Sunday, August 28, 2016

Sri Jaynthi Krishnar purappadu : Uriyadi 2016 :: 'காளிங்க நர்த்தனனாய்" திருக்கோலம் பூண்ட கண்ணன்

உரி அடிக்கும் விழாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் :  a news item in The Hindu – Tamil readஉரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். ஆங்கிலத்தில் இதனை Synonym என்கின்றனர்.

Having celebrated the birth of Lord Krishna on 26th Aug 2016, lot more was to follow.  Lord Krishna was born in every house of His devotees; in the morning of 27th Aug, there was purappadu of Bala Krishnan [Kalinga Narthana kannan] visiting various places.  At Thiruvallikkeni, it was little dancing Krishna in Sesha vahanam. 

In the evening, occurred the grand purappadu of Sri Parthasarathi, as ‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’ [Pinnakilai vahanam].  BalaKrishnar was there in the vahanam too.   On this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging object [with hidden gifts inside]  with sticks  is played, specially by Yadavas (the cowherds), the clan of Lord Krishna Himself.  The game is very fierce as the clubbing with a stick is made most tough with  others fiercely throwing  water on the player.  The water twirled out of cone shaped pitchers would flow like a whip and can cause some pain too, when struck.  This is a traditional game. 

Triplicane has a fair sprinkling of Yadavas and there was grand uriyadi at the entrance of the Temple and at Singarachari Street nearer Nagoji Rao Street intersection. Here are some photos of the purappadu.  One can have darshan of  Lord Krishna at the feet of Lord Parthasarathi, sitting on Punnaikilaivahanam. 

In the Northern part of India ~  on the occasion of Krishna Janmashtami is played ‘Dahi Handi’ ~ which in recent years has been in news because of Court imposing restrictions.  In the annual Dahi Handi ritual, human pyramids compete to reach for Dahi Handis or pots filled with curd that are strung up high on poles. Participants call themselves "Govindas" - another name for Lord Krishna - and wear colourful costumes. It is always difficult and sometimes unwanted to have judicial activism on such matters.  These are matters of faith and Courts are unlikely to understand or interpret it properly. Then there is always the feeling that Courts / Governments / Administrators do not impose such harsh restrictions when it comes to other religious practices nor would Police enforce as rigorously.  In Chennai, Police and State Govt restricts Hindu processions and gags Hindu leaders; for a week or so, the arterial Mount Road was daily blocked when another sect protested against a movie – the actor would justify his crass comments against Hinduism bent on his knees to have the trouble subside.


Pic credit : National geographic.
However, the Apex Court refused to rethink a ban on taller "Dahi handi" human pyramids - popular during the Janmashtami festival in Maharashtra stating that  "to increase the height is very scary". A Mumbai-based group had asked the court to reconsider its own order and raise the 20-feet cap, voicing a demand that is backed by almost every political party in Maharashtra. The court commented: "Are you getting an Olympic medal also for this? Then we will be happy."  Unwarranted comments one feels, what a religious practice to do with Olympic medal and would Court ban Produnova as it is risky or ban IPL and other forms of Cricket because Phil Hughes passed away struck by a vicious bouncer and an Australian Umpire was injured in the head at Dindigul in a Ranji match !!  The Maharashtra government had also told the court that "height is the charm of the game and courts can consider increasing the height to 25 feet."

At Thiruvallikkeni divyadesam it is a rare occasion when there is no arulicheyal goshti.  In today’s purappadu,  Yadavas have prominence ~ there was this group of kids and a couple of elderly persons with sticks in hand for Uriyadi and chant of Govinda on their lips.  It was something like this :
·        Paraalum Venkatesa perumalukku oru Govindam podu (others in chorus) – Govindha, Govindha !
·        "maayanukku oru Govindam podu da" - Govindha, Govindha
·        Namma Parthasarathi perumalukku oru Govindham podu : Govindha, Govindha
~ ` may be there was no written script or pattern but rhyme and more of devotion in their chant which delighted other bakthas. Perhaps in a place like Thirumala, more devotees would have joined the chorus of singing the names of Govindha !


Here is a photo of the sticks for *Uriyadi* being placed before our Emperuman Sri Parthasarathi and being blessed with strands of jasmine that adorned Him.







