The city of Chennai does not have good river
worth its name ~ there is Buckingham canal, Coovum river and .. river
Adyaru. You cross Adyar river at some
places while traversing the city. Apart
from couple of dilapidated disused bridges – the bridges in the city over the
river Adyaru are : Thiru Vi Ka bridge at
Adyar; bridge at Kotturpuram; Maraimalai adigalar bridge at Saidapet, causeway
in West Saidapet; at Jafferkhanpet and one at Manapakkam.
Chennaites will never forget Dec 2015 when
torrential rains swamped the city and water flowed over the bridge across
Saidapet, virtually dissecting the city with transportation coming to a
standstill. The river Adyaru emanates
from Malaipattu tank at Manimangalam Village and traverses 42.5 km,
flowing into Bay of Bengal. On that
fateful day when it flowed over bridges, it was reported that it was carrying more than one lakh cusecs of water on
December 2 and 3, much more than the official account.
At Thiruvallikkeni
Divyadesam there are daily, monthly, yearly uthsavams. Most of them occur on
specific nakshathiram. On
21.1.2018 [night of 20.1.2018 ~
rather early morning of 21.1.201] occurred ‘Eekkadu Thangal Thiruvural Uthsavam’. Eekkadu
Thangal near Guindy is an area known for its industries and it lies on the bank
of Adyar river. Every year, Sri Parthasarathi visits this place.
This Uthsavam is held on a Sunday in the tamil month of Maasi, when there are
no other special uthsavams. This year on Sunday 21st Jan 2018 was this grand festival.
Sri Parthasarathi Swami
started from His temple in the early hours of today at around 03.00 am (almost
a couple of hours late than the usual time) in beautifully made palanquin and after
‘mandakapadis’ at various places visited Eekkadu Thangal. The first halt
is at Thavana Uthsava Bungalow, then Sri Parthasarathi Swami Sabha, then Vijay
Avenue, Venkatrangam Street. Sri Parthasarathi then visited Mylai Madhava
Perumal Thirukovil ~ and later Sri Adhi Kesava Perumal Sannathi near Chithirai
Kulam; in between there are couple of halts at private places too..
[there will be a separate post of Azhwar mangalasasanam at Thirumayilai
later………]
Sri Parthasarathi after
Mylapore, goes via Alwarpet, T Nagar, Kodambakkam, Mahalingapuram, Saidapet and
finally reaches Eekkadu Thangal where Thirumanjanam is performed. The
purappadu is now on.. Here are some photos taken this morning. Perumal returns back to His abode on the same
day night.
மண்டகப்படி என்ற வார்த்தையை கேள்வியுற்று இருக்கிறீர்களா
? அகராதியின்படி இப்பெயர்ச்சொல்லுக்கு
: திருவிழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை மண்டபத்தில்
எழுந்தருளச் செய்வதற்காக ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் ஏற்கும் பொறுப்பு என உள்ளது.
திருவல்லிக்கேணி திவ்ய
தேசத்தில் : நித்யப்படி, மாதந்திர, வருஷாந்திர உத்சவங்கள் பலவும் சிறப்புற நடைபெறுகின்றன. திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு
உத்சவம் "ஈக்காடுத்தாங்கல் திருவூறல்
உத்சவம்". கிண்டி அருகே உள்ள ஈக்காடு
தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு
நாள் இங்கு எழுந்து அருள்கிறார். மாசி மாதம் மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக்
கிழமை இவ்வுத்ஸவம் நடைபெறுகிறது. பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார்.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்
நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில் இளைப்பாறுகிறார். திருக்கோவில்கள், சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள்
சில இந்த வரிசையில் உண்டு. பல வருடங்களாக இவ்விடங்களில்
பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு. பெருமாள்
இவ்விடங்களில் எழுந்து அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள்
பாலிப்பார். ஒவ்வொரு வருடமும் காலசந்தி முடிந்து அதிகாலை ஒரு மணியளவில் பெருமாள் திருக்கோவிலில் இருந்து புறப்பாடு கண்டருள்வார். இவ்வாண்டு எம்பெருமானின் திருமேனிக்கு அதீத கடினங்களை
குறைக்க - மண்டகப்படி உள்ள இடங்களில் பெருமாள் இறங்கி இளைப்பாறுதல் அல்லாமல், ஸ்ரீபாதம்
தாங்கிகளின் தோளிலேயே இருந்து, பக்தர்களுக்கு சேவை அளித்தார். இவ்வருடம் புறப்பாடு அதிகாலை 3 மணியளவில் துவங்கியது.
புறப்பாட்டின் பொது எடுக்கப்பட்ட
சில படங்கள் இங்கே.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
(ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
No comments:
Post a Comment