மூப்பு என்றால் என்ன ? தெரியுமா ??
: - வயதானநிலை, வயோதிகம், முதுமை; ஒப்பீட்டளவில் அதிகவயது. முதுமை கொடிது அல்ல; ஆனால் அவ்வயதில் பலநோய்கள்
தாக்கக்கூடும். இவ்வுலகத்திலே எத்துணையோ கஷ்டங்கள்
! ~ பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு
கூடிய பலபிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக்கண்ட நெஞ்சையும், அல்லல்படும்
சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மை காக்கவல்லன்
யார் ? ~ who is our eternal saviour ?? – there is only one answer :
Sriman Narayana.
திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று [17th
Apr 2017]. ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். இன்று காலை ஸ்ரீபார்த்தசாரதி அழகுபொலிந்திட
தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டுஅருளினார்.
சூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள்
மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு
ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு
பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக
இடிக்கப்பட்டு, பெருமாள்
திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும்
கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது.
விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால்
ஆன பிரபந்தம் இது. இதோ
இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் திருச்சந்தவிருத்தத்தில்
இருந்து :
அச்சம்நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை
வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்
அச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.
பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள்
ஆகிய இவற்றையும்; இவற்றை
அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப்
ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது
சயனித்திருக்கும், வேதங்களினால்
பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே !
Today is the 6th day
of Brahmothsavam at ThiruvallikkeniDivyadesam for Sri Parthasarathi. This
morning after ‘Choornabishekam’, Sri Parthasarathi had purappadu in
‘AnandaVimanam [PunniyaKodivimanam]’. In the purappadu,
‘ThiruchandaVirutham’ given to us by Sri ThirumazhisaiAzhwaar was
rendered. These 120 songs fall under the type ‘viruthapaa’ – they
are replete with numbers and fall under a specialized category of tamil grammar
called ‘ennadukkicheyyul’.
Alwar categorically advises
us that in the World where one faces fear, trepidation, diseases, various forms
of trouble and lives with a heart that trembles upon feeling these and an
unhealthy body that suffers – the only saviour who can remove all ills and
provide salvation is the only One with unmatched valorous qualities, One who
never lets down His devotees, One who has no Origin nor end; Only One capable
of decimating all opposition – Lord SrimanNarayana reclining at the milky Ocean
on Adhiseshan. Let us fall at the lotus
feet of Him.
Some photos taken during the
morning purappadu are here.
No comments:
Post a Comment