Tuesday, May 8, 2018

Thiruvallikkeni Sri Chakkarathazhvaar Theerthavari 2018


Sri Parthasarathi Brahmothsavam ~ Chakrathazhwar  Theerthavari 2018


                                  திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்திலே அதி அத்புதமாய் நடந்து வரும் ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவத்தில் இன்று (7.5.2018) 9ம் உத்சவம்.  காலை ஆளும் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு கண்டருளி - கலியன் வைபவம் நடந்த இடத்தில், கணையாழியை தேடுவதாம் போர்வை களைதல், கோவில் வாசலில் ப்ரணய கலகமாம் 'மட்டையடி'; திருமஞ்சன குடம், சக்ரத்தாழ்வார் புறப்பாடு; தீர்த்தவாரி திருமஞ்சனம்; என படு அமர்க்களம், மாலையில் பத்தி உலாவுதல் - கண்ணாடி  பல்லக்கு புறப்பாடு என ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ச்சிகள். 


இவ்வருடம் ஒரு மாடவீதிதனில் (நாகோஜி தெரு !) ஒரு அசம்பாவிதத்தால் - காலை புறப்பாடு  இல்லை - ஆள்மேல் பல்லக்கு புறப்பட்டு சரியாக மாலை 4 மணிக்கு நடை பெற்றது.  பெருமாள் திருமஞ்சனம் திருக்கோவில் உள்ளேயே நடைபெற்றதனால் - பெருமாள் திருமஞ்சன  புறப்பாடு இல்லை - சக்கரத்தாழ்வார் புறப்பாடு விமரிசை.


திருமாலுக்கே அடையாளமாக திகழ்பவர் சக்ரத்தாழ்வார். ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனை "சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” என்று விசேஷிக்கிறாள். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்  எம்பெருமானது திருக்கரங்களில் உள்ள  சுடராழியை விவரிக்கிறார்.  பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வார் விசேஷமாக ஸேவை ஸாதிக்கிறார். இவரை வணங்கி  பிரதக்ஷிணம் செய்து வந்தால் ஸகல தோஷங்களுக்கும் பரிஹாரம் கிடைக்குமாதலால்,  மக்கள் கூட்டம் இங்கே அலை மோதும்.   ஸ்ரீமன்நாராயணன் வலக்கரத்தில் உள்ள சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவனே ஸ்ரீ ஸுதர்ஸனர். 'ஆழி, வட்டவாய் நேமி, திருச்சக்கரத்தான், வலந்தாங்கு சக்கரத்தண்ணல், சுடராழி வலவன்  என்றெல்லாம் ஆழ்வார்கள் சக்ரத்தாழ்வரைக் கொண்டாடுகிறார்கள்.  க்ருஷ்ணாவதாரத்திலே எம்பெருமான் கண்ணன் ஸுதர்சனாழ்வானைப் பெரிதும் பயன்படுத்திக் காண்பித்தால், சக்ரத்தாழ்வான் மகிமை, க்ருஷ்ணாவதார காலத்தில் விசேஷமாகப் பரிணமிக்கிறது.  சுவாமி  தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ ஸுதர்ஸநாஷ்டகத்தில், திருவாழி ஆழ்வான் பெருமைகளாகிய எதிரிகளுக்குப் பயங்கரமாயிருத்தல், வேதங்களால் போற்றப்படுதல், உலகு நிலைக்கக் காரணமாதல், எம்பெருமானுக்கு அழகு செய்தல், பிரமன் முதலிய தேவரால் போற்றப்படுதல், எம்பெருமானுக்குப் பல வகையிலும் துணை புரிதல், ஸம்ஸாரபந்தம்  நீங்க காரணமாயுள்ளமை, யந்த்ரத்தில் அமர்ந்துள்ளமை, உலகில் அச்சத்தை ஒழித்தல் முதலியவைகளை விளக்கி அருளிச் செய்துள்ளார்.  (விவரங்கள் நன்றி : ஸ்ரீ கிருஷ்ணமாச்சார் சுவாமி : பாஞ்சஜன்யம் ஆசிரியர் - திருவரங்கம்)

Day 9 of Brahmothsavam would be hectic ~ morning there would be purappadu in ‘Ael mel pallakku’ – Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam, theerthavari – purappadu – evening Pathi ulavuthal – Kannadi pallakku – thirumbukal.    This year,  theerthavari fell on Monday 7th May 2018 – due to some exigency, there was no purappadu in the morning or rather the purappadu took place at 4 pm -  and hence  there was  ‘Porvai kalaithal’



Sri  Parthasarathi Perumal had grand purappadu and after porvai kalaithal and mattaiyadi – there was mandapa  Thirumanjanam.  In most divyadesams, theerthavari would take place in the holy pond when Chakkarathazhwar would be immersed ceremonially in the pushkarini – no longer in Thiruvallikkeni for obvious reasons.   At Thiruvallikkeni, is was happening at Kairavini pushkarini….alas, when monsoon failed and thirukulam dried up – it had to be in a big vessel with holy water.  Now there is some water in Thirukulam but that is felt to be not good and hence Chakkarath azhwar theerthavari continues in ‘ gangalam ‘ – the big vessel.

May  is  exceptionally hot – in the afternoon  walking on the street itself is arduous.  The passion and commitment of Sripadham thangigal makes them walk in the hot sun barefooted carrying the Lord on their shoulders and the Veda adyapaga arulicheyal goshti with even elderly people follows – divine happenings of Thiruvallikkeni – a darshan to behold.  Battacharyars do exceptional service.  That is our divyadesam.

Here are some photos of Sri Chakrathazhvaar theerthavari purappadu at around 7 pm. 

Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale saranam !
Obeisance to all kainkaryabarars including Battargal, Divyaprabandha Veda goshti swamigal, Sripadham thangigal and all others rendering kainkaryam to Emperuman. 

Adiyen Srinivasa dhasan.












No comments:

Post a Comment