Sri Thelliya Singar purappadu to Theppam 2019
At Thiruvallikkeni after
3 days of theppam for Sri Parthasarathi, today 9th Mar 2019 – it was theppothsavam for Sri Thelliya
Singar.
ஸ்ரீ நரஸிம்ஹம்
என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக கோபம் கொண்டவர் உக்ரமூர்த்தியாக
சேவை சாதிக்கிறார். திரு அல்லிக்கேணி விஷயம் வேறு ! இங்கே மூலவர் யோகநிஷ்டையில்
யோக நரசிம்மர். உத்சவர் - அற்புத அழகு மிளிரும் அழகிய சிங்கர். இரணியனை
இருகூறாக பிளந்த உருவம் சாந்த சொரூபியாகுமா என ஐயுற வேண்டா!! இதோ நமக்கு திருமழிசைப்பிரான்
அருளமுது :
இவையா பிலவாய்
திறந்தெரி கான்ற*
இவையா எரிவட்டக்
கண்கள் – இவையா*
எரிபொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான்*
அரி பொங்கிக் காட்டும்
அழகு.
இமையோர் பெருமான் என நித்யஸூரிகளுக்கு
நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து ஆழ்வார் வினவுகிறார். நெருப்பை உமிழ்ந்த பாழி
போன்ற பெரியவாய் இவையா ? ; இவையா கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
திருக்கண்கள் ?? இதுவா - அக்னிபோல கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா
அவனது திருமேனி அழகு !!! என்ன அற்புதம் !
நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு
பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப்
பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.
[சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]
Sri
Azhagiya Singar was exceptionally attractive – oozing beauty. Is He not
the Lord whose anger ensured that in protection of His baktha Prahalada, the
powerful Hiranya was shredded by the finger nails; in His anger, His red eyes
shone like hot embers, fire came through his gaping mouth, He resembled a ferocious
mighty lion. What a beautiful form it was! – at Thiruvallikkeni, He is
the most beautiful Azhagiya Singar – He is always beautiful and pleasant – for
His anger is only directed at those enemies of His devotees.
Here are some photos of
Sri Azhagiya Singar purappadu from His sannathi to Thirukulam and theppothsavam
at Kairavini pushkarini.
adiyen Srinivasa dhasan
[Thiruvallikkeni S. Sampathkumar]
9.3.2019
No comments:
Post a Comment