Sunday, October 21, 2018

Sri Peyalwar Sarrumurai 2018 : தமிழ் தலைவன் ஸ்ரீ பேயாழ்வார் அவதாரஸ்தலம்


நாந்தகம் என்ற வார்த்தைதனை  கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  :    சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword)  என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.:  அவை :  ~  உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.
Sri Peyalwar ~ Thiruvallikkeni divaydesam

Mayurapuri Mahadhmiyam in the Brahmandapuranam states :  when Sage Vyasa requested the Lord to show him the holiest of places where he could do penance, He pointed out to Madhavapuram (Mylapore) where Sage Bhrigu had earlier set up a hermitage and did penance.  It was very near the holy water source known as Santhana Pushkarani where all holy rivers merged on the Masi Makam day. Those who bathed in it on that day would get all their wishes fulfilled, the Lord said. To add to the holiness of the place was the fact that Peyazhwar, the last of the three saintly men hailed as "Mudhalazhwargal," was born in a 60-feet deep well


During this period Chennai and many parts of Tamil Nadu should be  experiencing heavy rains ~ not much this season as we fear how bad water crisis could become. Yet, there are days, when rains are not exactly welcome to us – one such day is Azhwar Acaryar Sarrumurai day.  
 Sri Peyalwar ~ Thirumayilai Sri Adhikesava perumal kovil

Mylapore has been a shoppers’ paradise ~  the  historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark with divine connection !  - the Arundale Street .. ..  next time, for sure when you travel on Kutchery road towards beach, you might take a turn and reach this place, if you have not visited this earlier…. at Arundale Street  – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection.

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham. 


ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.





ஆழ்வார் அவதரித்த கிணறு


அருண்டேல் தெருவில் உள்ள ஸ்ரீ பேயாழ்வார் அவதாரஸ்தலம்

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street [described in the first para of this post]  in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.




முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரை இருவரும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது, முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,*
என்னாழி வண்ணன் பால் இன்று"
- என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார்.






Today 20th Oct 2018  happens to be ‘Sadhayam in the month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar.   .. .. some photos of  Sri Peyalwar from Sri Adhi Kesavaperumal thirukovil purappadu and Alwar avatharasthalam at Arundale street, Mylapore.

adiyen Srinivasa dhasan.

PS  :  in the avathara sthalam there is another mantap at entrance to which Sri Peyalwar from Sri Mylai Madhava Perumal kovil visits.

Sri Peyalwar ~ Mylai Madhava Perumal Kovil




No comments:

Post a Comment