கிருஷ்ணஜெயந்தி நன்னாளில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தன்னை அன்புடன் அழைத்த பக்தர்கள் இல்லங்களில் எல்லாம் பிறந்து, அவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்தி, நம் இல்லங்களிலே தள்ளித்தளர்நடையிட்டு, நாம் அவருக்கு சமர்ப்பித்த "செந்நெல் அரிசி சிறுபருப்புச்செய்த அக்காரம் நறுநெய்பால்"; “கன்னலிலட்டுவத்தோடு  சீடை காரெள்ளினுண்டை”; “அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம்  பாலில் கலந்த சிற்றுண்டிகள்”;  “நாவற்பழம்  முதலான பழங்கள்ஆகிய  எல்லாவற்றையும்  ஏற்றுக்கொண்டார்.  நாமும்ஆனந்தித்தோம்.




இப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான், மறுநாள்காலை –   'காளிங்க நர்த்தனனாய்" திருக்கோலம் பூண்ட கண்ணன் தாள்பணிந்தோரை எல்லாம் தயவுடன் காப்பவன், பாலகண்ணனாக சேஷவாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள், கண்ணனுக்கு வெண்ணை சமர்ப்பிக்கின்றனர். மாலை ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள் புன்னைகிளை வாஹனத்தில்  எழுந்து  அருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில் 'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்தமாமாயன்' – புன்னைகிளைவாஹனத்தில், கூடவே பாலகண்ணனும் எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார்.

திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாககொண்டாடுவர்.  சில இடங்களில் 'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரி.  தமிழில், உரி என்கிற வினைசொல்லுக்கு, தோலைநீக்கு' அல்லது ஒருமுகத்தல் அலகுஎன்றே பொருள்படும்.  உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர்  போன்றவை வைக்கும் பொருட்டு தொங்கவிடும் உறி  எனவே இது உறியடி.

நாலாயிரதிவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறிபற்றி  -முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4). “உறியை முற்றத்து  உருட்டி நின்றாடுவார்*.  அடுத்த பாசுரத்தில்  " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும் வருகிறது.   இந்த உறியடி விளையாட்டில் உயரமானகம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசுபொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்கவிடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி.  பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி  வேகமாய் உறியடி அடிக்கவருவோர்மீது பலர்அடிப்பர். இது சாட்டைஅடி போன்றுவிழும்.  புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட சிலபடங்கள் இங்கே :


அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.




Saturday, August 27, 2016

கேசவன் நம்பி பிறந்தினில் ** people celebration at Thiruvallikkeni 2016

26th Aug 2016 was Sri Jayanthi - celebrated at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at  every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were  elated.   I have posted in detail about Kannan purappadu at Thiruvallikkeni.

Here are glimpses of people during this purappadu.


Adiyen Srinivasa dhasan. 











Sri Kannan Kalinga Narthana purappadu 2016 (கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*)

26th Aug 2016 was Sri Jayanthi - celebrated at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at  every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were  elated.  The next morning there was the purappadu of Sri Krishna.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita. 


In the morning of 27th – the day after His birth, occurs purappadu of beautiful Bala Krishnan in Sesha vahanam. This Birthday purappadu enters Nagoji rao street and Yadava chathiram – traditional places where those who tendered to cows lived, much to the happiness of Sree Krishna.

ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார்  கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார். 

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன ~ என கண்ணனது பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும் அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]

When Lord Sri Krishna was born in Thirukottiyur (Periyaalwar in his bakthi refers the birth place of Vada Mathura as Thirukkotiyur !]  He sings that when Lord was born in the beautiful mansion, the occupants in unbounded joy spilled oil and turmeric power on one another, slushing the portico of Krishna’s house – such was their delight.  


திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை [27.8.2016] ஸ்ரீகிருஷ்ணர் சேஷவாஹனத்தில் புறப்பாடு  கண்டுஅருளினார்.  தள்ளித்தளர் நடையிட்டு இளம்பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்கநர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார்.  பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்துவாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்துநம்மை பாதுகாப்பார். 

"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே."  :  வடமதுரையிலே அவதவதரித்த,   மாலையணிந்த, தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு  புகலில்லை. அவன்தாள்களே சரணம்.

Here are some photos taken during this purappadu.

எம்பெருமான் திருவடிகளேசரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சார்யன் திருவடிகளேசரணம் !!!









Friday, August 26, 2016

celebrating birth of Sri Krishna ~ Sri Jayanthi 2016 : கண்ணன் பிறந்த 'ஸ்ரீஜெயந்தி'

Today on 26th Aug 2016, Sri Jayanthi is being celebrated grandly  at Thiruvarangam, Thiruvallikkeni and many other divyadesams.. ..  at  every home -  in the manner of Lord Krishna being born there  – devotees are elated.  We, the followers of the lotus feet of Sri Krishna,  paint the footsteps of little Krishna – exhibiting His walking inside our home,  do Thirumanjanam for the vigraha at home, make Him adorn new  clothes; offer Him choicest dishes made with love at home. We also offer Him variety of fruits including blue jamuns.


இன்று 'ஸ்ரீ ஜெயந்தி' என்றும் சிறப்புற கொண்டாடப்படுகிறது.  இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Partha Sarathi, Lord Krishna by volunteering to run the chariot for Arjuna attaining the name ~ (a photo of Emperuman Sri Parthasarathi taken on 15th Jan 2008) is at the end of this post.

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும்சிறு பயற்றம்பருப்பும்காய்ச்சித்திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்மணம் மிக்க நெய்யும்பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை")  எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீராமநவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா!   [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது] 

பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்துவாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்துநம்மை பாதுகாப்பார். 

Bhagwan Krishna’s birth variously known as Gokulashtami, Krishna Jayanthi and more is often referred to in the South,  as Sri Jayanthi.  There is ill-conceived a notion that ‘Jayanthi’ refers to the birth date and thereby we have no. of Jayanthis !!! -  Heard from Dr MA Venkatakrishnan, a renowned scholar in Sanskrit and Vaishnavism that ‘Jayanthi’ connotes ‘muhurtham’ – among the various muhurthams i.e., the classification of time – one occurring between ‘Ashtami closer to Navami’ and on Rohini is known as ‘Jayanthi’ and it was on this muhurtham Lord Krishna was born.  Because of the birth of Lord Krishna, this muhurtham attained special significance. As Srivaishnavaites prefix ‘Sri’ with all auspicious things associated with SrimanNarayana, it became ‘Sri Jayanthi’ – hence there cannot be any other Jayanthis – the one and only Jayanthi is that of Lord Krishna.  Just as the birth of Lord Rama is ‘Sree Rama Navami’ – that of Lord Krishna is ‘SreeJayanthi’. 

Born in this land and following Lord Sri Krishna, we are blessed to have received His upadesams ~ the most sacred ‘Bhagavad Gita’ -  also known as Gitopanishad. It is the essence of Vedic knowledge.   It is handed over to mortals by Bhagwan Sri Krishna Himself.  Here is one verse from chapter 18

Acts of sacrifice, charity and penance are not to be given up; they must be performed. Indeed, sacrifice, charity and penance purify even the great souls. The yogis should perform acts for the advancement of human society. There are many purificatory processes for advancing a human being to spiritual life.  Even  among kamya karmas, those sacrifices, charities and austerities, which are sattvika in nature, without desire for results, should be performed. Sacrifice, austerity and charity must be done, because they cause purification of the consciousness. These acts  enjoined in the Vedas should not be relinquished by the aspirant for release, but should be performed day after day until his death. Contemplation is worship.

For a Srivaishnavaite, the simplest karma is to worship Lord Krishna, fall at His golden feet, follow Him truthfully, do service to Him and to His bhagavatas.


அடியேன் ஸ்ரீனிவாசதாசன்   [ஸ்ரீ சம்பத்குமார்] 

Thursday, August 25, 2016

Celebrating birth of Lord Krishna *கண்ணன் நம் இல்லம் புகுந்தான்*


**கண்ணன் நம் இல்லம் புகுந்தான்**

கண்ணன் பிறந்த நந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லோருடைய இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம்.  நம் இல்லத்துக்கு பால கிருஷ்ணன் தளர்நடை நடந்து வருவதை வியந்து  கண்ணனின் திருப்பாதங்களை வரைந்துபூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும்,  பக்ஷணங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.


அந்த கிருட்டிண பகவான் குழந்தைகள் வடிவில் இல்லம் வந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் !! - இன்று ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் - குழந்தைகள் கண்ணன் ராதா போன்று உடை உடுத்தி வீதி வலம்  வந்து, இல்லம் புகுந்து இனிப்புகள்  தந்து - ஸ்ரீ பார்த்தசாரதியின் திருவல்லிக்கேணியை சிறப்புற செய்தனர்.