீ பேயாழ்வார்
தம் மூன்றாம் திருவந்தாதி தனிலே ~ 'அமம்,
துரகம் ' - என்னே ஒரு சொல்லாடல் !
கிருஷ்ணாவதாரத்தில்
தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலே ஏவப்பட்டு பெரியகுதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும்
அஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நரகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார்
பேயாழ்வார். 'அமஞ்சூழ்ந்து' – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக,
எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். 'துரகம்' – வடசொல்,
வேகமாகச் செல்வது என்று காரணக் குறி. [நன்றி : திரு கட்சி ஸ்வாமிகள் PBA அண்ணங்கராச்சார்யர்
உரை - திராவிடவேதா.org]
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந்து அறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
பனியாலே
சூழப்பட்டிருக்கிற வெள்ளிப்பனி இமயமலையையும்,
பெரிய ஆகாயத்தையும், வாயுவையும், அமம் சூழ்ந்து (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்)
திரஸ்கரித்து, தெள்ளத்தெளிவாக விளங்கி கண்ணெதிரே
வந்து தோன்றின, குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை, திருக்கையால் பற்றி - அந்த
அரக்கன் தன் வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான்
ஸ்ரீமன் நாராயணன் , நம்மை, யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்
!
Sri Peyalwar guides
that our protector is Sriman Narayana.
With his bare hands, He killed the mighty Rakshas in disguise of horse Kesi. He
who protected the mountains, the skies, the winds and all else within Himself
will surely protect us from the travails at hell.
Let us bow to
Sriman Narayana and fall at His Lotus Feet, as guided by Azhwar.
~adiyen Srinivasa
dhasan
31.3.2019.
No comments:
Post a Comment