Friday, August 26, 2016

celebrating birth of Sri Krishna ~ Sri Jayanthi 2016 : கண்ணன் பிறந்த 'ஸ்ரீஜெயந்தி'

Today on 26th Aug 2016, Sri Jayanthi is being celebrated grandly  at Thiruvarangam, Thiruvallikkeni and many other divyadesams.. ..  at  every home -  in the manner of Lord Krishna being born there  – devotees are elated.  We, the followers of the lotus feet of Sri Krishna,  paint the footsteps of little Krishna – exhibiting His walking inside our home,  do Thirumanjanam for the vigraha at home, make Him adorn new  clothes; offer Him choicest dishes made with love at home. We also offer Him variety of fruits including blue jamuns.


இன்று 'ஸ்ரீ ஜெயந்தி' என்றும் சிறப்புற கொண்டாடப்படுகிறது.  இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Partha Sarathi, Lord Krishna by volunteering to run the chariot for Arjuna attaining the name ~ (a photo of Emperuman Sri Parthasarathi taken on 15th Jan 2008) is at the end of this post.

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும்சிறு பயற்றம்பருப்பும்காய்ச்சித்திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்மணம் மிக்க நெய்யும்பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை")  எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீராமநவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா!   [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது] 

பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்துவாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்துநம்மை பாதுகாப்பார். 

Bhagwan Krishna’s birth variously known as Gokulashtami, Krishna Jayanthi and more is often referred to in the South,  as Sri Jayanthi.  There is ill-conceived a notion that ‘Jayanthi’ refers to the birth date and thereby we have no. of Jayanthis !!! -  Heard from Dr MA Venkatakrishnan, a renowned scholar in Sanskrit and Vaishnavism that ‘Jayanthi’ connotes ‘muhurtham’ – among the various muhurthams i.e., the classification of time – one occurring between ‘Ashtami closer to Navami’ and on Rohini is known as ‘Jayanthi’ and it was on this muhurtham Lord Krishna was born.  Because of the birth of Lord Krishna, this muhurtham attained special significance. As Srivaishnavaites prefix ‘Sri’ with all auspicious things associated with SrimanNarayana, it became ‘Sri Jayanthi’ – hence there cannot be any other Jayanthis – the one and only Jayanthi is that of Lord Krishna.  Just as the birth of Lord Rama is ‘Sree Rama Navami’ – that of Lord Krishna is ‘SreeJayanthi’. 

Born in this land and following Lord Sri Krishna, we are blessed to have received His upadesams ~ the most sacred ‘Bhagavad Gita’ -  also known as Gitopanishad. It is the essence of Vedic knowledge.   It is handed over to mortals by Bhagwan Sri Krishna Himself.  Here is one verse from chapter 18

Acts of sacrifice, charity and penance are not to be given up; they must be performed. Indeed, sacrifice, charity and penance purify even the great souls. The yogis should perform acts for the advancement of human society. There are many purificatory processes for advancing a human being to spiritual life.  Even  among kamya karmas, those sacrifices, charities and austerities, which are sattvika in nature, without desire for results, should be performed. Sacrifice, austerity and charity must be done, because they cause purification of the consciousness. These acts  enjoined in the Vedas should not be relinquished by the aspirant for release, but should be performed day after day until his death. Contemplation is worship.

For a Srivaishnavaite, the simplest karma is to worship Lord Krishna, fall at His golden feet, follow Him truthfully, do service to Him and to His bhagavatas.


அடியேன் ஸ்ரீனிவாசதாசன்   [ஸ்ரீ சம்பத்குமார்] 

No comments:

Post a Comment