Today
on 31st July, there was grand purappadu at Thiruvallikkeni …… Sure you
know the puranic legend of ‘Gajendramoksham [salvation of elephant Gajendra]’ ~ when Lord MahaVishnu Himself
came down to earth to protect Gajendra(elephant) from the death clutches of
Makara (Crocodile). It also offers us great learning – the
otherwise mighty elephant too could get into difficulty and in its extreme
distress the elephant after testing its power and understanding its
futility, still had the presence of mind to think of bhatki (devotion)
and gnana (spiritual knowledge) ….. the plea of elephant was immediately
answered by Lord Maha Vishnu, who came rushing in to protect His devotee
– making the earthly human beings realise that if God does so for an elephant,
He sure would protect all of us too.
Gajendra,
the King of elephants, was attacked and
caught by a crocodile and death seemed imminent. Gajendra had been
rendering service to the Lord by offering fresh, fragrant Lotus and when he
appealed to God to protect him, Maha Vishnu appeared on Garuda vahanam, saving
the devout elephant by killing the crocodile with his ‘Chakram’. It
also explains that one who falls under the divine feet of Lord [prapathi –
surrender] seeking salvation will surely be taken care of.
The
reenactment of Gajendra moksha takes place during the full moon in the month of
Aadi. At Thiruvallikkenidivyadesam, Lord Devathirajar (the
Moolavar) is giving us darshan on Garuda vahanam – “aanaiyin thuyaram theera puloornthu
sendru nindruaazhithottanai” [the one who transcended on the bird to wipe out
the trouble of elephant] in the words of ThirumangaiMannan. Today, it was
Sri Parthasarathi purappadu in Garuda vahanam. Normally all Garuda SEvais
here are in the morning [this and Garuda sevai of Sri Ranganathar exceptions].
Today
is ‘Adi Uthiradam’ too, the sarrumurai of Acharyar Aalavanthar. In our Acharya lineage starting from
SrimanNarayana, PeriyaPirattiyar, …… after Nadhamunigal, Uyyakkondar, ManakkalNambigal ~then Sri
Alavandar, a person renowned for his knowledge and wisdom exhibited right from
his early days. Alavandhar and
Nadhamunigal were born at Veeranarayanapuram – Kattumannarkoil near
Chidambaram, the place around which novel PonniyinSelvan revolves. Of his works, SthothraRathnam, Chathusloki, Sri GeetharthaSangraham, Agama
Pramanyam, MahaPurushaNirnayam are important.
Here are some photos taken at Thiruvallikkeni today during the evening
purappadu.
AdiyenSrinivasadhasan
இன்று (31.07.2015) ஆடி மாதஉத்திராடநக்ஷத்திரம்.
பௌர்ணமி கூடிய சுபநாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
சீரியநாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை – கூடவே கஜேந்திரமோக்ஷம்.
ஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரைதான். நம் ஒவ்வொரு செயலும்
மங்களம் பெறச்செய்வது, ஆசார்யஸம்பந்தம் மட்டுமே.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்துதொடங்குகிறது. பிராட்டியார்,
சேனைமுதலியார், ஸ்வாமிநம்மாழ்வார் என்னும்
வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால்
நம்பி, அடுத்ததாக யாமுனாச்சார்யர்என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார்
வித்வத்சார்வபௌமர். பூர்வாச்சார்யர்களுள் யமுனைத்துறைவரும்
(ஆளவந்தார்), ஸ்ரீபராசரபட்டரும் மிகச்சிறுவயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று
தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.
நாலாயிர திவ்யபிரபந்தம் தொகுத்து நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வரமுனிகள்.
அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே
சிறப்பு என அருளிச்செய்துள்ளார்.
நிதியைப்பொழியும் முகில் என்று* நீசர்
தம் வாசல் பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.
- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம்
தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப்
பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார். நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த
திருத்தலம், ‘காட்டுமன்னார்கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால
வீராணம்ஏரி உள்ளஇடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின்
அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜனகோலாகலர்
என்றும் ஆக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம்வயதிலேயே
இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால்நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு
அழைத்துச்சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம்
என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போகவாழ்க்கையை அக்கணமே துறந்து
துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒருசமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன
இராமானுஜரைக்கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து
பின்பு பெரியநம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.
ஆளவந்தார் அருளிச்செய்தநூல்கள்
" எட்டு "" - இவற்றுள்
ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம்,
மகாபுருஷநிர்ணயம் இவை முக்கியமானவை.
In
1971 London educated R NatarajaMudaliar produced and directed the first
silent feature film in Tamil called ‘Keechakavadham’ ……….. he also made DraupadiVasthrabaharanam,
MayilRavana, Lavakusa and KalingaMardanam. The other early pioneer A
Narayanan made “GajendraMoksham” in 1930.
Adiyen
Srinivasa dhasan.