Thursday, January 17, 2019

Sri Parthasarathi Perumal 'Thai Ekadasi' purappadu 2019


Today 17.1.2019  is the third day in the month of ‘Thai’ ~ today is Rohini nakshathiram and Ekadasi too. At Thiruvallikkeni divyadesam, Sri Parthasarathi had periya mada veethi purappadu – our Emperuman oozed brilliance and beauty .

Jewellery comprises of  decorative items worn for personal adornment, such as brooches, rings, necklaces, earrings, pendants, bracelets, and cufflinks. Jewellery may be attached to the body or the clothes. For many centuries metal, often combined with gemstones, has been the normal material for jewellery, but other materials such as shells and other plant materials have also been used by humanity.  The basic forms of jewellery vary between cultures but are often extremely long-lived.

A domestic council (DC) for the gems and jewellery sector will be officially launched by commerce minister Suresh Prabhu on January 31 in Mumbai, trade sources said after the third meeting of members of a working group under the helm of the directorate general of foreign trade (DGFT) on Wednesday. The salient feature of the DC is that it will have associations, not individuals, as its members.  While the DC will be launched at the month-end, its structure will take a few more months to be put in place and the council will come on stream only after elections to it are held.  The DC has been in the works for months now by as part of the government’s Make in India plan and recommendations of the Niti Aayog’s Committee to “Transform India’s Gold Market” issued in Feb 2018.


மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாகவே அணிகலன்களை ஆசையுடன் அணிந்து வருகிறது.  அணிகலன்கள் ஒரு சமுதாயத்தின் பண மதிப்பையும், மனிதர்களின் படோபடத்தையும் வெளிப்படுத்துவானவைகளாக நோக்கப்படுகின்றன.  அணிகலன்கலள் என்பவை, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இவை  நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன.


இதோ இங்கே தமிழ் தலைவன் ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்ததியில் 90வது  பாசுரம் :
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணறு *
அலம்பிய சேவடிபோய்* -  அண்டம்  புலம்பியதோள்;
எண்டிசையும் சூழ இடம்போதாது  என்கொலோ ?
வண்டுழாய் மாலளந்த மண்.

நம் எம்பெருமான் எத்தகையவன் ! எவ்வளவு பெரியவன் !! ~ அளக்க முடியாதவன் அல்லவா, நம் வையம் அளந்தவன்.  சிலம்பும், சலங்கையும் என - திருவடி தாமரைகளில்  சாத்தின நூபுரங்களும்,  செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும் எங்கும் ஒலிக்க, ஆகாசகங்கையிலே பக்தியுடன்  விளக்கப்பட்ட  திருவடிகளானவை, இந்த பூலோக அண்டத்தையும் தாண்டி நீண்டு, அனைவராலும்  துதிக்கத் தக்க திருத்தோள்கள் விண்ணையும் எட்டுத் திசைகளையும் வியாபிக்க, இடம் போரவில்லை.  அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்  அளந்துகொண்ட பூமியானது - அவனது வடிவுக்கும், அவனது திருவடி தாமரைகளுக்கும், சிறியதே போலும் !  ~ அவ்வளவில் திருவிக்கிரமன் பூமியை அளந்தான் என்பது ஒரு சிறிய உருவகமே !  நாரணன் அளப்பரியன்

சிலம்பு, செறிகழல் .. .. அணிகலன்கள் !!  ~  எம்பெருமானுக்கு அணிவித்து நாம் சந்தோஷப்படுபவை - அழகு கிரீடங்கள், காதணிகள், கடிப்புத்தோடுகள், தோள்வளைகள்,   வளையல்கள், தங்க,  முத்துமாலைகள், முப்புரிநூல், மணிவளையம் - போன்ற பல பல !!



அணிகலன்கள் என்றால் - சிலம்பு, கழல், கொலுசு, காலாழி, செறி, மெட்டி, முஞ்சி, தண்டை, சதங்கை, அரையணி, கங்கணம், கடகம், மோதிரம்., காப்பு, பதக்கம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.  கால்களில் அணியும் கொலுசு, நம் தமிழ் இலக்கியங்களில், காப்பு, தண்டை, சிலம்பு என்ற பெயர்களோடு, ஒரு மகத்தான இடத்தை பிடித்திருந்தது. சிலப்பதிகாரம்,  இலக்கியம் உண்டாவதற்கு முக்கிய காரணமே கொலுசு தான். தண்டை என்கிற பெயரில்,  இறை வழிபாட்டிலும், கொலுசுக்கு முக்கிய இடம் உண்டு. மதுரை அழகர் மலையில் உள்ள, 'நூபுர கங்கை' தீர்த்தம், சத்தியலோகத்தில் பிரம்மாவின் காலில் அணிந்திருந்த அணிகலனில் இருந்து தெறித்து விழுந்த தீர்த்தம், சிலம்பாறு தீர்த்தம் என்கிறது தல வரலாறு.  நமது மரபில்,   அணியும் அணிகலன்களை, வெறும் அழகோடும், ஆடம்பரத்தோடும்  மட்டுமல்லாமல்  ஆரோக்கியம் தொடர்பான பலன்களை கருத்தில் கொண்டே அணிந்து வந்துள்ளனர்.

Today on the occasion of Ekadasi [Rohini] Sri Parthasarathi had periya mada veethi purappadu at Thiruvallikkeni divyadesam.  It was Peyalwar’s moonram thiruvanthathi and here is pasuram no. 90. ‘சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப!’ ..
Lord Sriman Narayana  with the Thulasi garland around his neck, raised His one foot in the sky, the jingling anklets were so attractive.  Those ornaments embellishing His feet were washed by Brahma, thus forming ‘akasa Ganga’ – even as His divine foot measured earth and extended seeking other places, His arms stretched out into the elight Quarters. For that all pervading Emperuman – the earth is too small a measure and how would He measure this small universe ?? 

Here are some photos of today’s purappadu.

adiyen Srinivasa dhasan [Mamandur Srinivasan Sampathkumar]
17th Jan 2019.







No comments:

Post a Comment