Sunday, August 6, 2017

ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar Sarrumurai 2017

இன்று (6.08.2017) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**  .. ..   can you connect Veeranam, Ponniyin Selvan, Solanum tirlobatum  (தூதுவளை)  !!!



At Chennai, it has rained for the past two days – it was sharp spell of showers yesterday ~ yet, it is hot and sweltering heat – residences are worried about water shortage.  Every street we see water tankers and people running after them with colour colour plastic pots.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, there is another important water source that supplements daily water supply to the city and that is more than two hundreds of kilo meters away……

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். “I take you all on time-machine (in a boat) to a period aeons ago … started a great novel written in 1950” … the wonder Ponniyin Selvan of Kalki – much happens here  – the story  starts with the description ‘bounded by Chozha kingdom and Thondainaadu, nearer ThillaiChirrambalam is a vast ocean-like lake ……….-and on that 18th day of Aadi – a young horse rider  ‘VanthiyaThevan’ was …… ’ here are few lines from that great novel :  before you read any further – have you heard of ‘Sollanum trilobatum’ – likely that you would have eaten this .. !!

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரிஎத்தனை நீளம்எத்தனை அகலம்?தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?

Wonder what the description is all about ~ it is the immortal writing of Kalki ‘Ponniyin Selvan’ novel.  The lake spoken about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th  century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River.

In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed) .. in recent decades much water has flown in concrete pipes becoming hotly debated corruption topic.  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  From  Veeranam lake in Cuddalore from which water is brought in by 230 km long pipeline.   The Veeranam project, to supply water to Chennai, was conceived in 1967; later got mired in rampant corruption; once there were so many pipes lying unutilized in the city that were synonymous with the corruption in the project .  The project's completion in 2004 was a major political victory for the AIADMK government of the time due to the project's long history of corruption and politicking. At some point of time, water started flowing from the lake to Chennai.  
Sri Veeranarayana Perumal Kovil - Alavanthar Avathara sthalam – Kattumannar Kovil.

Alavanthar at Avatharasthalam 

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வதுஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார்சேனை முதலியார்ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார்மணக்கால்நம்பிஅடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.  ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர்.  நாதமுனிகளின் பேரன்.

நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில்ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்)ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். 

திருவரங்கத்து அமுதனார் தமது  'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால்நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :

நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன்இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய*  இராமானுசனென்னைக் காத்தனனே.

-  மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று,  இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக்காத்து அருள்வார்.

நாதமுனிகளும்யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில்  உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.
வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.

ஆளவந்தார்  அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ரரத்னம்,சதுஸ்லோகிசித்தித்ரயம்ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம்மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.

Now getting back to the lake, Sri Vaishnavaites have more to remember and like  of this. The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  It is here that our Acharyars Nathamunigal and later Sri Alavanthar were born. Yamunaaryar [Alavandar] born in Aadi Uthirada nakshathiram, was a genius – a child prodigy known for his prowess  of eka-santha–graha (remembering forever by learning only once). He was known for his sparkling intelligence, didactic logic and exceptional devotion to Sriman Narayanan.  His defeating a much learned Akkiyalvan is very famous.  After the debate, the Queen hailed Yamunar as 'Alavandar'-' one who came to rule /  save me'.

It was due to the ceaseless efforts of Sri Rama Mishra (Acharyar Manakkal nambi), the desciple of Uyyakkondar that Yamunacharyar was initiated back to the spiritual life. Sri Rama Misrar initiated Yamuna into the ultimate truths and passed to him the spiritual treasures bequeathed to him by Sri Nathamuni. After the initiation, Yamuna became the leader of Visistadvaita Vedantins and settled at the holy place of Thiruvarangam. He gave our Sampradhayam, priceless treasure-trove of 8 works of which most important are the : Chatusloki on Pirattiyar; Sthothra Rathinam extolling Emperuman; Sri Geethartha Sangraham, which formed the basis for Udayavar’s Gita Bashyam. He identified and gave us the Greatest of Acharyas – ‘Sri Ramanujar’ as he spontaneously called Udayavar ‘He is the First of all -   'ஆ முதல்வனிவன் [aa muthalvan ivan]’

Solanum tirlobatum  (தூதுவளை)  is a medicinal herb that can be consumed by frying in ghee and grinding it to paste.  The thorny shrub has to be cleaned carefully as thorns are considered mildly toxic.  The dried leaves are made in to powder and used to treat fever and common cold.  Many Indian medicines use this herb ~ this is no post on cooking or medicine – but this herb played its part in Srivaishnavism.   In the early days, when Yamunaryar won the kingdom by his knowledge, he was enjoying the life as a King.  Our Acharyar Manakkal Nambi used to supply this herb to the kingdom and took chance to meet Yamunar, started teaching him Geetha and later ensured that he reached  Periya Perumal at Thiruvarangam, ensuring that Srivaishna lineage got benefitted by Acharyar Alavanthar.


Here are some photos taken during today’s purappadu of Alavandar with Sri Parthasarathi Perumal  at Thiruvallikkeni divyadesam



Adiyen Srinivasadhasan                                                                                   6th Aug 2017


1 comment:

  1. A very useful information on Sri Alavandhaar.Only such reminders will keel younger generations to follow SriVaishnava sampradhayam

    ReplyDelete