On 9th
May 2017, as I made the first search of the day, Google's Doodle featuring a pair of brown and blue eyes taking on the
famous chart attracted me.
Following that Google doodle I do made a post on google’s way of celebrating the 181st birthday
of the man whose name too was hidden among the letters ~ it was about Ferdinand
Monoyer and of the measure in optometry.
Focus shifts ! and this is about all too different focus, that of a
disciple on his master !!
For ordinary mortals,
there is the samanya Sasthram. Azhwars
were totally different – they were blessed with the benevolence of Sriman
Narayana and were focused only on Sriman Narayana. This Alwar however was too focussed
on the epitome of kainkaryam at the feet of his master and thought of none
else. For him, Sadakopa was the only
true guide and preceptor. He knew or
thought of none else; he was too elated in singing holy Upanishad utterances of
Sadagopa and realized the ennobling qualities and benign virtues of Swami
Nammalwar.
Today, 9th May
2017 is ‘Chithiraiyil Chithirai thirunaal’ [Chitra Nakshathiram in the
month of Chithirai] ~ the birthday of Sri Madhurakavi Azhwar. He
was born in Thirukkolur as incarnation of Sri Garuda. He sang only one
divyaprabandham ~ ‘Kanninun Chiruthambu’ consisting of only 11 hymns; his
life was intertwined with that of Sri NammAzhwar.
Of the Nava Thirupathi
divyadesams, Thiruk Kurugoor is hailed as Azhwar Thirunagari, as it was here
Swami Nammalwar was born. Madura Kavigal saw the leading light from
Thiru Ayodhya and travelled all the way to Azhwar Thirunagari and identified
Nammazhwar in the Puliyamaram. He as a disciple was attracted to
the holy feet of ‘Kurugaip Piran’ [Swami Nammazhwar] that he sang
only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to
Nammazhwaar ~ an exceptional piece of guru bakthi.
கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண்டிசையுமறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
Azhwar in his exalted
state claims that Nammalwar, the son of Kari transformed him ( a person
who was not worthy of any values) by taking care and being
considerate towards him and removed him of his sins by guiding him to the right
path, hence he will loudly proclaim the glory of the kindness of the one who is
the source of sweet Tamil poets , spreading his fame in all directions (that is
he would sing in praise of Nammalwar only)
**************************************
பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின்
பெருமையும் நம்மாழ்வார் அவதரித்த தலம் எனும் பெருமையையும் ஒருங்கே கொண்டது : ஆழ்வார் திருநகரி.
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர்
என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார்
ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். மதுரகவியாழ்வார்ஒரு
சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது
அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி
நடந்து வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு
வந்ததும் மறைந்து விட்டது.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள
"உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை
சேவிக்கலாம். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த
மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த
சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர்
கண்விழித்தார். "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை
தின்று எங்கே கிடக்கும்" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார்
கேட்டார்?
அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்றார்.
மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.
அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்றார்.
மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.
இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி
ஆழ்வார் அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம்
கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு
எல்லாமாகக் கொண்டாடுகிறார்.
** தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி; பாவின் இன்னிசை
பாடித்திரிவனே.**
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.
Photos of Sri Mathurakavi Azhwar sarrumurai at Thiruvallikkeni divyadesam :
No comments:
Post a Comment