On the
beautiful Kairavini Pushkarini [Thirukulam of Sri Parthasarathi swami temple] –
theppothsavam is on. The first 3 days
were for Sri Parthasarathi and today 1st Mar 2017 was Sri Azhagiya
Singar Theppam.
Sri Azhagiya
Singar was exceptionally attractive – oozing beauty. Is He not the Lord whose anger ensured that
in protection of His baktha Prahalada, the powerful Hiranya was shredded by the
finger nails; in His anger, His red eyes shone like hot embers, fire came
through his gaping mouth, He resembled a ferocious mighty lion. What a
beautiful form it was! – at Thiruvallikkeni,
He is the most beautiful Azhagiya Singar – He is always beautiful and
pleasant – for His anger is only directed at those enemies of His devotees.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்
மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது. முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்த்தசாரதி; இன்று
ஸ்ரீ தெள்ளியசிங்கர் தெப்போத்சவம் கண்டருளினார்.
ஸ்ரீ நரஸிம்ஹம் என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக
கோபம் கொண்டவர் உக்ரமூர்த்தியாக சேவை சாதிக்கிறார். அல்லிக்கேணி விஷயம் வேறு ! இங்கே மூலவர் யோகநிஷ்டையில்
யோகா நரசிம்மர். உத்சவர் - அற்புத அழகு மிளிரும்
அழகிய சிங்கர். இரணியனை இருகூறாக பிளந்த உருவம்
சாந்த சொரூபியாகுமா என ஐயுற வேண்டா !!
இதோ நமக்கு திருமழிசைப்பிரான்
அருளமுது :
இவையா
பிலவாய் திறந்தெரி கான்ற*
இவையா
எரிவட்டக் கண்கள் – இவையா*
எரிபொங்கிக்
காட்டும் இமையோர் பெருமான்*
அரிபொங்கிக்
காட்டும் அழகு.
இமையோர் பெருமான் என
நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து ஆழ்வார் வினவுகிறார். நெருப்பை உமிழ்ந்த பாழி போன்ற பெரியவாய் இவையா ? ; இவையா கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற திருக்கண்கள்
?? இதுவா - அக்னிபோல கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா அவனது திருமேனி
அழகு !!! என்ன அற்புதம் !
நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு
பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப்
பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.
[சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]
Here are
some photos taken during today’s purappadu
Adiyen
Srinivasa dhasan [Thiruvallikkeni S. Sampathkumar]
No comments:
Post a Comment