Today, 23rd Jan 2016 is a special day for
us - Thai Pusam Sri Parthasarathi special purappadu and Embar
Satrumurai. On the occasion, Sri
Parthasarathi had periya maada veedhi purappadu in ‘Kaalinga Narthana
thirukolam’ accompanied by Sri Embar and Senai Mudalvar. For Saivaites – thai
poosam on pournami day is significant as it commemorates the birth day of
Murugan and the occasion when Parvati gave Subramanyar a spear for vanishing
the demon Soorapadman.
At Thiruvallikkeni divyadesam, traditionally on
Thaipusam day, Sri Parthasarathi visits Big Street – the long winding
Veeraghava Mudali Street – which now a days is more of a lane than a Big
street…. This is the Uthsavam where
Perumal oversees the bountiful harvest
from His field. (kadhir aruthal).
Perhaps decades ago or even centuries ago, the junction of Big Street, Pycrofts
road, might have represented the end of the locality and perhaps the area
thereafter could have been rice fields………… now it is maze of buildings in small
lanes and by-lanes where people jostle for space. There was a
pandal put up at the Junction where Perumal halted for a brief-while and
paddy was placed before the Lord, then at His feet. The rice grains so placed were distributed to
the devotees too……..
Today also marks the sarrumurai of Swami Embar and Embar also
accompanied Perumal Sri Parthasarathi.
A separate post would follow detailing Swami Embar. Here are some photos taken during the
purappadu at Thiruvallikkeni.
Senai Muthalvar
Adiyen Srinivasa dhasan.
இன்று [23.01.2016] தைப்பூசம். ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் காளிங்கன் மீது
நர்த்தனமாடும் திருகோலத்தில் பாங்குடன் புறப்பாடு கண்டு அருளினார். ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன், சேனை முதல்வரும் எழுந்து
அருளினார். இன்று எம்பார் சாற்றுமுறையும்
கூட. பெருமாளுடன் எம்பாரும் புறப்பாடு
அருளினார்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் பல
புறப்பாடுகளில் இன்று ஒரு தனி
சிறப்பு. தை பூசம் அன்று மட்டுமே, பெருமாள் கங்கை கொண்டான்
மண்டபம் தாண்டி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு என்பதே இத்தெருவின் தொன்மையான
பெயர்) எழுந்து அருள்கிறார். தை பூசம்
என்பது 'கதிர் அறுக்கும்' திருநாளாக
கொண்டாடப்படுகிறது. பெரிய தெருவும் பாரதி
சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட
பந்தலில் ஸ்ரீ பார்த்தசாரதி எழுந்து அருளியவுடன்,
நெல்மணிகள் கொண்ட ஒரு கட்டு பெருமாளுக்கு
சமர்ப்பிக்கப்பட்டு, பெருமாளின் திருவடிகளில் வைக்கப்பட்டு, பிறகு நெல் கதிர்கள்
பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. பல
வருடங்களுக்கு முன், இவ்விடம் ஊர் எல்லை ஆகவும், தாண்டிய பகுதிகள் வயல்
வரப்புகள் ஆகவும் இருந்து இருக்க வேண்டும்.
இவ்வுத்சவம், பெருமாள் தனக்கு சொந்தமான வயல்களில் அறுக்கப்பட்ட
நெற்கதிர்களின் கணக்கு பார்ப்பதாக ஐதீஹம்.
புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்
இங்கே. பெருமாளின் திருவடிகளில், நெற்கதிர்களை காணலாம்.
அடியேன் - ஸ்ரீனிவாசதாசன்.
No comments:
Post a Comment