Tuesday, March 13, 2018

Thiru Masi Uthradam~ 2018 Sri U Ve Kovil Kanthadai Chandamarutham Doddachar Sarrumurai


Thiru Masi Uthrada Mahothsavam ~ 2018
Sri U Ve Kovil Kanthadai Chandamarutham Doddachar Swami Uthsavam

இன்று திருமாசி உத்திராடம். கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி தொட்டாச்சார்ய சுவாமி திருவவதார உத்சவம்.

வாதூல குல திலகர் இவர். ஸ்வாமி எம்பெருமானாருடைய திரிதண்ட ஸ்தானமான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருக்குமாரர் கந்தாடையாண்டான் ~ பெருமாள் தோழப்பர், போரேற்று நாயகன், அரசப்பை, கந்தாடை நாயன், ஆகியோருக்குப்பின் தேவராஜ குரு என்னும் ஸ்ரீனிவாச மகாகுருவின் பௌத்திரரும், இராமானுஜ சித்தாந்தத்திற்கு உசாத்துணையாய் சண்ட மாருத பஞ்ச விஜயாதி பிரபந்த பிரவர்த்தகச்சார்யராய் ஸ்ரீ பக்தோசித சுவாமி திருக்கோவில் சன்னதியில் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியிருக்கும் கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி தொட்டாச்சார்ய ஸ்வாமி திருவவதார உத்சவம் இன்று.

சோளசிம்ஹபுரம் என்று பெருமை பெற்ற, 'திருக்கடிகை' என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 'இன்றைய சோளிங்கர்' - ஒரு அற்புதமான திவ்யதேசம்.  இத்திருக்கோயில் திருப்பணியை ஸ்வாமி தொட்டாச்சார்யார் வம்சத்தினர் தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகளாகச் சிறப்புறச் செய்து வருகின்றனர்.  இந்த உற்சவம் இம்மாதம்4ஆந் தேதி தொடங்கி இன்று 13.3.2018 சாற்றுமுறை.   திருக்கடிகையிலே இன்று காலை ஸ்ரீ சுவாமி தொட்டாச்சார்யர்  அதிகாலை 5 மணிக்கு  அக்காரக்கனி எம்பெருமான் திருக்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருளி திருமலைக்கு (பெரியமலை) எழுந்தருளித் தாயார், பெருமாள் சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்ருது  பெருமாள் சந்நிதியில் அலங்கார திருமஞ்சனம்,  திருப்பாவை சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்று, மாலை 5 மணிக்கு ஸ்ரீ தக்கானுடன் புறப்பாடு கண்டு அருள்வார்.

The Sri Vaishnavaite and Thennacharya Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan and our Sampradhayam is pround of the rich  lineage of greatest of Acharyars who have guided us towards salvation.  Today is a great day for us the sishyas of Sri U Ve Koil Kanthadai Chandamarutham Doddacharyar  Swami.

Today 13th Mar 2018 is Thirumasi Utharadam, the thiruvavathara mahothsavam of our Acharyar.   In  Kali Yuga – Sri DevapPerumal had direct interaction with Thirukachi Nambigal and our Doddacharyar Swami.   During the  most famous Garuda Sevai – at Thirukachi,  Lord Devapperumal is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi.  Garuda Seva has special significance not only for Kanchi, more so for  Sholinghur because of Swami Doddachaaryar connection ~ when Lord on Garuda flew down to   Sholinghur and gave darshan to Doddacharyar

From Emperumanar (Sri Ramanujar) – the lineage flows through Sri Mudaliandan, Swami Kanthadai Andan, Perumal Thozhappar, Porerru Nayakan, Arasappai, Kanthadai Naayan, Devaraja Guru (Srinivasa Maha Guru)- Swami Thoddayachar is worshipped in the sannathi of Sri Akkarakkani Emperuman thirukovil and this lineage has been rendering great service to the temple for centuries.


We are proud to follow the lineage of  Doddacharyar and follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Singarachaar Swami. Here is the thanian of our Varthamana Swami….

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ வரதேஸிக பௌத்ர ரத்னம் *
ஸ்ரீனிவாஸ ஸூரி பதபங்கஜ  ராஜஹம்ஸம் *
ஸ்ரீமத் வாதூலகுலவாரிதி பூர்ண சந்த்ரம் *
ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ  குருவர்யம் அஹம் ப்ரபத்யே **

With the  kind permission of our Acharya Swami, photo of Lord Krishna who gets daily pooja of our Acharyar is here.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!
ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே *** 

~ adiyen Srinivasa dhasan (S Sampathkumar)
13th Mar 2018.

Photo of Sri Thoddachar at Sholingur taken earlier by  Sri VN Kesavabashyam

No comments:

Post a Comment