Monday, January 21, 2019

தைப்பூசம் 2019 - Sri Parthasarathi Perumal harvest ~ Kalinga Narthana Thirukolam


தைப்பூசம் - Sri Parthasarathi Perumal harvest ~ Kalinga Narthana Thirukolam

எல்லா நாகரீகங்களிலும்  அறுவடை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்தவர்களாய்  தமிழர்களின் சிறப்பு கூறப்படுகிறது. 


Today,  20th Jan 2019  is a special day for us -  ‘Thai Pusam’  -  Sri Parthasarathi special purappadu. There are very few occasions when Perumal purappadu is outside the precincts of mada veethi.  Today,  Sri Parthasarathi in ‘Kaalinga Narthana thirukolam’  accompanied by Senai Muthaliyaar  and Swami Embar had periya maada veedhi purappadu thence to Big Street.  For Saivaites – thai poosam on pournami day is significant as it commemorates the birth day of Murugan and the occasion when Parvati gave Subramanyar a spear for vanishing the demon Soorapadman.


At Thiruvallikkeni divyadesam, traditionally on Thaipusam day, Sri Parthasarathi visits Big Street – the long winding Veeraghava Mudali Street – which now a days is more of a lane than a Big street….  This is the Uthsavam where Perumal oversees the bountiful harvest from His field. (kadhir aruthal).





Perhaps decades ago or even centuries  ago, the junction of Big Street, Bharathi Salai (Pycrofts road), might have represented the end of the locality and perhaps the area thereafter could have been rice fields………… now it is maze of buildings in small lanes and by-lanes where people jostle for space.  There was a  pandal put up at the Junction where Perumal halted for a brief-while and paddy was placed before the Lord, then at His feet.  The rice grains so placed were distributed to the devotees too……..


Today being   sarrumurai of Swami Embar,  Embar also accompanied Perumal Sri Parthasarathi.   A separate post describes Swami Embar and his attachment to Swami Ramanujar.   Here are some photos taken during the purappadu at Thiruvallikkeni.

 Senai Muthaliyar



இன்று [20.1.2019] தைப்பூசம்.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் காளிங்கன்  மீது  நர்த்தனமாடும் திருகோலத்தில் பாங்குடன் புறப்பாடு கண்டு அருளினார்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுடன்சேனை முதல்வரும் எழுந்து அருளினார்.   இன்று எம்பார் சாற்றுமுறையும் கூட.  பெருமாளுடன் எம்பாரும் புறப்பாடு அருளினார்.



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் பல புறப்பாடுகளில்   இன்று ஒரு தனி சிறப்பு.   தை பூசம் அன்று மட்டுமேபெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் தாண்டி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு என்பதே இத்தெருவின் தொன்மையான பெயர்) எழுந்து அருள்கிறார்.  தை பூசம் என்பது 'கதிர் அறுக்கும்திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பெரிய தெருவும் பாரதி சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட  பந்தலில் ஸ்ரீபார்த்தசாரதி எழுந்து அருளியவுடன்,  நெல்மணிகள் கொண்ட ஒரு கட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுபெருமாளின் திருவடிகளில் வைக்கப்பட்டுபிறகு நெல்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.  பல வருடங்களுக்கு முன், இவ்விடம் ஊர் எல்லை ஆகவும்தாண்டிய பகுதிகள் வயல் வரப்புகள் ஆகவும் இருந்து இருக்க வேண்டும்.  இவ்வுத்சவம்பெருமாள் தனக்கு சொந்தமான வயல்களில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களின் கணக்கு பார்ப்பதாக ஐதீஹம்.


புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.  பெருமாளின் திருவடிகளில், நெற்கதிர்களை காணலாம்.


adiyen Srinivasa dhasan.









No comments:

Post a Comment