Saturday, July 1, 2017

Thiruvallikkeni Sri Varadharajar Aani Hastham purappadu 2017

At Thiruvallikkeni, Kodai Uthsavam concluded and even as we wait for the grand brahmothsavam of Sri Azhagiya Singar, today is Aani Hastham and Sri Varadharajar had chinna maada veethi purappadu.

The annual brahmothsavam of Sri Devathirajar concluded only recently and for sure you have seen many many photos of Thirukachi Sri Varadharaja Perumal purappadu and had great darshan of the Swami, for whom Brahma created the annual uthsavam.  Below is a small part reproduced from the writings of Sri Srinidhi Akkarakkani Swami (thanks to him and my friend VN Kesavabashyam for the post and photos of Thirukachi, [the first 3] which are seen here).  The rest are the photos of Sri Varadharajar taken in purappadu this evening.




இன்று ஆனி  ஹஸ்த திருநக்ஷத்திரம் ~   திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜர் சின்ன மாட வீதி புறப்பாடு கண்டருளினார். அல்லிக்கேணியிலே தேவப்பெருமாள் மூலவரே கருட வாகனனாய் காட்சி அளிக்கிறார். 

பெருமாள் கோவில் என்று ஸ்ரீவைணவர்கள் கொண்டாடும் திருக்கச்சி திவ்யதேசத்தினிலே அருளாளர் தேவாதிராஜன் எழுந்து அருளியுள்ளார்.  இங்கே பெருமாள் எழுந்தருளியதும் உத்சவங்கள் மிக சிறப்புற  நடைபெறுவதும் தொன்றுதொட்டு நடைபெறுபவன.  எம்பெருமான் பிரமன் தொழ இங்கே வந்து அருளினார்.

திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று " பின்னானார் வணங்கும் சோதியாய்" பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும் , அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் ! பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன் ; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய் , "வேழமலை வேந்தனிடம் " நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இங்கேயே ( காஞ்சியிலேயே ) தங்கிவிடும் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் !

" நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் " ( ந்யாஸ தசகம் ) என்றபடி , காஞ்சியில் தேவப்பெருமாள் திருவடியிணைகளில் கைங்கர்யத்தை வேண்டினான்..  பிரம்மனுக்கு, வரதன் அருளின அற்புத வார்த்தைகள் :  நான் என்றென்றைக்குமாக இந்த அத்திகிரியில் நின்று கொண்டு வரந்தரு மாமணிவண்ணனாய்,  ஸநாதந தர்மத்தை வாழ்வித்துக் கொண்டு , ஸஜ்ஜநங்களைக் ( நல்லவர்களை ) காத்துக் கொண்டு , ப்ருகு புத்ரியாய்த் தோன்றிடும் பெருந்தேவியுடன் கூடி, " பெருந்தேவி மணாளனாய் " , கலியுக வரதனாய், கண் கொடுப்பவனாய் , அடியவர்களுக்கு ஸுலபனாய் நின்று ரக்ஷித்துக் கொண்டிருப்பேன் !

அத்தகைய திவ்யதேசம் கண்டு தொழுவோம்; எங்கெங்கும் ஸ்ரீ வரதனின் தாள் பணிந்து பேரருள் பெறுவோம். !!

வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 2 ) : எழுத்து ஸ்ரீ உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி. திருக்கச்சி படங்கள் : திரு VN கேசவபாஷ்யம் சுவாமி.

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.

1st July 2017








No comments:

Post a Comment