Tuesday, April 4, 2017

Sri Rama Thiruther at Thiruvallikkeni 2017

இன்று ஸ்ரீ ராம நவமி உத்சவத்தில் எட்டாம் நாள் ~ சிறிய திருத்தேர்* 


சக்ரவர்த்தி  திருமகனாம் ராமபிரான் ~ மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய்தலையற்றற்று வீழத் தொடுத்த தலைவன் அன்றோ  ! 

உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவார்.  

இந்திரனின் ரத சாரதி மாதலி,  வெறும் தேரோட்டியாய் மட்டும் இல்லாமல், சமயங்களில் தகுந்த ஆலோசனைகள் கூறும் மதியூகியாகவும் செயல்பட்டான்.  இதோ கம்ப இராமாயணத்தில் காவிய நாயகன் ராமனின் திருத்தேர் பற்றி :
மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் * பூதலம் எழுந்து படல் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்* பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில்.

பெருங்கடல்கள்   சூழ்ந்துள்ள, இப்பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற தன்மை கொண்ட, வண்ணமயமாய் ஒளிரும்  பொன்மயமான தேரை, இந்திரனின் ஆணைப்படி அவனது தேரோட்டி மாதலி கொணர்ந்தனன்.   குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்  மற்றும் (மேல்  மண்டலத்தில்)    உள்ளனவும்  தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும் படியாய் தேவர்கள்   அனுப்பிய   தேர்   தன்   உயரத்தால் ஆகாயத்தின் மேல் பரவியது.   அத்தகைய சீர்மை பெற்ற தேரின் மேல் இராமபிரான் ஏகினான். 

Today is day 8 of Sri Rama Navami Uthsavam and today it was Thiruther at Thiruvallikkeni divyadesam.  After kulakkarai purappadu, Sri Rama with Sita Piratti and Ilayapiraan Ilakkuvanan ascended the Chariot and had periya mada veethi purappadu.

In festivities, Thiruther attracts very huge crowds ~ the roads broad enough to have the juggernaut rolling by are called ‘Ratha veethis’  - on this occasion, huge crowds throng to have darshan of Emperuman in Thiruther.  Here are some photos taken this day.

Adiyen Srinivasa dhasan

4th Apr 2017.


No comments:

Post a Comment