Saturday, July 15, 2017

Sri Azhagiya Singar Pushpa Pallakku today ~ 15th July 2017

ஸ்ரீமன் நாராயணனுக்கு மணம் தரும் நன்மலர்கள் மட்டுமே சமர்பிக்கப்படுகின்றன. 


Shri Narendra Modiji  became  the first Indian Prime Minister to visit Israel and was welcomed with a large amount of pomp and show. The historic visit was marked by a warm welcome address by the Israeli prime minister Benjamin Netanyahu wherein he referred to Modi as “mere dost” (my friend) on multiple occasions. On his first day of the visit, Modi visited the Danziger “Dan” flower farm along with his Israeli counterpart and was soon bestowed with the honour of a flower being named after him. The fast growing Israeli Crysanthumun was named as “Modi” in honour of his visit to the country.

Bees are lured by flowers.    Bumble bees create foraging routes by using their experience to select nectar-rich, high-rewarding flowers. A study by University of Toyama in Japan now suggests that bees actually forage more efficiently when flower sizes are large rather than small. This indicates that for these insect pollinators foraging quickly is more efficient than foraging accurately.



Back home, flowers are considered important in our worship.  We offer flowers to our Gods. Blooming flowers are one of the most beautiful things you can see in nature. After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Thelliya Singar - and after 3 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’.  The floral palanquin  looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas.

பூக்கள் அழகானவைநறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளதுஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம்நில வளம்மக்களின் மனவளம்ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர்.   நீலம், நெய்தல், குவளை, ஆம்பல், அனிச்சம்; குறிஞ்சி;  வாகை;வகுளம் ; கோங்கம்; - என பல மலர்கள் உள்ளனவாம்.  இவை பல நாம் பார்த்ததில்லை அல்லது பார்த்தாலும் இதுதான் என விவரிக்க தெரியாது.  சிறுவயதில் பல இல்லங்களில்  மந்தாரை இலையை சாப்பிடும் தட்டாக உபயோகித்து பார்த்துள்ளேன்.  சில தகவல்களின் படி, ஐரோப்பிய நாடுகளுக்கு மந்தாரை இலைகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.   ஆங்கே மந்தாரை தட்டுகள் வழக்கத்தில் உள்ளனவாம் !!

நாம் பார்த்த அளவில் - மல்லிகை,  முல்லை,  செண்பகம், தாமரை,மகிழம், ரோஜா,  அல்லி, விருச்சி,  செங்காந்தள்;   போன்ற நறுமலர்கள் திருக்கோவில்களில் எம்பெருமானுக்கு சாற்றப்பெற்று வருகின்றன. 

**மல்லிகைகமழ் தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை  தவறுமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ செக்கர்நன்மேகங்கள் சிதைக்குமாலோ**

Swami Nammalwar says …. ‘the most pleasant fragrance of jasmine –wafting breeze,  ears receiving the pleasing kurinji music; Sun setting with beautiful red colours in the horizon – all attracting -  but more attracting was the pleasing sight of the fragrant palanquin made of flowers – for they were set for the most beautiful Allikkeni Emperuman ‘Sri Parthasarathi’.


Today (15th July  2017)  in the evening it was the grand   Pushpa Pallakkuu for Sri Azhagiya Singar. Favourite memories are triggered by our sense of smell ~ flowers are admired for their beauty, exquisite shapes, spectrum of colours and more so for their fragrance. In our tradition, the decorative wreath of flowers woven together as garlands adorn God.  Flowers have their pride of place and are mentioned in our epics – in Divyaprabandham too.   The pallakku made of flowers  was fragrant pervading  all around – a great treat to the eyes, ears and senses  of Bakthas. At Triplicane [Thiruvalikkeni divyadesam] Sri Thelliya Singar had purappadu in Pushpa pallakku.    Here are some photos taken during the purappadu. **








புஷ்பங்கள்  பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. சுவாமி நம்மாழ்வார் "மல்லிகை கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை"  என்னும்போது -- மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலையும்;  வண்குறிஞ்சி இசை என்னும்  இடத்தில் 'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்குறிக்கிறார்- குறிஞ்சி என்று ஒரு நிலப்பரப்பும்குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு.   பெரியாழ்வார்  - "வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை" என - மேல்தோன்றிப்பூ,  மல்லிகைசெங்காந்தள் பூ,  காட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார்.  பெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்துஅவருக்கு  செண்பகம்,  மல்லிகைபாதிரிப்பூ,  தமனகம்மருவு,  செங்கழுநீர்,  புன்னைகுருக்கத்தி,இருவாட்சிகருமுகை என பலபல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார்.  பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன்,இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.  

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் நல்ல  மலர்களால் ஆனது. திருவல்லிக்கேணியில் பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான்   'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  இவ்வமயத்தில் இசைக் கச்சேரிகளும்  திருக்கோவிலில் நடைபெறுகின்றன.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும்,அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும்உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும்முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.


இன்று (15.7.2017 ) இரவு, ஸ்ரீஅழகிய சிங்கர் ஸ்ரீ பார்த்தசாரதி  சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.


அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment