Sunday, July 31, 2016

திருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் நாள் 5. : Thiruvadipura Uthsavam day 5 : 2016


திருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் நாள் 5.

The 10 day Thiruvadipura Uthsavam of Andal is now on in all divyadesangal.  During Thiruvadipuram, on all days there is purappadu of Sri Andal in the evenings.  This year Thiruvadipuram falls on Friday, 5th Aug 2016.     Here are some photos taken during today’s purappadu.


இன்று [31.7.2016]  திருவாடிப்பூர  உத்சவத்தில் ஐந்தாம் நாள்.  திருவல்லிக்கேணியில் திருவாடிப்பூர உத்சவம் பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. வெள்ளி (ஆகஸ்ட் 5) அன்று திருவாடிப்பூர சாற்றுமுறை.


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்தி இலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.


 ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் வரும் வரிகள் இவை தொழுதுமுப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த்தொழுதேத்துகின்றேன்பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப்" -  :  காலை, சாயம், உச்சி என மூன்று காலங்களிலும் பெருமாளின் திருபாத கமலங்களிலே நல்ல மனமுள்ள மலர்களை தூவி, பெருமாளையே  ஆச்ரயித்து, அவனடிகளையே தொழும் ஆண்டாளின் பக்தி பிரமிக்க வைப்பது அல்லவாபூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கு பணி செய்து வாழ்தலே, நமக்கு எல்லா நற்பயன்களையும் தரும்.


அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்




No comments:

Post a Comment