Kodungallur, is a municipality in the South Western border
of Thrissur district of Kerala – which has had a rich history of commodity
trade of pepper, pearls, muslin, ivory,
diamond, silk and perfumes. Centuries
ago, this place was captured by Rajendra Chola I of Chola dynasty. We are reading this because of this place’s
association with Azhwar. On NH 17, few
kms away on the south of Kodungallur lies Thiruvanjikulam, locally known more
aptly as ‘Thiru Kulasekhara puram’ – which gives you all the information that
you would have looked for.
The place is is known
locally as Thiru Kulasekhara Puram, a suburb of Kodungallor. It is about 3 kms south of the town Kodungallor, on
NH 17. Kodungallor can be reached from Irinjalakuda or Kochi on the Chennai-
Thiruvanathapuram railway line.
Today, 8th Mar
2017 - is ‘Punarvasu (punarpoosam)
nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Sri Kulasekhara
Azhwaar. He was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Sriman
Narayana. He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and
ruled the Chera Empire. He was greatly devoted to Rama and ‘Ramayana’ and
reverred Sri Vaishnavaites with devotion.
His contribution in ‘Sri
Naalayira Divya Prabandham’ is 105 songs titled ‘Perumal
Thirumozhi’. In the 4th chapter – he sings about his
various wishes of the forms that he would like to take for doing service to the
Lord Balaji at Thirumala. In one of these songs, he says ‘he would
eternally be waiting as the step before the Lord, as he could
continuously have darshan of Lord Thiruvengadavan’ all the time. After
these beautiful words, the padi (doorstep) at Thirumalai is known as
‘Kulasekara Padi’.
Azhwar sings about the Lord
at Vithuvakkodu [Vithuvakottamma] in another hymn adopts a beautiful
meataphor …. compares his commitment to the Lord at Thiru Vithuvakkodu saying
that ‘ a patient would always be attached to the Doctor, though he might give
him temporary pain by cutting and treating him with heated instruments – still
the love would last’ …. Similarly Azhwar has nothing but boundless affection
towards the Lord.
Today is the concluding day
of Thavana Uthsavam at Thiruvallikkeni Divyadesam - there was veedhi purappadu
of Kulasekhara Azhwaar alongwith Sri Parthasarathi – thirumanjanam at Thavana
Uthsava bungalow and purappadu in the evening.
******************************
இன்று ஸ்ரீவைணவர்களுக்கு சீரிய
நாள். 'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய்
தோன்றிய சேரலர் கோன்'குலசேகராழ்வார்' அவதரித்த
நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்குளத்தில்
- திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.
வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது. இவர் திருமால் மீது கொண்ட பக்தியால் அவரது அடியார்களுக்குத்
தொண்டு செய்தே காலத்தைக் கழித்து வந்ததால்,
அவரின் மந்திரிகள் ஒரு தவறான திட்டம்
போட்டு, குலசேகரரின் திருவாராதனப் பெருமானின்
விலைமதிக்க முடியாத நவமணி மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அதனை யாரோ ஒரு திருமாலடியார்தான்
திருடிச்சென்று விட்டார் என்று அவரிடம் சொல்லினர். திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல்
செய்யார் என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில்
கையிட்டு நிலை நாட்டினவர் இவர்.
ஆழ்வார்களின் பக்தி அபரிமிதமானது. ஸ்ரீராமாயண உபன்யாசம் கேட்கும் போது, ஸ்ரீராமபிரான்
போரிட செல்கிறான் எனக்கேட்டவுடன், குலசேகரன் தன்னை முற்றிலும் மறந்து, ராமபிரானுக்கு
உதவ தன் சேனையுடன் ஆயத்தமானார் ! பின்பு சக்கரவர்த்தி திருமகன் தானாகவே கரன், தூஷணன்
போன்ற அரக்கர்களை அழித்ததையும், இராவணனை கொன்று பட்டாபிஷேகம் நடந்ததையும் கேட்டு ஆனந்தமுற்றார்.
திருவேங்கடமுடையான் மீது கொண்ட
அபார பக்தியினால் இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும் அற்புத பிரபந்தம் -
(105) பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம்.
ராமகாதையை பத்துப் பாசுரங்களில் இயற்றி, திருசித்ரகூடப் பெருமானுக்கு (சிதம்பரம்) அர்ப்பணித்தார். "ஊனேறு
செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்'என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்'
என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும்
பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்,எம்பெருமான்
பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே !" - என்கிறார்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்
இன்று ஸ்ரீ பார்த்தசாரதி தவணை உத்சவம்
- பெருமாளுடன் குலசேகர ஆழ்வார் புறப்பாடு கண்டு அருளி திருமஞ்சனமும் கண்டருளினார்.
மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன்
பிறப்பால், நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள்,இந்நாள் !! குலசேகர ஆழ்வார் வாய் மொழியான
சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர், தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம். சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே !!
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
PS : Alwar Thirumanjanam lovely photos credit
: Thirumalai Vinjamoor Venkatesh (Jilla) Swamin.
No comments:
Post a Comment