Saturday, October 1, 2016

Thiruvallikkeni Purattasi Sani varam 3 ~ Sri Thelliya Singar purappadu 2016

எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான சுபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட பட்டு வஸ்திரங்கள்-  அழகாக வடிவமைக்கப்பட்ட தோளுக்கு இனியான்”  -   * இன்று மாலை திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.

திருப்பரமபதத்திலே உள்ள நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் ஸமர்ப்பித்து ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு  என்கின்றனராம் ~ ஸ்ரீ பேயாழ்வார்  - முறைப்படி உள்ளுருகி  சீர்மையான வழிமுறையாலே எம்பெருமானை உள்ளது உள்ளபடியே காண விரும்பு என்கிறார். 

Today 1st Oct 2016 is 3rd Saturday in the month of Purattasi and at Thiruvallikkeni – Sri Azhagiya Singar dazzled.  One could not take eyes away from the resplendent splendour – enhanced by the ornaments, the green silk draped, the crown, fragrant garlands, majestic walk  - while the celestials at Thiru Paramapadam, the abode of Emperuman bowed their crowned heads at the feet of Him, offering most fragrant flowers, longing to see Him, Sri Peyazhwar advises us all to melt with the desire to see Him as He really is.

Here are some photos taken during today’s periya maada veethi purappadu.

Adiyen Srinivasa dhasan 


Divyaprabandham meaning credit : dravidaveda.org (Swami PB Annangaracharyar Swami of Thirukachi)








No comments:

Post a Comment